Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு »

டூ மதர்ஸ் இயக்குநரின் பேட்டி - கோவா படவிழா ஸ்பெஷல்!!

29 நவ, 2013 - 15:31 IST
எழுத்தின் அளவு:

இந்தாண்டு கோவா சர்வதேச திரைப்பட விழாவில் டூ மதர்ஸ் என்ற சர்ச்சைக்குரிய படம் திரையிடப்பட்டது. ஓரின சேர்க்கையில் ஈடுபடும் இரு பெண்களை பற்றி படம் இது. அன்னா ஸோரா பெர்ராச்செட் என்ற பெண் இயக்குநர் இப்படத்தை இயக்கி இருந்தார். விழாவில் பங்கேற்ற அவர் அளித்த பேட்டி இதோ...

* திரைப்பட கலையை எங்கு படித்தீர்கள்...?

ஜெர்மனியின் மிகச் சிறந்த பல்கலைக்கழகமாகன உவெர்ட்டன்பெர்க் பல்கலைக்கழகத்தில், திரைப்பட அகடாமியில் பிலிம் டைரக்ஷ்ன் பயின்றேன். பல ஆயிரக்கணக்கான பேர் இந்த படிப்பிற்கு ஆண்டுதோறும் விண்ணம் செய்கின்றனர். ஆனால் ஒரு ஆண்டுக்கு ஏழு மாணவ, மாணவியரை மட்டும் தான் சேர்த்து கொள்வார்கள்.

* டூ மதர்ஸ் படத்தின் மைய கருத்து என்ன...?

இரண்டு ஜெர்மனிய இளம் பெண்கள் ஓரின சேர்க்கையில் ஈடுபடுகிறார்கள். அவர்களுக்கு குழந்தை பெற்றுக் கொள்ள ஆசை. அதனால் ஒரு ஆணை வீட்டுக்கு வரவழைத்து அவர் மூலம் விந்துவை பெற்று, குழந்தை பெற எண்ணுகிறார்கள். ஆனால் அது சுகாதார முறை அல்ல என்பதுடன் ஆபத்தானதும் கூட. பலவழிகளில் முயற்சி செய்கிறார்கள் தங்கள் முயற்சியில் வெற்றி பெற 6 வருடங்கள் ஆகிறது.

* ஓரினசேர்க்கையாளர்களை எங்கு சந்திதீர்கள்...?


மூன்று ஜோடிகளை மாறுபட்ட இடங்களில் சந்தித்து அவர்களுடைய அனுபவங்களை கேட்டு டூ மதர்ஸ் என்ற கதையை அமைத்தேன். மேலும் ஓரினசேர்க்கையாளர்களை பற்றி தீவிர ஆராய்ச்சியும் செய்தேன்.படத்தில் நான் உண்மையாகவே விந்து தானம் செய்தவர்களையே காண்பித்துள்ளேன்.

* இந்தப்படம் தயாரிக்க பணம்...?

படம் எடுக்க ஆன செலவில் பாதியை நான் என் சொந்த முயற்சியில் திரட்ட வேண்டியதாயிற்று. பல்கலையில் இது என் கடைசி பிராஜெக்ட் என்பதால் அவர்கள் மீதியை கொடுத்து உதவினார்கள். தொடர்ந்து பல டி.வி., சினிமா விநியோகஸ்தர்கள் என பலரும் பணம் கொடுத்து உதவினார்கள்.

* இதுதான் உங்கள் முதல் நீள திரைப்படமா...?


டூ மதர்ஸ் தான் என்னுடைய முதல் நீளமான திரைப்படம். முதலில் பெர்லின் திரைப்பட விழாவில் திரையிட்டனர். ஜெர்மன் சினிமா என்ற பிரிவில் சிறந்த டைரக்டர் விருது எனக்கு கிடைத்தது. பெர்லின் திரைப்பட விழாவிற்கு பிறகு ஜெர்மனி முழுவதும் சினிமா தியேட்டர்களில் ரிலீஸ் செய்தோம். தொடர்ந்து டி.வி., டி.வி.டிக்களிலும் ரிலீஸ் செய்தோம். நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

* எதிர்கால திட்டங்கள்...?

டூ மதர்ஸ் வெற்றி பெற்றுவிட்டதால் இனி என் படங்களுக்கு பணம் கிடைப்பதில் எந்த சிரமும் இல்லை. ஒரு சில திட்டங்களை பரிசீலனை செய்து வருகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.


- கோவாவிலிருந்து எஸ்.ரஜத் -


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in