Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மீண்டும் வருகிறார் ராமராஜன்

29 நவ, 2013 - 14:09 IST
எழுத்தின் அளவு:

ஒரு காலத்தில் வெள்ளி விழா நாயகனும், 15 வருடத்திற்கு முன்பே படத்துக்கு ஒரு கோடி சம்பளம் வாங்கிய ஹீரோவுமான ராமராஜனுக்கு திடீர் மார்க்கெட் சரிவு ஏற்பட்டதும். அரசியலுக்கு சென்று விட்டார். இடையில் பல படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தபோதும் நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று சொல்லி வாய்ப்புகளை மறுத்து விட்டார். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மேதை என்ற படத்தில் ரீ என்ட்ரி ஆனார். அந்த படமும் சரியாக போகாததால் சினிமாவை விட்டு விலகி இருந்தார். இடையில் ஒரு விபத்தில் சிக்கி உயிர் பிழைத்து வந்தார்.

ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு இப்போது மீண்டும் நடிக்க வருகிறார். படத்தின் பெயர் கும்பாபிஷேகம். அவருக்கு ஜோடியாக நூர்யா என்ற புதுமுகம் நடிக்கிறார். மற்ற நடிகர்கள் செலக்ஷன் நடந்து வருகிறது. ஆனந்த் கேமராமேன், சௌந்தாயன் இசை. புஷ்பராஜ் கே.எம். என்பவர் டைரக்ட் செய்கிறார்.

"ராமராஜனுக்கு பொருத்தமான கிராமத்து கதை. இன்றைய கிராமங்களின் பிரதிபலிப்பா இருக்கும். கிராமத்து பஞ்சாயத்து தலைவராக ராமராஜன் நடிக்கிறார். கிருஷ்ணகிரி, காவேரிபட்டினம் பகுதிகளில் ஷூட்டிங் நடக்கிறது. அடுத்த மாதம் 9ந் தேதி ஷூட்டிங் ஆரம்பிக்கிறோம்" என்கிறார் டைரக்டர் புஷ்பராஜ்.

Advertisement
கருத்துகள் (31) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (31)

Vasudevan Srinivasan - Chennai,இந்தியா
01 டிச, 2013 - 21:22 Report Abuse
Vasudevan Srinivasan மக்கள் நாயகன் ராமராஜன் மீண்டும் வருவது மகிழ்ச்சியே.. அதே சமயம் உங்களின் வெற்றிக்கு மிக முக்கிய பக்கபலம் இசைஞானி இளையராஜா அவர்கள்தான் எனவே ராஜசாரை மறக்காமல் இணைத்துகொள்ளுங்கள் வெற்றி மீண்டும் வரும்..
Rate this:
mohan man - singapore,சிங்கப்பூர்
30 நவ, 2013 - 12:04 Report Abuse
mohan man அஜித் பொழப்புல கைய வச்சுரதிங்க....
Rate this:
டோப்பா மாமா கனகன் - கீழ்பாக்கம்,சென்னை-600010,இந்தியா
01 டிச, 2013 - 13:21Report Abuse
 டோப்பா மாமா கனகன்ராமராஜன் ஹீரோ..தளபதி விஜய் காமடியன்.இப்ப சரியா?...
Rate this:
ramalingam - Singapore  ( Posted via: Dinamalar Android App )
30 நவ, 2013 - 11:15 Report Abuse
ramalingam ramaraja is back. we are waiting
Rate this:
Ziya - kuwait  ( Posted via: Dinamalar Android App )
30 நவ, 2013 - 02:13 Report Abuse
Ziya Super Thala
Rate this:
seran - chidambaram,இந்தியா
29 நவ, 2013 - 22:55 Report Abuse
seran இளைய ராஜா இசையிருந்தால் யார் படமாக இருந்தாலும் ஹிட் தான்
Rate this:
மேலும் 25 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in