Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

டாப்சிக்கு கைகொடுக்காத ஆரம்பம்!

29 நவ, 2013 - 12:36 IST
எழுத்தின் அளவு:

அஜீத்தின் ஆரம்பம் படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடிக்க டாப்சியிடம் கேட்டபோது, அதே படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக நயன்தாரா கமிட்டாகியிருக்கிறார் என்றதும் தயங்கினார். ஆனால், அப்பட டைரக்டரான விஷ்ணுவர்தன், நயன்தாரா இருப்பதை நினைத்து பயப்பட வேண்டாம். காரணம், இப்படத்தில் உங்கள் இரண்டு பேருக்குமே சமஅளவிலான வேடங்கள்தான் என்று சொல்லி அவரை ஓ.கே பண்ணினார்.

ஆனால், ஆரம்பம் படத்தில் நயன்தாராவை விட சிறிய வேடத்தில், ஒரு கேரக்டர் ஆர்ட்டிஸ்ட் போலதான் டாப்சி நடித்திருந்தார். அதன்காரணமாக, ஆரம்பம் தனது மார்க்கெட் உயர்த்தும் என்று எதிர்பார்த்திருநத டாப்சிக்கு பெருத்த ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது. அதனால், அதை காரணம் காட்டி அவருக்கு கதாநாயகி வேடம் தர இயக்குனர்கள் தயங்குகிறார்களாம்.

அதனால், நயன்தாரா நடித்த படத்தில் தானும் நடித்தது எவ்வளவு பெரிய தவறு என்று இப்போது புலம்பி வரும் டாப்சி, அடுத்து லாரன்ஸ் இயக்கும் கங்கா படத்தில் மட்டுமே நடித்து வருகிறார். இந்த படத்தில் இன்னொரு ஹீரோயினாக அஞ்சலி இருப்பதால், இதுவும் ஆரம்பம் கதையாகி விடுமோ என்கிற அச்சமும் டாப்சியை கலங்க வைக்கிறதாம்.

அதனால், இந்தியே வேண்டாம், தென்னிந்திய மொழிகளில் நடித்து ஆளாகலாம் என்று நினைத்து அங்கிருந்து வந்த டாப்சி, இப்போது மறுபடியும் பாலிவுட் கோதாவில் குதித்திருக்கிறார். ரன்னிங் ஷாதி டாட்காம் என்றொரு படத்தில் இதுவரை நடித்ததை விட அதிரடி கவர்ச்சி புயலாக அப்படத்தில் உருவெடுத்து நிற்கிறாராம் டாப்சி.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

thirukumaran.a - villupuram,இந்தியா
29 நவ, 2013 - 18:38 Report Abuse
thirukumaran.a அஜித் படத்துல நடிச்சா இப்படி தான்
Rate this:
கனகராஜ் சு - திருவள்ளூர் ,இந்தியா
29 நவ, 2013 - 18:03 Report Abuse
கனகராஜ் சு உள்ளதும் போச்சி நொள்ள கண்ணா என்ற கதையாகிவிட போகிறது
Rate this:
Angry ஜெய் - Srivilliputtur,இந்தியா
29 நவ, 2013 - 16:09 Report Abuse
Angry ஜெய் எங்க தல படத்துல தல மட்டும் தான் ஆடுவாரு , மத்தவங்க ஓடுங்க
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in