பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
களவாணி ஓவியா, தற்போது நடித்துள்ள, மதயானை கூட்டம் படத்தை,ரொம்பவே
எதிர்பார்க்கிறார். இந்த படத்தில் நடித்தது பற்றி, ஓவியா கூறுகையில், இந்த படம், மதுரை
வட்டார பின்னணியில் உருவாகியுள்ளது. நான் கேரளத்து பெண்ணாக நடித்துள்ளேன். ஏற்கனவே நான் கேரளத்து பெண் என்பதால், ரொம்ப இயல்பாக நடித்துள்ளேன். மேலும், முதன் முறையாக இப்படத்தில் எனக்கு நானே டப்பிங்கும் பேசியுள்ளேன். எனது தமிழ், மலையாள வாசனையுடன் தான் இருக்கும். அதனால், மலையாளம் கலந்து பேசினால் தான், இந்த கேரக்டருக்கு பொருத்தமாக இருக்கும் என்று, என்னையே டப்பிங் பேச வைத்தனர் என்கிறார், ஓவியா. தற்போது கோலிவுட்டில் பின்தங்கியிருக்கும், என் மார்க்கெட்டை இப்படம் மீண்டும் உயர்த்தும் என்றும், நம்பிக்கையுடன் கூறுகிறார், ஓவியா.