Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கமலுடன் மீண்டும் ஜோடி சேரும் ஸ்ரீதேவி?

29 நவ, 2013 - 00:00 IST
எழுத்தின் அளவு:

16 வயதினிலே படத்தில் சப்பாணி - மயிலாக ஜோடி சேர்ந்த கமல் - ஸ்ரீதேவி இருவரும் அதை தொடர்ந்து சிறந்த ஜோடியாக தமிழ் சினிமாவில் வலம் வந்தனர். ஆனால், ஸ்ரீதேவி இந்திக்கு சென்ற பின் அவர்கள் இணைந்து நடிக்கவில்லை. இந்நிலையில், 16 ஆண்டுகளுக்கு பின், இங்கிலீஷ் விங்கிலீஷ் படம் மூலம் சினிமாவில் ரீ-என்ட்ரி ஆகியிருக்கும் ஸ்ரீதேவி, தன் மாஜி ஹீரோக்களுடன் மீண்டும் நடிக்க ஆர்வமாக உள்ளதாகவும் கூறி வந்தார்.
இதையடுத்து, மீண்டும் அவர் கமலுடன் நடிப்பதற்கு சூழ்நிலை உருவாகியிருப்பதாக
செய்திகள் வெளியாகியுள்ளன. மணிரத்னம் இயக்கத்தில், கமல் நடித்த நாயகன் படத்தின், இரண்டாம் பாகம் உருவாகிறதாம். அப்பா - மகன் என,கமல் இரண்டு வேடங்களில் நடிக்கும் இப்படத்தில், அப்பா கமலுக்கு ஜோடியாக, ஸ்ரீதேவி நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

Vasudevan Srinivasan - Chennai,இந்தியா
01 டிச, 2013 - 21:32 Report Abuse
Vasudevan Srinivasan இந்த செய்தி எந்த அளவுக்கு உண்மையோ... மணிரத்தினம் சாரின் ரோஜா மற்றும் பம்பாய் படம் தவிர எந்த படமும் சொல்லும் அளவு வெற்றி பெறவில்லை ஏ. ஆர். ரஹ்மான் அவர்களை நீங்கள் தூக்கிவிட்டீர்கள் ஆனால் உங்களை தூக்கிவிட்டவர் இசைஞானி இளையராஜா அவர்களே பகல் நிலவு (பூமாலையே தோள்சேரவா), இதயக் கோவில் (அனைத்து பாடல்களும்), நாயகன் (அனைத்து பாடல்களும் மற்றும் தீம் மியூசிக்கும்), மௌன ராகம் (அனைத்து பாடல்களும் தீம் மியூசிக்கும்), அக்னி நட்சத்திரம் (அனைத்து பாடல்களும்) இன்றும் உலகெங்கும் ஒலித்துக்கொண்டிருப்பதோடு பல தொலைக் காட்சிகளிலும் ஒளிவீசிக்கொண்டிருக்கிறது.. மீண்டும் இளையராஜாவுடன் இனைந்து பணியாற்றினால் விட்ட இதத்தை பிடிக்கலாம் இல்லையென்றால் விட்டத்தை பார்க்கலாம்..
Rate this:
Shanmuganathamuthaliar Sasikaramuthaliar - scarborough,கனடா
30 நவ, 2013 - 06:03 Report Abuse
Shanmuganathamuthaliar Sasikaramuthaliar வயது ஆண்களுக்குத் தோற்றாது, பெண்களுக்கு தோற்றும், ஆனால், பெண்களுக்குச் சொன்னால் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். அந்த ரீயக்சன் இரசிகர்களைத் தான் வாட்டியெடுக்கும். "பார்க்கோனுமென்ர தலைவிதிங்க".
Rate this:
கனகராஜ் சு - திருவள்ளூர் ,இந்தியா
29 நவ, 2013 - 18:21 Report Abuse
கனகராஜ் சு நாயகன் 2 வில் சீனியர் கமலுக்கு ஜோடியாக ஸ்ரீதேவிக்கு வாய்ப்பு அதிகமாக இருக்காதே
Rate this:
Ari Munusamy - Muar, Malaysia.  ( Posted via: Dinamalar Android App )
29 நவ, 2013 - 11:54 Report Abuse
Ari Munusamy Great news. We saw them acting in youngwe roles. Now we wait patiently to see the chemistry imbued with maturity.
Rate this:
yuvi - chennai  ( Posted via: Dinamalar Windows App )
29 நவ, 2013 - 01:08 Report Abuse
yuvi again nayagan wow grt good news..
Rate this:
Gopi - Chennai,இந்தியா
29 நவ, 2013 - 12:34Report Abuse
Gopiஆனா bgm ar ரெஹ்மான் தான்...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in