Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கோவா திரைப்பட விழாவில் தங்க மீன்களுக்கு பலத்த வரவேற்பு

27 நவ, 2013 - 14:27 IST
எழுத்தின் அளவு:

கோவாவில் தற்போது சர்வதேச திரைப்பட விழா நடந்து வருகிறது. வருகிற 30ந் தேதி வரை நடக்கிறது. இதில் தமிழ் நாட்டில் இருந்து ராம் இயக்கிய தங்க மீன்கள் படம் மட்டுமே திரையிட தேர்வாகியிருந்தது. நேற்று (நவம்பர் 26) கோவாவில் உள்ள ஐநாக்ஸ் தியேட்டரில் தங்க மீன்கள் திரையிடப்பட்டது. உலக நாடுகள் பலவற்றிலும் இருந்து வந்திருந்த சினிமா உலகைச் சேர்ந்தவர்கள் படத்தை பார்த்தனர். ஆங்கில சப் டைட்டிலுடன் திரையிடப்பட்டது. படம் முடிந்ததும் அனைவரும் எழுந்து நின்று 5 நிமிடங்கள் கைதட்டினர். ராமை கைகுலுக்கியும், கட்டித் தழுவியும் பாராட்டினர். அவருடன் சென்றிருந்த நடிகை பத்மப்ரியா, ஷெல்லி, தயாரிப்பாளர் சதீஷ்குமார் ஆகியோரையும் பாராட்டினர். கடைசியாக ராம் பேசினார்.

தமிழ் நாட்டில் தந்தைக்கும் மகளுக்குமான உறவு எத்தகையது என்பதை உருக்கத்துடன் பேசினார். "மகள்களை பெற்ற தந்தைக்கு தெரியும் முத்தம் காமத்தை சார்ந்தது அல்ல" என்ற வாக்கியத்தை ஆங்கிலத்திலும், தமிழிலும் அவர் சொன்னபோது அரங்கத்தில் இருந்தவர்கள் மீண்டும் எழுந்து நின்று கைதட்டினார்கள். உணர்ச்சி பெருக்கில் ராம் கண்கலங்கினார். படம் மீண்டும் 29ந் தேதியும் திரையிடப்படுகிறது.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

Karam chand Gandhi - Auroville,இந்தியா
28 நவ, 2013 - 19:38 Report Abuse
Karam chand Gandhi எல்லோரும் தியேட்டரில் போய் படம் பார்த்து ஆதரவு கொடுத்தால்தான் அவர் தொடர்ந்து நல்ல படங்கள் எடுக்க முடியும். அதரவு கொடுங்கள்.
Rate this:
PETCHIMUTHU - MADURAI,இந்தியா
28 நவ, 2013 - 16:32 Report Abuse
PETCHIMUTHU மிக நல்ல படம்.போன வாரம் பார்த்தேன்.facebook இல் கூட நான் status போட்டிருந்தேன்.நல்ல படங்களை மக்கள் ஏன் வெற்றி அடைய செய்வதில்லை என்று கேட்டிருந்தேன்.
Rate this:
Jothi - PUDUCHERRY,இந்தியா
27 நவ, 2013 - 18:57 Report Abuse
Jothi ராம் இது தான் நாங்கள் எதிர்பார்த்தது.....வேண்டும் இது போல நிறைய மனதை வருடும் படங்கள் இல்லை இல்லை பாடங்கள்
Rate this:
கனகராஜ் சு - திருவள்ளூர் ,இந்தியா
27 நவ, 2013 - 18:01 Report Abuse
கனகராஜ் சு ராம் மேலும் இதுபோன்ற தரமான உறவுகளின் கதைகளை படமாக்கி ரசிகர்களுக்கு விருந்தளிக்க வேண்டும்
Rate this:
ramesh bindu - chennai,இந்தியா
27 நவ, 2013 - 16:38 Report Abuse
ramesh bindu தமிழ் பட உலகின் தரமான இயக்குனர்களில் ஒருவர் ஆகிவிடீர்கள் ராம்.. வாழ்த்துக்கள்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in