Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஒரே படம் ஓகோன்னு வாழ்க்கை: தமிழ் சினிமாவில் வாரிசுகளின் பலம்!!

22 நவ, 2013 - 14:31 IST
எழுத்தின் அளவு:

தமிழ் சினிமாவில் முன்னணி சினிமா குடும்பத்திலிருந்து வருகிறவர்கள் எவ்வளவு செல்வாக்கோடு இருப்பார்கள் என்பதற்கு சூர்யா, கார்த்தி, விஜய் ஆகியோர் உதாரணமாக இருந்தாலும் இவர்கள் ஆரம்பத்தில் வாரிசு அடையாளத்தோடு அறிமுகமாகி கடுமையாக உழைத்தே தங்கள் இடத்தை பிடித்தார்கள்.

ஆனால் அன்னை இல்லத்தில் இருந்து வந்திருக்கும் பிரபுவின் மகன் விக்ரம் பிரபு, கார்த்திக் மகன் கவுதம் ஆகியோரின் வாரிசு பலத்தை கண்டு சினிமா வட்டாரமே ஆச்சர்யத்தில் திகைக்கிறது.

விக்ரம் பிரபு கும்கி படத்தில் அறிமுகமானார். கஷ்டப்பட்டு நடித்தார் படமும் வெற்றி பெற்றது. அதை தொடர்ந்து இப்போது எங்கேயும் எப்போதும் சரவணன் டைரக்ஷனில் இவன் வேற மாதிரி படத்தில் நடிக்கிறார். லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சுரபி ஹீரோயின். அடுத்து யுடிவி தயாரிக்கும் சிகரம் தொடு படத்தில் நடிக்கிறார். தூங்கா நகரம் டைரக்ட் பண்ணிய கவுரவ் இதனை டைரக்ட் செய்கிறார். மோனல் கஜ்ஜார் ஹீரோயின். அடுத்து அரிமா நம்பி. கலைப்புலி தாணு தயாரிப்பில் ஆனந்த் சங்கர் டைரக்ட் பண்ணுகிறார். பிரியா ஆனந்த் ஜோடி. அடுத்த படத்தை விக்ரம்பிரபுதான் ஒத்துக் கொள்ளவில்லை. அட்வான்ஸ் கொடுப்பதற்கே ஆறேழு தயாரிப்பாளர்கள் வரிசையில் நிற்கிறார்கள்.

விக்ரம் பிரபுவாவது பரவாயில்லை ஒரு ஹிட் கொடுத்தார். ஆனால் கார்த்திக் மகன் கவுதமிற்கோ முதல் படம் கடல் ஃபிளாப். ஆனாலும் அவருக்கு திரும்பிய பக்கமெல்லாம் வாய்ப்புகள் குவியுது. சரவணன் என்பவர் இயக்கும் சிப்பாய் படத்தில் நடிக்கிறார். ராசி நடிகை லட்சுமி மேனன் ஹீரோயின். ரவி பிரசாத் ஸ்டூடியோ தயாரிக்க ரவி தியாகராஜன் இயக்கும் என்னமோ ஏதோ படத்தில் நடிக்கிறார். நிகிஷா படேல், ரகுல் ப்ரீத்தி என இரண்டு ஜோடிகள். ரஜினி மகள் ஐஸ்வர்யா தனுஷ் இயக்கும் வை ராஜா வை படத்தில் நடித்து வருகிறார். ப்ரியா ஆனந்த் ஜோடி. இதுதவிர உதயம் என் எச் 4 படத்தை இயக்கிய மணிமாறன் இயக்கும் நானும் ரவுடிதான் படத்தில் நடிக்கவும் கமிட் ஆகியிருக்கிறார். இன்னும் பல தயாரிப்பு நிறுவனங்கள் கவுதம் கால்ஷீட்டுக்காக காத்திருக்கின்றன.

வாரிசு என்ற பலம் இவர்களுக்கு வாய்ப்புகளை அள்ளிக் கொடுத்தாலும் அடுத்தடுத்து வெளியாகும் படங்களில் இவர்கள் வெளிப்படுத்தியிருக்கும் திறமைதான் அவர்களின் எதிர்காலத்தை தீர்மானிப்பவையாக இருக்கும்.

Advertisement
கருத்துகள் (13) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (13)

கனகராஜ் சு - திருவள்ளூர் ,இந்தியா
24 நவ, 2013 - 17:02 Report Abuse
கனகராஜ் சு அவரவர் சொந்த திறமையால் வெற்றிபெற வாழ்த்துக்கள்
Rate this:
Vasudevan Srinivasan - Chennai,இந்தியா
23 நவ, 2013 - 15:32 Report Abuse
Vasudevan Srinivasan இருவரும் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நல்ல பெயர் வாங்கி பெற்றவர்களுக்கு பெருமை தரட்டும்.. வாழ்த்துவோம்..
Rate this:
vishwa - salem  ( Posted via: Dinamalar Android App )
23 நவ, 2013 - 06:56 Report Abuse
vishwa நடிகர்களுக்காக சண்டை போடும் ரசிகர்கள் இருக்கும் வரை நடிகர்கள் சொகுசாக தான் இருப்பார்கள்
Rate this:
Chu Mari - London,யுனைடெட் கிங்டம்
22 நவ, 2013 - 22:17 Report Abuse
Chu Mari இவர்கள் கலை சேவை தொடர வாழ்த்துக்கள்..
Rate this:
Angry ஜெய் - Srivilliputtur,இந்தியா
22 நவ, 2013 - 21:54 Report Abuse
Angry ஜெய் திறமையில்லாத அதிர்ஷ்டசாலிகள் , கும்கி படம் நியூஸ் கேள்விபட்டதும் , பிரபு மகன் டைரக்டரை போயி பாத்து நானே நடிக்குறேன் என சொல்லி வாங்கிய படம் தான் அது , கார்த்திக் மகன் தேற மாட்டான்
Rate this:
raja - aberdeen,யுனைடெட் கிங்டம்
23 நவ, 2013 - 02:46Report Abuse
rajaneenga theridingala boss.., don't comment on others talent..first look at your self.....
Rate this:
மேலும் 7 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in