பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
உயிர், சிந்து சமவெளி என வில்லங்க படங்களை டைரக்ட் செய்த சாமி இப்போது கங்காரு என்ற படத்தை டைரக்ட் செய்து கொண்டிருக்கிறார். வி.ஹவுஸ் புரொடக்ஷ்ன் சார்பில் சுரேஷ் காமாட்சி என்பவர் தயாரிக்கிறார். பர்ஸ்ட் காப்பி அடிப்படையில் படத்தை தயாரித்து கொடுக்கும் பொறுப்பை சாமி ஏற்றுக் கொண்டிருந்தார். அதற்கு தயாரிப்பாளரும் ஒப்புக் கொண்டிருந்தார்.
கொடைக்கானல் மலை கிராமம் ஒன்றில் செட் அமைத்து படப்பிடிப்பை தொடங்கினர். ஆனால் ஒப்புக்கொண்ட பட்ஜெட்டுக்குள் சாமி படத்தை முடிக்கவில்லை. இதனால் தயாரிப்பாளர் தனது சங்கத்தில் புகார் செய்தார். திடீர் மழையால் செட்டுகள் வீணாகிவிட்டது. படப்பிடிப்பு நாட்கள் அதிகமாகிவிட்டது. அதனால் சொன்ன பட்ஜெட்டுக்குள் படத்தை முடிக்கமுடியவில்லை என்று சாமி விளக்கம் அளித்துள்ளார். இதைத் தொடர்ந்து இருதரப்பையும் அழைத்த பேசிய தயாரிப்பளர் சங்கம். இருவரும் ஒப்புக்கொள்ளும் ஒரு தீர்வை சொல்லி விட்டனர்.
இதனால் மீண்டும் கொடைக்கானலில் படப்பிடிப்பை தொடங்கி விட்டனர். 10 நாட்களுக்குள் ஷூட்டிங்கை முடிக்க திட்டமிட்டுள்ளனர். ஜனவரியில் படத்தை ரிலீஸ் செய்யும் பிளானில் இருக்கிறார்கள்.