'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி போன்ற காதல் படங்களையும் புதுப்பேட்டை என்ற ஆக்ஷ்ன் கலந்த ரவுடி கதையையும், ஆயிரத்தில் ஒருவன் என்ற சோழர் காலத்து கற்பனை கதையையும் கொடுத்த இயக்குநர் செல்வராகவன், இப்போது முற்றிலும் வித்தியாசமாக இரண்டாம் உலகம் எனும் படத்தையும் இயக்கியுள்ளார். இப்படம் இன்னும் சில தினங்களில் வெளியாக இருக்கிறது. இதுப்பற்றி அவர் அளித்த சிறப்பு பேட்டி இதோ...
* உங்கள் ஸ்டைலை தாண்டி, வேறு மாதிரியான படங்கள் செய்யும் எண்ணம் இல்லையா?
எந்த மாதிரியான படம் செய்யணும்னு, நீங்களே சொல்லுங்க. அதே மாதிரி, நான் செய்றேன். எனக்கான எந்த பார்முலாவும் இல்லாமல், கடைசி வரை, நல்ல படங்களா கொடுக்கணும்னு தான் ஆசைப்படுறேன்.
* இரண்டாம் உலகம் படத்திற்கு, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார், இப்போது அனிருத்தும் சேர்ந்திருக்காரே?
ஹாரிஸ் ஜெயராஜ் தான் இசையமைத்திருந்தார். தயாரிப்பாளர் கொடுத்த காலக்கெடுவில், படத்தை முடிக்க வேண்டிய காலம் ரொம்ப குறைவா இருந்தது. அதனால், அனிருத் உள்ளே வந்து படத்தை முடிக்க உதவினார். படத்தில், மூன்று சிறிய பாடல்களை கொடுத்திருக்கார்.
* இதுவரை சொல்லாத விஷயங்கள், ஏதாவது, இந்த படத்தில் உள்ளதா?
இதுவரை நான் இயக்கிய படங்களில், கடவுள் பற்றி சொன்னதில்லை. இந்த படத்தில் சொல்லியிருக்கேன்.
* இரண்டாம் உலகம் படத்தில் என்ன சொல்லப் போறீங்க?
காதல், காதல், காதல், காதலை தவிர வேறு எதுவுமில்லை. உண்மையான காதல் புரிந்தவர்கள், திரையரங்குகளில் படம் பார்த்து விட்டு, வெளியில் வரும்போது, சந்தோஷமான ஒரு உணர்வோட வருவாங்க.
* நீங்க இதுவரை இயக்கிய படங்களில், இதுமாதிரி மற்றொரு படம் செய்யக்கூடாதுன்னு சொல்ற மாதிரி உங்க படம் ஏதும் இருக்கா?
நான் பண்ண எல்லா படங்களும் தான்; முதல் படத்தில் இருந்து வச்சிக்கங்களேன்.
* தமிழ் இயக்குனர்களில் நீங்க வியந்து பார்க்கும் இயக்குனர் யார்?
மணிரத்னம்.
* உங்க தம்பி தனுஷை வைத்து, அடுத்து எப்போ படம் இயக்க போறீங்க?
கொஞ்சம் டைம் ஆகும். ஏற்கனவே ஒத்துக் கொண்ட படங்களை முடிக்கவே கொஞ்ச ஆண்டு தேவைப்படுதே; பார்க்கலாம்.