Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

காதல், காதல், காதலை தவிர வேறு எதுவுமில்லை : செல்வராகவன்

18 நவ, 2013 - 00:38 IST
எழுத்தின் அளவு:

காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி போன்ற காதல் படங்களையும் புதுப்பேட்டை என்ற ஆக்ஷ்ன் கலந்த ரவுடி கதையையும், ஆயிரத்தில் ஒருவன் என்ற சோழர் காலத்து கற்பனை கதையையும் கொடுத்த இயக்குநர் செல்வராகவன், இப்போது முற்றிலும் வித்தியாசமாக இரண்டாம் உலகம் எனும் படத்தையும் இயக்கியுள்ளார். இப்படம் இன்னும் சில தினங்களில் வெளியாக இருக்கிறது. இதுப்பற்றி அவர் அளித்த சிறப்பு பேட்டி இதோ...

* உங்கள் ஸ்டைலை தாண்டி, வேறு மாதிரியான படங்கள் செய்யும் எண்ணம் இல்லையா?

எந்த மாதிரியான படம் செய்யணும்னு, நீங்களே சொல்லுங்க. அதே மாதிரி, நான் செய்றேன். எனக்கான எந்த பார்முலாவும் இல்லாமல், கடைசி வரை, நல்ல படங்களா கொடுக்கணும்னு தான் ஆசைப்படுறேன்.

* இரண்டாம் உலகம் படத்திற்கு, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார், இப்போது அனிருத்தும் சேர்ந்திருக்காரே?

ஹாரிஸ் ஜெயராஜ் தான் இசையமைத்திருந்தார். தயாரிப்பாளர் கொடுத்த காலக்கெடுவில், படத்தை முடிக்க வேண்டிய காலம் ரொம்ப குறைவா இருந்தது. அதனால், அனிருத் உள்ளே வந்து படத்தை முடிக்க உதவினார். படத்தில், மூன்று சிறிய பாடல்களை கொடுத்திருக்கார்.

* இதுவரை சொல்லாத விஷயங்கள், ஏதாவது, இந்த படத்தில் உள்ளதா?

இதுவரை நான் இயக்கிய படங்களில், கடவுள் பற்றி சொன்னதில்லை. இந்த படத்தில் சொல்லியிருக்கேன்.

* இரண்டாம் உலகம் படத்தில் என்ன சொல்லப் போறீங்க?

காதல், காதல், காதல், காதலை தவிர வேறு எதுவுமில்லை. உண்மையான காதல் புரிந்தவர்கள், திரையரங்குகளில் படம் பார்த்து விட்டு, வெளியில் வரும்போது, சந்தோஷமான ஒரு உணர்வோட வருவாங்க.

* நீங்க இதுவரை இயக்கிய படங்களில், இதுமாதிரி மற்றொரு படம் செய்யக்கூடாதுன்னு சொல்ற மாதிரி உங்க படம் ஏதும் இருக்கா?

நான் பண்ண எல்லா படங்களும் தான்; முதல் படத்தில் இருந்து வச்சிக்கங்களேன்.

* தமிழ் இயக்குனர்களில் நீங்க வியந்து பார்க்கும் இயக்குனர் யார்?

மணிரத்னம்.

* உங்க தம்பி தனுஷை வைத்து, அடுத்து எப்போ படம் இயக்க போறீங்க?

கொஞ்சம் டைம் ஆகும். ஏற்கனவே ஒத்துக் கொண்ட படங்களை முடிக்கவே கொஞ்ச ஆண்டு தேவைப்படுதே; பார்க்கலாம்.

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

K.Sugavanam - Sengkang,சிங்கப்பூர்
18 நவ, 2013 - 13:25 Report Abuse
K.Sugavanam பாவம் சினிமா பார்ப்பவர்கள்..
Rate this:
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
20 நவ, 2013 - 10:41Report Abuse
சு கனகராஜ் கருமம் கருமம் இந்த கருமத்தை எப்படி தொலைக்கிறது ?...
Rate this:
ganesan b(ganesh) - abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
18 நவ, 2013 - 11:28 Report Abuse
ganesan b(ganesh) நீங்க இதுவரை இயக்கிய படங்களில், இதுமாதிரி மற்றொரு படம் செய்யக்கூடாதுன்னு சொல்ற மாதிரி உங்க படம் ஏதும் இருக்கா? நான் பண்ண எல்லா படங்களும் தான் முதல் படத்தில் இருந்து வச்சிக்கங்களேன்.". இதே பதிலை இரண்டாம் உலகம் படத்திற்கு அப்புறம் சொல்ல மாட்டீர்களே?."பதில் "ஆமாம்" என்றால் ஏன் பணத்தை வீண் செலவு செய்கிறீர்?
Rate this:
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
18 நவ, 2013 - 10:39 Report Abuse
சு கனகராஜ் இவன் படங்கள் சைக்கோ தனமாகவே இருக்கும்
Rate this:
Karthik Rajendra - tirupati,இந்தியா
18 நவ, 2013 - 13:12Report Abuse
Karthik Rajendraஉங்களையும் விட ஒருவன் உண்டு kangu...
Rate this:
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
18 நவ, 2013 - 21:05Report Abuse
சு கனகராஜ் என்ன கங்கு ?...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in