'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
புரூஸ்லீ, ஜாக்கிசான், ஜெட்லீ வரிசையில் இப்போது சைனீஸ் படங்களின் ஆக்ஷன் ஹீரோவாக வலம் வருகிறார் டோனிஜா. இவர் நடித்த ஓங் பேக் படத்தில் யானைப் பாகனாக நடித்திருந்தார். யானை கூட்டங்களின் மேலே பறந்து பறந்து சண்டை போடுவார். அதனால் இப்போது வெளிவரவிருக்கும் அவரது டோம் யுங் கோன்ங் 2 படத்திற்கு கும்கி வீரன் என்ற பெயர் வைத்திருக்கிறார்கள்.
ஓங் பேக் டைரக்டர் பிரச்சாய் பிங்கே, ஸ்டண்ட் டைரக்டர் கிட்டிகேரி டோனிஜா ஆகிய மூவரும் மீண்டும் இணைந்திருக்கிறார்கள். படத்தில் 20 நிமிடங்கள் இடம்பெறும் பைக் சேசிங் படு திரில்லாக இருக்குமாம். ஹாலிவுட் படங்களை தரவரிசைப்படுத்தும் ஐஎம்டிபி அமைப்பு இந்தப் படத்துக்கு 7.3 மதிப்பெண்கள் கொடுத்திருக்கிறது. இதன் தமிழ் பதிப்பு வசனத்தை ராஜா எழுதுகிறார். இண்டோ ஓவர்சீஸ் நிறுவனத்தின் சார்பில் பிரோஸ் மற்றும் ஆர்ட் ஸ்டூடியோ ரிலீஸ் செய்கிறது.