சிறப்புச்செய்திகள்

சினிமா முதல் பக்கம் » கோலிவுட் செய்திகள் »

கமல்ஹாசனின் புதிய படம் யாவரும் கேளீர்

Kamalhasan’s next is ‘Yavarum Kelir’உன்னைப்போல் ஒருவன் வெற்றிக்கு பிறகு நடிகர் கமல்ஹாசன் நடிக்கவிருக்கும் புதிய படத்திற்கு யாவரும் கேளீர் என்று பெயரிட்டுள்ளனர். தசாவதாரம் படத்திற்கு பிறகு இந்த படத்திற்காக கே.எஸ்.ரவிக்குமாருடன் கை கோர்த்திருக்கிறார் கமல்ஹாசன். உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜெயண்ட் மூவிஸ் தயாரிப்பில் உருவாகவிருக்கும் இந்த படத்திற்கு ஸ்ருதி கமல் இசையமைக்கிறார். தமிழ் கவிஞர் கனியன் பூங்குன்றனாரின் யாதும் ஊரே... யாவரும் கேளீர் என்ற வரிகளில் இருந்து தலைப்பை தேர்ந்‌தெடுத்தார்களாம். விரைவில் சூட்டிங் தொடங்கவிருக்கிறது. விறுவிறுவென சூட்டிங்கை நடத்தி 2010 மத்தியிலேயே இப்படத்தை ரீலிஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறதாம் ரெட்ஜெயண்ட் மூவிஸ். கமல்ஹாசனை வைத்து படம் தயாரிக்க வேண்டும் என்பது தனது நீண்ட நாள் கனவு என்று ஏற்கனவே உதயநிதி ஸ்டாலின் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். அந்த கனவு யாவரும் கேளீர் படத்தின் மூலம் பலித்து விட்டது என்கிறது தயாரிப்பு தரப்பு.

Tags »
Kamalhasan, kamal next film, Yavarum kelir, Director KS Ravikumar, Sruthi kamal, யாவரும் கேளீர், கமல்ஹாசன், புதிய படம், ஸ்ருதி கமல், டைரக்டர் கேஎஸ் ரவிக்குமார்,
Share  
Bookmark and Share

வாசகர் கருத்து (1)

ரவி - chennai ,IndiaJun 22 2010 5:15AM

தனித்திறமை காண்பிக்கறேன் என்று மத்த தயாரிப்பாளர்களை ரத்த கண்ணீர் விட வைத்த கதை திமுக குடும்பத்தாரிடம் எடுபடாது! ஜாக்கிரதை !!!!

உங்கள் கருத்தை பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Copyright © 2012 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in