Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பாட்டுக் குருவிக்கென்ன கட்டுப்பாடு: பி.சுசீலாவுக்கு இன்று 78வது பிறந்த நாள்: சில நினைவுகள்

13 நவ, 2013 - 10:51 IST
எழுத்தின் அளவு:

இசைக்குயில் பி.சுசீலாவுக்கு இன்று (நவம்பர் 13) 78வது பிறந்த நாள். அவரைப் பற்றிய சில நினைவுகள்...

ஆந்திரமாநிலம் விஜயநகரம் அருகில் உள்ள புலம்பாக்கத்தில் 1935ம் ஆண்டு நவம்பர் 13ந் தேதி பிறந்தார். அப்பா முந்தாராவ் அந்த பகுதியில் புகழ்பெற்ற வழக்கறிஞர், அம்மா கவுத்தாரம் வங்கி அதிகாரி. செல்வாக்குள்ள குடும்பதில் பிறந்த சுசீலாவுக்கு 5 சகோதரிகள், 3 சகோதரிகள். உடன் பிறந்தவர்கள் படித்து அரசு வேலைக்கு செல்லும்போது சுசீலாவுக்கு மட்டும் பாட்டு மீது காதல். ஆந்திராவின் புகழ்பெற்ற இசை மேதை துவாராம் வெங்கடசாமி நாயுடுவிடம் இசை கற்றார்.

1950ம் ஆண்டு சென்னை வானொலியில் நிலைய பாடகியாக வேலைக்குச் சேர்ந்து "பாப்பாமலர்" என்ற நிகழ்ச்சியில் பாடிக் கொண்டிருந்தார். இசை அமைப்பாளர் கே.எஸ்.பிரகாஷ்ராவ் அப்போது தான் இசை அமைத்துக் கொண்டிருந்த பெற்றதாய் படத்திற்கு புதிய குரல் வேண்டுமென்று சென்னை வானொலியில் பாடிக் கொண்டிருந்தர்களுக்கு தேர்வு வைத்தார். அதில் தேர்வான ஒரே பாடகி சுசீலா. 1953ம் ஆண்டு பெற்றதாயில் "எதற்கு அழைத்தாய்..." என்ற பாடலை ஏ.எம்.ராஜாவுடன் பாடி தனது பாட்டு பயணத்தை தொடங்கினார்.

அதன்பிறகு வானொலி நிலையை வேலையை விட்டுவிட்டு ஏவிஎம் நிறுவனத்தில் ஆஸ்தான பாடகியானார். அங்கு மாத சம்பளத்தில் வேலை பார்த்தார். அப்போதுதான் ஏ.வி.மெய்யப்ப செட்டியார் சசீலாவுக்கு தமிழை தெளிவாக உச்சரிக்க கற்றுக் கொடுக்க ஏற்பாடு செய்தார். 1955ல் வெளிவந்த கணவனே கண்கண்ட தெய்வம், மிஸ்சியம்மா படங்கள் சுசீலாவின் புகழை உயர்த்தியது. அப்போதிருந்த பி.லீலா, எம்.எல்.வசந்தகுமாரி, ஜிக்கி ஆகியோருக்கு போட்டியாக வளர்ந்தார் சுசீலா.

விஸ்வநாதன்-ராமமூர்த்தி-டி.எம்.சவுந்தர்ராஜன்-பி.சுசீலா இந்த நால்வர் கூட்டணி ஒரு இசை சாம்ராஜ்யத்தையே நடத்தியது. மது உண்ட வண்டுபோல தமிழ் ரசிகர்கள் இவர்கள் இசையில் மயங்கி கிடந்தார்கள்.

உயர்ந்த மனிதன் படத்தில் இடம்பெற்ற "நாளை இந்த வேளை பார்த்து போய் வா நிலா..."வும் சவாலே சமாளியில் இவர் பாடிய "சிட்டுக் குருவிக்கென்ன கட்டுப்பாடு..."வும் தேசிய விருதை பெற்றுக் கொடுத்தது. இதுதவிர மூன்று தெலுங்கு பாடல்களுக்கும் தேசிய விருதை வாங்கினார். 11 மாநில அரசு விருகளும் சுசீலாவின் கரத்தை அழகுபடுத்தியது. பல தனி அமைப்புகள் சுசீலாவிற்கு கணக்கில்லாத விருதுகளை வழங்கி தங்களை பெருமைப்படுத்திக் கொண்டன.
2008ம் ஆண்டு தன்பெயரில் ஒரு அறக்கட்டளை தொடங்கி சாதித்த இசை கலைஞர்களுக்கு விருது வழங்கி வருவதும், நலிந்த கலைஞர்களுக்கு நிதி உதவி வழங்கி வருவதும் சுசீலாவின் இன்னொரு முகம்.

1950களில் கேட்கத் தொடங்கிய இந்த குயிலின் ஓசை இப்போதும் மேடைகளில் ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது. தனது 60 வருட இசை பயணத்தில் இந்திய மொழிகள் அனைத்திலும் 25 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார். இதுதவிர பத்தாயிரம் பக்தி பாடல்களையும் பாடியுள்ளார். 78 வயதிலும் முழு ஆரோக்கியத்தோடு இளமையாக இருக்கிறார். ஆழ்ந்த பக்தி, சிறந்த தனிமனித ஒழுக்கம் இதுவே சுசீலாவின் இளமை ரகசியம்.

சுசீலா அவர்கள் பாடிய சில பாடல்கள் இதோ...

ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்...
யாருக்கு மாப்பிள்ளை யாரோ...
முத்தான முத்தல்லவோ...
அமுதை பொழியும் நிலவே...
பருவம் எனது பாடல்...
நெஞ்சத்திலே நீ....
லவ் பேர்ட்ஸ்...லவ்பேர்ட்ஸ்..
அத்தான் என் அத்தான்...
ஆடாமல் ஆடுகிறேன்...
நினைக்கத் தெரிந்த மனமே...
உன்னை காணாத கண்ணும் கண்ணல்ல..
மாலை பொழுதின் மயக்கத்திலே...
சிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு...
தங்கத்திலே ஒரு குறையிருந்தாலும்...

இப்படி எத்தனை எத்தனை கானங்களை காற்று சுமந்து திரிகிறது. பூமியில் காற்று உள்ளவரை இந்த கானங்கள் மனிதர்களின் காதுவழி புகுந்து இதயத்தை நனைக்கும்.

நீங்களும் உங்களுக்கு பிடித்த பி.சுசீலாவின் பாடல்களை (கமெண்டில்) குறிப்பிட்டு இசைக்குயிலை வாழ்த்துங்களேன்.

பிறந்தநாள் வாழ்த்துக்கள் சுசீலா!!

Advertisement
கருத்துகள் (43) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (43)

H Sivaraman - Chennai,இந்தியா
14 நவ, 2013 - 16:31 Report Abuse
H Sivaraman நான் ஒரு சுசீலா அம்மாவின் தீவிர ரசிகன். என்னால் இவரை தவிர வேற ஒருவரையும் ஏற்று கொள்ள முடியவில்லை. இவருடைய இனிய குரல் கேட்டாலே என்னுள் ஆனந்தம் கூத்தாடும். எந்த வேலை இருந்தாலும் அதை விட்டு விட்டு இவருடைய பாட்டை ரசித்த பின்பு தான் மற்றவைஎல்லாம். லாங் live மேடம்
Rate this:
Ana.d - Karur  ( Posted via: Dinamalar Android App )
14 நவ, 2013 - 07:56 Report Abuse
Ana.d Happy birthday Amma
Rate this:
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
15 நவ, 2013 - 20:33Report Abuse
சு கனகராஜ் நல்ல குரல் வளம் மிக்கவர் அற்புத திறன் பெற்ற பாடகி...
Rate this:
Anand - karur  ( Posted via: Dinamalar Android App )
14 நவ, 2013 - 07:52 Report Abuse
Anand Happy birthday amma
Rate this:
ajmeer Khan - Riyadh  ( Posted via: Dinamalar Android App )
14 நவ, 2013 - 03:13 Report Abuse
ajmeer Khan endrum marakka mudiyatha isai kuyil vazhga neevir pallaandu
Rate this:
Raja - Doha-Qatar,இந்தியா
13 நவ, 2013 - 23:02 Report Abuse
Raja சுசீலா அம்மாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...திரையிசை சங்கீதத்தை என்னைப் போன்ற எளிய மக்களும் ரசிக்குமாறு செய்ததில் விஸ்வநாதன்-ராமமூர்த்தி-டி.எம்.சவுந்தர்ராஜன்-பி.சுசீலா இந்த நால்வர் கூட்டணிக்குப் பெரும் பங்கு இருக்கிறது...நீடூழி வாழ இறைவனை பிரார்த்திகிறேன்....அம்மாவை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்........இன்னும் பல பிறந்த நாளை கொண்டாட வேண்டும்...
Rate this:
மேலும் 37 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in