Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

கல்யாணம் ஆனதால் முத்தம் கொடுக்க மறுக்கிறேனா? : கரீனா கபூர் மறுப்பு

12 நவ, 2013 - 22:14 IST
எழுத்தின் அளவு:

பாலிவுட்டின் முன்னணி நடிகை கரீனா கபூர். கடந்தாண்டு தான் இந்தி நடிகர் சயீப் அலிகானை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஐஸ்வர்யா ராய் மாதிரியே திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார் கரீனா கபூர். திருமணத்திற்கு பிறகு தனது சினிமா வாழ்க்கை குறித்து அவர் அளித்துள்ள பேட்டி இதோ...

* ராம்லீலா வில், உங்கள் வாய்ப்பை பிரியங்கா, தட்டிப் பறித்தாரா?

திருமணம் ஆகி விட்டதால், நான் நடிக்க வேண்டிய படம், பிரியங்காவுக்கு போய் விட்டதாக, வதந்தி பரப்புகின்றனர். அந்த படத்தின் இயக்குனர், பன்சாலி, எனக்கு நெருங்கிய நண்பர். தான், ஒருபோதும், அப்படி சொல்லவில்லை என, அவரே கூறி விட்டார். ஒரு படத்தில் நடிக்க முடியாமல் போனதற்கு பல காரணம் இருக்கும். இதற்காக, நான் வருத்தப்படவில்லை.

* நீங்கள், கர்ப்பமாக இருப்பதாக...?

என்னை மையமாக வைத்து, அடிக்கடி, இதுபோன்ற, வதந்திகள் பரவுவது வழக்கமாகி விட்டது. இப்போது, நான் கர்ப்பமாக இருந்தால், அடுத்ததாக, கரீனாவின் குழந்தை, எந்த பள்ளியில் படிக்கப் போகிறது என்ற செய்தியை பரப்புவர். அதனால், இதுபோன்ற வதந்திகளை, நான், பொருட்படுத்துவது இல்லை.

* திருமணத்துக்கு பின், முத்த காட்சிகளில் நடிக்க மறுக்கிறீர்களாமே?

அவ்வளவு தானா, இன்னும் இருக்கா. எனக்கு, திருமணம் ஆனது, ஒரு குத்தமாய்யா? நெருக்கமாக நடிக்க மாட்டேன், முத்தக் காட்சியில் நடிக்க மாட்டேன் என்று, அடம் பிடிக்கும் பெண் அல்ல, நான். காட்சிக்கும், கதைக்கும், தேவைப்பட்டால், கண்டிப்பாக, அப்படி நடிப்பேன்.

* நடிகைகளுக்கு திருமணமாகி விட்டால், வாய்ப்பு குறையுமே? உங்களுக்கு எப்படி?

இப்போது, இரண்டு படங்களில் நடித்து வருகிறேன். மேலும், சில படங்களில் நடிக்க, ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளேன். உள்நாடு, வெளிநாடு என, படப் பிடிப்புகளில், பிசியாக இருக்கிறேன். எனவே, திருமணமான, வேறு நடிகைகளிடம், இந்த கேள்வியை கேளுங்கள்.

* திருமண வாழ்க்கை எப்படி போகிறது?

ஒவ்வொரு நொடியையும், ரொம்பவே அனுபவித்து வாழ்கிறேன். இந்த வாழ்க்கை, எனக்கு பிடித்திருக்கிறது. என் கணவர், சயீப் அலிகானுடன், விரைவில் வெளிநாடு செல்லவிருக்கிறேன்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

Natarajan Ramanathan - chennai,இந்தியா
13 நவ, 2013 - 18:43 Report Abuse
Natarajan Ramanathan ஹீரோ சயீப் அலிகான் இல்லை வேறு யாரோதான் என்று சொன்னால் முத்தம் என்ன வேறு என்ன வேண்டுமானாலும் கொடுப்பார்.
Rate this:
Natarajan Ramanathan - chennai,இந்தியா
13 நவ, 2013 - 11:57 Report Abuse
Natarajan Ramanathan ஒருவேளை சயீப் அலிகானுக்கு மட்டும் முத்தம் கொடுக்க மறுத்திருப்பார். மற்ற யாரென்றாலும் OK
Rate this:
Sirajudeen...M - Mugavai...T.N.....,இந்தியா
13 நவ, 2013 - 10:17 Report Abuse
Sirajudeen...M நீ முத்தம் கொடுத்தால் என்ன ....கொடுக்காட்டி என்ன ... இதனால் நாட்டுக்கு என்ன நன்மை ?????
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in