ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ஹிருத்திக்ரோஷன், ப்ரியங்காக சோப்ரா நடித்த கிரிஷ் -3 உலகம் முழுவதும் வசூலை அள்ளி குவித்துக் கொண்டிருக்கிறது. வழக்கம்போல தமிழ்நாட்டில் டல் அடிக்கிறது. இதை உற்சாகப்படுத்த படத்தின் ஹீரோ ஹிருத்திக்ரோஷன் நாளை (நவம்பர் 11) சென்னை வருகிறார். சென்னை சத்தியம் திரையரங்கில் பகல் 2மணியிலிருந்து 4 மணி வரை படம் பார்க்க வரும் ரசிகர்களை சந்திக்கிறார். அதோடு படம் தற்போது ஓடிக்கொண்டிருக்கும் எஸ்கேப், ஐநாக்ஸ், தேவி, அபிராமி, சங்கம், எஸ் 2 பெரம்பூர், பி.வி.ஆர் தியேட்டர்களுக்கும் அவர் செல்வார் என்று தெரிகிறது.
கிரிஷ்-3க்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து கிரிஷ்-4 தயாரிப்பு ஏற்பாடுகளை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்குகிறார். மூன்றாம் பாகத்தின் கதையில் ஹிருத்திக்ரோஷன் தந்தை தனது சக்தியையும் சேர்த்து மகனுக்கு கொடுத்துவிட்டு இறந்து விடுகிறார். ஹிருத்திக் ரோஷனுக்கும் ப்ரியங்கா சோப்ராவிற்கும் ஒரு மகன் பிறக்கிறான். அவன்தான் அடுத்த கிரிஷ் என்று சிம்பாலிக்காக சொல்லி முடிகிறது படம். அடுத்த பாகத்தில், பிறந்திருக்கும் கிரிஷ் பள்ளியில் செய்யும் சேட்டைகளிலிருந்து தொடங்கி அவன் வாலிபனாகி எதிரிகளை முறியடிக்க கிளம்புவான். அவனுக்கு ஆலோசனை சொல்பராக இந்த கிரிஷ் இருப்பார் என்கிறார்கள்.