Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

ஏ டூ இசட் டிஜிட்டல் மயம்: சினிமாவில் நம்பர் ஒன் இடம் பிடித்த தமிழ்நாடு - ஸ்பெஷல் ஸ்டோரி!!

04 நவ, 2013 - 14:17 IST
எழுத்தின் அளவு:

இந்தியாவில் சினிமா தயாரிப்பு ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அதிலும் டிஜிட்டல் கேமராக்கள் வந்த பிறகு சினிமா தயாரிப்பு மிக எளிதாகிவிட்டது. ஒரே டிஜிட்டல் தொழில்நுட்பத்தை வைத்துக் கொண்டு 150 கோடியிலும் படம் எடுக்கிறார்கள், 50 லட்சத்திலும் படம் எடுக்கிறார்கள்.

ஒரு திரைப்படத் தயாரிப்பில் 30 சதவித செலவு பிலிமுக்குத்தான். இப்போது பிலிமில் படம் எடுப்பது கிட்டத்தட்ட வழக்கொழிந்து விட்டது. ஷங்கர் இயக்கும் ஐ படம் பிலிமில் தயாராகும் கடைசி படம் என்கிறார்கள். டிஜிட்டல் கேமரா, டிஜிட்டல் போஸ்ட் புரொடக்ஷன். டிஜிட்டல் ரிலீஸ் என்று எல்லாமே டிஜிட்டல் மயமாகிவிட்டதால் திரைப்படத் தயாரிப்பு ரொம்பவே சிம்பிளாகிவிட்டது.

அதோடு டிஜிட்டலில் இன்னொரு லாபம் இருக்கிறது. எத்தனை ரீ-டேக் வேண்டுமானாலும் போகலாம். ஆரம்பத்தில் டிஜிட்டல் கேமராவில் சில பிரச்னைகள் இருந்தது. வெளிநாட்டு குளிரான தட்பவெட்பத்தை தாங்கும் வகையில் உருவாக்கப்பட்டு டிஜிட்டல் கேமராக்களால் நம்ம ஊர் வெயிலை தாங்க முடியவில்லை. இதனால் பல பிரச்னைகள் ஏற்பட்டது. தியேட்டர்களில் டிஜிட்டல் புரொஜக்ஷன் இல்லாமல் இருந்தது. இப்போது இந்த இரண்டுமே சரி செய்யப்பட்டுவிட்டது. கிட்டத்தட்ட 75 சதவிகித தியேட்டர்கள் கியூப் சிஸ்டத்துக்கு மாறிவிட்டது. நம்ம ஊர் வெயிலை தாங்கும் டிஜிட்டல் கேமராக்கள் வந்து விட்டது.

பிலிம்களின் பயன்பாடு ஒழிந்துவிட்டது, சென்னையில் உள்ள பிரசாத், ஜெமினி லேப்புகள் மூடப்பட்டுவிட்டது. அதில் பணியாற்றிய தொழிலாளர்கள் பலர் விஆர்எஸ் கொடுக்கப்பட்டு வீட்டுக்கு அனுப்பப்பட்டுவிட்டார்கள். சிலர் மாற்று பணிகளில் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். திரைப்படக் கல்லூரிகள் பயிற்சி நிறுவனங்களில் டிஜிட்டல் தொழில்நுட்பமே கற்றுத் தரப்படுகிறது. சென்னை தரமணி எம்.ஜி.ஆர் திரைப்படக் கல்லூரியில் இருந்த பிலிம் பிராசசிங் கோர்ஸ் கைவிடப்பட்டுவிட்டது.

டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் புண்ணியத்தால் இன்று நரிக்குறவர்கள் சினிமாகூட தயாராகும் அளவிற்கு சினிமாவின கதவுகள் திறக்கப்பட்டுவிட்டது. ஒருவருக்கு இயக்குனராகவோ, ஹீரோவாகவோ ஆக விருப்பம் இருந்தால் 50 லட்சம் ரூபாய் இருந்தால் ஆகிவிடலாம் என்கிற நிலை உருவாகி இருக்கிறது. அதனால் சினிமா தயாரிப்பு எண்ணிக்கையும் உயர்ந்து விட்டது.

இந்தியாவில் 2011ம் ஆண்டு 1255 படங்கள் சென்சாராகியிருக்கிறது. 2012ம் ஆண்டு 1602 படங்கள் சென்சாராகியிருக்கிறது. இதில் முதல் இடத்தில் இருப்பது தமிழ்நாடு. கடந்த ஆண்டு 262 தமிழ் படங்கள் தணிக்கை செய்யப்பட்டிருக்கிறது. தமிழுக்கு அடுத்த இடத்தில் இருப்பது தெலுங்கு படங்கள். கடந்த ஆண்டு 256 தெலுங்கு படங்கள் தணிக்கை செய்யப்பட்டிருக்கிறது. இந்திப் படங்கள் மூன்றாவது இடம் பிடிக்கிறது. 221 படங்கள்.

இந்த ஆண்டு 275 படங்கள் வரை தணிக்கை செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 250 படங்களுக்குமேல் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டுக்கு போட்டியாக இருந்த ஆந்திராவில் இப்போது சினிமா உலகம் டல்லடித்துக் கிடக்கிறது. தெலுங்கான பிரச்னையால் அங்கு திரைப்படத் தயாரிப்பு குறைந்து விட்டது. இந்த ஆண்டு அது மூன்றாவது இடத்துக்கு தள்ளப்படலாம். இதே நிலையில் திரைப்பட தயாரிப்பு எண்ணிக்கை உயருமானால் அடுத்த ஆண்டு வெளியாகும் தமிழ் சினிமாவின் எண்ணிக்கை 300ஐ தொடும் என்கிறார்கள்.

200 படங்கள் வெளிவந்தாலும் ஜெயித்து லாபம் சம்பாதிப்பது என்னவோ 20 படங்கள்தான். தமிழ் சினிமா வளவளவென ரிலீசானாலும் ரசிகர்கள் நல்ல பொழுதுபோக்கு படங்கள், அல்லது நல்ல அழுத்தமான கதையம்சம் கொண்ட படங்களையே வெற்றி பெற வைக்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; காத்திருக்கும் சவால்கள்! 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

HARINARAYANAN - Chennai,இந்தியா
05 நவ, 2013 - 12:05 Report Abuse
HARINARAYANAN சினிமா என்பது ஒரு சக்தி மிக்க ஊடகம்... அதன் மூலம் சொல்லப்படும் கருத்துகள் பார்ப்பவர்களின் மனதில் ஆழமான பதிவுகளை ஏற்படுத்த வல்லவை..... எனவே இதன் தயாரிப்பாளர்களுக்கு பொறுப்பு மிக அதிகம்....அதன் ஒவ்வொரு அம்சத்திலும் நிறைய நேரம் செலவு செய்து நல்ல கலைப்படைப்பாக எழுபதுகள் வரை கொடுத்தார்கள்... அவையும் மக்கள் மனதில் நிற்கின்றன... இன்று ஆண்டுக்கு 275 படங்கள் என்றால் 4 நாட்களில் 3 படங்கள் வெளியிடப்படுவதாக அர்த்தம்.... இதில் தரம் எங்கே வைத்து வாழும்.. இன்று அவசரகதியில் பணம் பண்ண விழைவோரின் அடைக்கலபுரியாக திரை உலகம் மாறிவிட்டது... திறமை அங்கே இரண்டாம் பட்சமாகி விட்டது ... இது திரைத்துறைக்கு நல்லதல்ல.... இந்த நிலை காலப்போக்கில் நிச்சயம் மாறும்.
Rate this:
Sirajudeen...M - Mugavai...T.N.....,இந்தியா
05 நவ, 2013 - 10:00 Report Abuse
Sirajudeen...M நாட்டில் எத்தனையோ விஷயங்கள் இருக்கும் போது ....இது பெரிய விசயமல்ல .... பலன் உள்ள விசயங்களை மக்களுக்கு தெரிவித்தால் நல்லது .....
Rate this:
seran - chidambaram,இந்தியா
05 நவ, 2013 - 07:57 Report Abuse
seran எல்லாம் எளிமைப்படுத்தப்பட்ட நிலையில் டிக்கெட் மட்டும் 150,200 என்பது நியாயமா
Rate this:
Senthil Murugan Stalin - Chennai,இந்தியா
04 நவ, 2013 - 18:31 Report Abuse
Senthil Murugan Stalin இன்று நரிக்குறவர்கள் சினிமாகூட தயாராகும் அளவிற்கு ...குறிப்பிட்ட ,இனம்,ஜாதியம் கடந்தது எழுதுங்கள் , 50 லட்சம் இருப்பின் யார் வேண்டுமானாலும் சொல்ல வந்தத்தில் தவறில்லை .. வார்த்தை முக்கியம் இல்லாமல் போய்விட்டதா..? ஆசிரியர் அவர்களே
Rate this:
nnandakumar - KL,மலேஷியா
26 நவ, 2013 - 09:33Report Abuse
nnandakumarஎனக்கும் அதே எண்ணம் வந்தது ....அது என்ன நரிகுறவர்கள் கூட ????...
Rate this:
p.boopathy enkira Boopathiyar - chennai,இந்தியா
04 நவ, 2013 - 16:54 Report Abuse
p.boopathy enkira Boopathiyar சினிமா வேலைகள் எளிமை படுத்த பட்டாலும்..,திரை நிழல் வாழ்வின் நிஜமாக முடியாது.., கற்பனை கதைகள் சமுதாய மக்களை கெடுக்கச் செய்து சினிமா தம் குற்றத்தில் இருந்து என்றும் தப்பிக்க முடியாது..,சினிமா மாற்று ரூபம் டிஜிடல் வடிவெடுத்தாலும் சினிமா செய்த சமுதாய தீவினைகள் அழிவு நிச்சயம்.., மக்கள் பார்க்கும் பார்வையும் கேட்கும் செவியும் சினிமா கலை டிஜிட்டலாக மாற்ற முடியாது..,சினிமா சுவை விருப்பமாக காணப்பட்டலும் சினிமா மீது வெறுப்புணர்வு படிப்படியாக வளரும்.., மக்களின் மக்கள் பண்பாடு கலாச்சாரம் நல்லொழுக்கம் நல்ல ரத்தத்தின் ரத்தங்கள் மரபணுக்கள் தோன்றி நம் மரபை காக்கும். சினிமாவுக்கு மரண நிச்சயம் - பூபதியார்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in