இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
விஜய் டி.வியின் சீரியல்கள், லைவ் ஷோக்கள், கேம் ஷோக்கள் ஆகியவற்றில் பணியாற்றும் நடிகர், நடிகைகள், தொகுப்பாளர்கள் இணைந்து தீபாவளியை மகிழ்ச்சியாக கொண்டாடினார்கள். நீயா நானா கோபிநாத், சரவணன் மீனாட்சி குயிலி, மா.கா.பா.ஆனந்த், ரோபோ சங்கர், பாலாஜி, தாமு, ஈரோடு மகேஷ், தேவிபிரியா, திவ்யதர்ஷினி, பாவனா, பாலாஜி, அர்ச்சனா, மகேஸ்வரி உள்ளிட்ட திரளான கலைஞர்கள் கலந்து கொண்டனர்.
ஆண்கள் பட்டு வேட்டி சட்டையிலும் பெண்கள் பட்டுச் சேலையிலும் வந்திருந்தனர். திருமணம் நிச்யமாகி இருக்கும் சீரியல் நடிகை கல்யாணிக்கும், காம்பியர் ரம்யாவுக்கும் வளையல் அணிவிக்கும் நிகழ்ச்சியை நடத்தினார்கள். அனைவரும் ஒருவரை ஒருவர் கிண்டல் கேலி செய்து கொண்டும், சிறு சிறு போட்டிகளை நடத்திக் கொண்டும் ஜாலியாக இருந்தனர். இறுதியில் ஸ்வீட் சாப்பிட்டு, பட்டாசு வெடித்து விட்டு கிளம்பினர். இந்த நிகழ்ச்சி தீபாவளி அன்று விஜய் டி.வியில் ஒளிபரப்பாகிறது.