Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நானெல்லாம் நடிகனாவேன்னு நெனச்சதே இல்லை - விஜய் சேதுபதி!!

30 அக், 2013 - 01:19 IST
எழுத்தின் அளவு:

  தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் விஜய்சேதுபதி. தொடர்ந்து பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூது கவ்வும், இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா போன்ற வித்தியாசமான படங்களில் நடித்து ரசிகர்களின் அமோக ஆத‌ரவை பெற்றுள்ளார். எப்போது கதையின் நாயகனாக இருக்க விரும்பும் விஜய் சேதுபதி அளித்த சிறப்பு பேட்டி இதோ...

* ‘இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ ரிசல்ட் எப்படி?

‘பீட்சா, ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், ‘சூது கவ்வும்’ வரிசையில் இந்தப் படமும் வெற்றிகரமாகவே ஓடிக் கொண்டிருக்கிறது. அதேசமயம், இந்த வெற்றியை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள கதையிலும், நடிப்பிலும் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறேன்.

* நீங்கள் நடிக்கும் படங்களில் மற்ற ஹீரோக்களுக்கும் வாய்ப்பு கொடுப்பதேன்?

ஒரு கதையில், எத்தனை ஹீரோ இருந்தாலும் நான் கவலைப்படுவதில்லை. அதில், எனது கேரக்டரின் பங்களிப்பை மட்டுமே கருத்தில் கொள்கிறேன். அடுத்து, ஆர்யா, விஷ்ணு, கிருஷ்ணா போன்ற ஹீரோக்களுடனும், தலா ஒரு படத்தில் நடிக்க உள்ளேன்.

* உங்கள் நடிப்பை சக கலைஞர்கள் யாராவது பாராட்டியிருக்கிறார்களா?

சிம்பு, தனுஷ், சித்தார்த், திரிஷா, சமந்தா என்று பலர் மனதார பாராட்டியுள்ளனர். வளர்ந்து வரும் என்னை, வளர்ந்து விட்ட அவர்கள் பாராட்டுவது சந்தோஷமாக உள்ளது.

* நடிப்பு நன்றாக போய்க்  கொண்டிருக்கும்போது, தயாரிப்பில் இறங்கியதேன்?

‘சங்கு தேவன்’ படத்தை நான் தயாரிக்கவில்லை. முதல் பிரதி அடிப்படையில், தயாரித்துக் கொடுக்கிறேன். இதுவும், ஒரு முயற்சிதான். நானெல்லாம் நடிகனாவேன்னு நெனைக்கவே இல்லை. ஆனால், முயற்சி செய்தேன். நடந்து விட்டது. அதேபோல்தான், படம் தயாரிப்பதிலும் ஈடுபட்டேன்.

* ஹீரோயின்களுடன் நெருக்கமாக நடிக்காதது ஏன்?

கதைகள் தான், எப்படி நடிக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கின்றன. நான் நடித்த பல படங்களில், ஹீரோயின்களுடன் நெருக்கமாகவே நடிக்கும் காட்சிகள் இல்லை. ஆனால், ‘பீட்சா’ படத்தில் மட்டும் ரம்யா நம்பீசனுடன் சில காட்சிகளில் ஓரளவு நெருக்கமாக நடித்திருந்தேன்.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

Jothesh - Chennai  ( Posted via: Dinamalar Android App )
31 அக், 2013 - 00:35 Report Abuse
Jothesh Am big fan of you. All the best vijay.....
Rate this:
Jeyaseelan - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
30 அக், 2013 - 15:20 Report Abuse
Jeyaseelan தமிழ் சினிமா வேறு மாநிலத்தினரின் கையில் போகாமல் இருக்கவேண்டுமென்றால் உங்களை போல தமிழ் இளைஞ்ர்கள் நடிக்க வரவேண்டும், தமிழ் இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் தமிழகத்தை சேர்ந்த புது முகங்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும். தமிழ் பாடகர்கள் கலைஜர் டிவியில் என்றும் இனியவை நிகழ்ச்சியில் பாடுவதும், மலையாள பாடகர்கள் தமிழ் சினிமாவில் பாடி சம்பாதிப்பதும் மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது. நீங்கள், சிவா கார்த்திகேயன் போன்றோர் நடிக்க வந்ததை வரவேற்கிறோம், எங்கள் ஆதரவு எப்போதும் உங்களுக்கு உண்டு.
Rate this:
N.Thiagarajan - Chennai,இந்தியா
30 அக், 2013 - 13:07 Report Abuse
N.Thiagarajan தமிழ் சினிமாவில் ஒரு புதிய நல்ல நடிகர், வாழ்த்துக்கள்
Rate this:
Sundar Nat - Madurai,இந்தியா
30 அக், 2013 - 11:30 Report Abuse
Sundar Nat மிகவும் வெளிப்படையான பேச்சு. தெளிவான முடிவுகள் உங்களை மென்மேலும் வளர வைகும. வாழ்த்துகள்.
Rate this:
m.k.raj - Chennai,இந்தியா
30 அக், 2013 - 11:06 Report Abuse
m.k.raj திறமை, கடுமையான உழைப்பின் பலன் இவருக்கு கிடைத்த வெற்றி , அனால் சம்பளத்தை 2 கோடி கேட்பதாக படித்தேன் இது உண்மையா ?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in