'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் |
தனக்கு வந்த ஹாலிவுட் பட வாய்ப்பை வேண்டாம் என்று மறுத்துவிட்டாராம் நடிகர் தனுஷ். தமிழில் முன்னணி நடிகரான தனுஷ், ‘3’ படத்தில் இடம்பெற்ற ‘‘ஒய் திஸ் கொலவெறி...’’ பாடல் மூலம் உலகப்புகழ் பெற்றார். அந்தப்பாட்டால் பாலிவுட்டிலும் வாய்ப்பு பெற்று, ‘ராஞ்சனா’ என்ற படத்தில் நடித்தார். தமிழில் இப்படம் ‘அம்பிகாபதி’ என்ற பெயரில் வந்தது. தமிழில் இப்படம் தோல்வியடைந்தாலும் இந்தியில் ராஞ்சனா சூப்பர் ஹிட்டானது. தற்போது ‘வேலையில்லா பட்டதாரி’, ‘அனேகன்’ போன்ற படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தனக்கு ஹாலிவுட் படங்களில் நடிக்க வாய்ப்பு வந்ததாகவும், ஆனால் அதை அவர் மறுத்துவிட்டதாகவும் கூறியுள்ளார் தனுஷ்.
இதுகுறித்து தனுஷ் கூறியுள்ளதாவது, நிறைய ஹாலிவுட் படங்களில் எனக்கு நடிக்க அழைப்பு வந்தது. கூடவே படத்தின் கதையையும் அனுப்பியிருந்தார்கள், ஆனால் நான் தான் மறுத்துவிட்டேன். அப்படி ஹாலிவுட் பட வாய்ப்புகள் வந்தபோது இங்கு நிறைய படங்களில் பிஸியாக இருந்தேன், அதனால் நடிக்க முடியவில்லை. மேலும் சினிமாவில் அறிமுகான போது இந்த பையனா ஹீரோ என்று சிலர் கேலி செய்தார்கள், இந்தியிலும் அது தொடர்ந்தது, இப்போது ஹாலிவுட் படம் என்றால் இன்னும் சிலர் நகைப்பார்கள். ஆனால் அதைப்பற்றி எனக்கு கவலையில்லை. என்னால் முடியாதது எதுவும் கிடையாது, ஹாலிவுட் படத்திலும் நடிக்க முடியும் என்று கூறியுள்ளார்.