Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பெண்களை இழிவுபடுத்தி வசன காட்சி - சந்தானத்திற்கு பெண்கள் அமைப்பு கண்டனம்

29 அக், 2013 - 11:54 IST
எழுத்தின் அளவு:

ஆண்களை சிரிக்க வைக்க, பெண்களை இழிவு படுத்தி படங்களில் வசனக் காட்சிகளை புகுத்துவதை, நடிகர் சந்தானம் நிறுத்திக்கொள்ள வேண்டும் என, பெண்கள் அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

நடிகர் ஜீவா, திரிஷா, ஆண்ட்ரியா, சந்தானம் நடிக்க, "என்றென்றும் புன்னகை படம் தயாரிக்கப்பட்டுள்ளது. படத்தை அகமது இயக்கியுள்ளார். இந்த படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில், வரும் காட்சி ஒன்றில், பெண் ஊழியர் ஒருவர் சந்தானத்திடம் வந்து, (நேரம் சொல்லி, அனுமதி கேட்பது போன்ற காட்சி அமைப்பு) "அஞ்சு பத்துக்கு போகட்டுமா? என, அனுமதி கேட்பார். அதற்கு சந்தானம், "ஏன் நீ நல்லாத் தானே இருக்கே; ஐநூறு, ஆயிரத்திற்கு போயேன்...என, இரட்டை அர்த்தத்தில் வசனம் பேசி கேலி செய்வார். இந்த காட்சிக்கு பெண்கள் மத்தியில் எதிர்ப்பு குரல் எழுந்துள்ளது.

மனித உரிமைகள் கழக சர்வதேச அமைப்பின் மகளிர் அணி நிர்வாக செயலாளர் கல்பனா விடுத்துள்ள அறிக்கையில்,"சந்தானம் எல்லா படங்களிலும் பெண்களை இழிவுப்படுத்துவது போல வசனம் பேசி வருகிறார். மது பாட்டில் கையுமாக, போதையில் அவர் பெண்களை கொச்சைப்படுத்தி பேசும் வசனங்கள் பெண்களை புண்படுத்தி உள்ளது. பட விளம்பர டிரெய்லரில், ஒரு காட்சியில் பெண்களை இழிவுப்படுத்துவது போல் வசனம் உள்ளது. இது போன்ற வசனங்களை நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையேல் சந்தானத்திற்கு எதிராக போராட்டம் நடத்த நேரிடும். படம் சென்சாருக்கு செல்லும் போது, பெண்களை இரட்டை அர்த்தத்தில் இழிவுப்படுத்தும், இதுபோன்ற வசனங்களை நீக்கிட வேண்டும் என, கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து, படத்தின் இயக்குனர் அகமதுவை தொடர்பு கொள்ள முயன்றபோது, மொபைல்போன் "சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. படக்குழுவினரிடம் கேட்டதற்கு, "நகைச்சுவை காட்சிகளை சந்தானம் தான் எழுதி நடித்து வருகிறார். டிரெய்லர் காட்சி குறித்து ஏற்பட்டுள்ள பிரச்னை, இயக்குனருக்கும், தயாரிப்பாளருக்கும் தெரியுமோ, தெரியாதோ என, எங்களுக்கு தெரியாது என்றனர்.

Advertisement
கருத்துகள் (25) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (25)

Muthu - Chennai,இந்தியா
30 அக், 2013 - 11:24 Report Abuse
Muthu இவன் காமெடி எல்லாமே அருவருப்பா தான் பண்ணுகிறான்.பெண்களை அசிங்க படுத்துவது, முதியோர்களை அசிங்க படுத்துவது, என்று ஏராளம்.என்னமோ இவன் உலக அழகன் என்று நினைப்பு.
Rate this:
S.MAHESH KUMAR - TIRUNELVELI,இந்தியா
30 அக், 2013 - 11:14 Report Abuse
S.MAHESH KUMAR இப்படி ஒருவன் வாயைக்கொடுத்து புண்ணாக்கிக் கொண்டதன் பலன் தான் கடந்த இரண்டு வருடங்களாக வேலையை இழந்து நின்றிருந்தான். தற்போது இன்னொருவன்.
Rate this:
SURESH SURESH - Bangalore,இந்தியா
30 அக், 2013 - 10:41 Report Abuse
SURESH SURESH பெண்கள் பெற்ற குழந்தைஐ தூக்கி குப்பையில் எறிகிறார்கள். இன்னும் பெண்களுக்கு மாமியார் கொடுமை நடக்கிறது. டி வில் விருது வாங்க வரும் பெண்கள் மிகவும் கேவலமாக ஆடை அணிந்து வருகிறார்கள்.அதை குடும்பத்தோடு பார்த்து ரசிக்கிறார்கள். டி வி சீரியல்களில் பெண்ணுக்கு பெண் எதிராக சித்தரிகிரார்கள். இதெல்லாம் இவர்கள் கண்ணுக்கு தெரியவில்லை.
Rate this:
mark - mumbai  ( Posted via: Dinamalar Windows App )
30 அக், 2013 - 08:13 Report Abuse
mark சந்தானம் திருந்திக்கோ, இல்லாவிட்டால் நம்ம ரசிகர்கள் பிஞ்ச செருப்பாலேயே அடிச்சு கொன்னுபுடுவாங்க எச்சரிக்கை.
Rate this:
E.Manoharan - madurai,இந்தியா
30 அக், 2013 - 06:13 Report Abuse
E.Manoharan பெண்கள், குழந்தைகள், முதியோர், பிறவி குறையுடையோர், ஊனமுற்றோர் போன்றவர்களை இந்த சினிமா கூத்தாடிகள் மிக கேவலமாக விமர்சித்து காமெடி செய்து வருவது கவுன்டமணி, செந்தில் காலத்தில் இருந்தே இருக்கிறது. அதுவுமில்லாமல் இந்த ஆளுக்கு நாக்கு ஒன்றுதான் வாய் துடுக்காக பேசுகிறதே ஒழிய, வேறு எந்த நடிப்பும் சுட்டுபோட்டாலும் வருவதில்லை. மரக்கட்டை போல் இருந்து வசனம் பேசி கேமரா முன் நிற்பதற்கு ஒரு மரமோ அல்லது ஒரு ரோபாட் போதும். இந்த ஆளை திரையில் பார்த்தாலே சகிக்க முடியவில்லை. உடல்மொழியுடன் நல்ல காமெடி செய்து வந்த வடிவேலுவை ஓரங்கட்டி வீட்டு இப்படி ஒரு ரெகார்டிங் பொம்மையை எப்படித்தான் சினிமா உலகத்தினர் புக்கிங் செய்கிறார்களோ. வாய் உள்ள பிள்ளை பிழைக்கும் போலும். கன்றாவியிலும் படு கன்றாவி இது.
Rate this:
LAX - Trichy,இந்தியா
30 அக், 2013 - 10:52Report Abuse
LAX100% உண்மைதான் - சரியாச் சொன்னீங்க மனோஹரன்.....
Rate this:
Muthu - Chennai,இந்தியா
30 அக், 2013 - 11:28Report Abuse
Muthuவேறு வழியில்லாமல் தான் இவனை புக் செய்கிறார்கள்.ஏனென்றால் வடிவேல் அரசியல் தலையீடு காரணமாக ஓரங்கட்டப்பட்டுவிட்டார்.அதனால் இவன் காட்டில் மழை....
Rate this:
மேலும் 18 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in