தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ரேனிகுண்டா என்ற வெற்றிப்படத்தின் இயக்குனர் பன்னீர்செல்வம் தான் அடுத்து தெலுங்கில் இயக்கவுள்ள படத்தில் நடிக்க தமன்னாவுக்கு வலைவீசியிருக்கிறார். ரேனிகுண்டா வெற்றியைத் தொடர்ந்து 18 வயசு என்ற படத்தை இயக்கி வருகிறார் பன்னீர் செல்வம். ரேனிகுண்டாவில் நாயகனாக நடித்த ஜானிதான் இந்த படத்திலும் ஹீரோ. 18 வயசைத் தொடர்ந்து பன்னீர்செலவம் தெலுங்கில் புதிய படமொன்றை இயக்க திட்டமிட்டிருக்கிறார். ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் உறவினரான ரோஹித்தான் நாயகனாம். நாயகியாக நடிக்க தமன்னாவிடம் கேட்டிருக்கிறாராம் பன்னீர். ஆனால் அம்மணி இப்போது தமிழில் நம்பர் ஒன் இடத்தில் இருப்பதால் தெலுங்கு படத்தை ஒப்புக் கொள்வதா, வேண்டாமா? என்ற குழப்பத்தில் இருக்கிறாராம். பாஸிட்டாவான பதிலை எதிர்நோக்கி காத்திருக்கிறார் டைரக்டர் பன்னீர்செல்வம்.