மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் |
சினிமாவுக்கு விளம்பரம் மிகவும் முக்கியம். கோடிக் கணக்கில் செலவு செய்து விளம்பரம் செய்ய முடியாதவர்கள். எதையாவது புதுமையாக செய்து படத்துக்கு விளம்பரம் தேடிக் கொள்கிறார்கள். அந்த வரிசையில் வருகிறது. கரு.பழனியப்பன் டைரக்ட் செய்து கொண்டிருக்கும் ஜன்னல் ஓரம்.
இதில் பார்த்திபன், விமல், விதார்த், மனிஷா, பூர்ணா, ரமணா என மிடில்கிளாஸ் நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. பார்த்திபன், டிரைவராகவும், விமல் நடத்துனராகவும் நடிக்கிறார்கள். பஸ் பயணத்தை மையமாக கொண்ட கதை. அதனால் இதன் பாடல் வெளியீட்டு விழாவை பஸ்சுக்குள்ளேயே நடத்துகிறார்கள்.
இன்று (அக்டோபர் 17) படத்தில் நடிக்கும் நட்சத்திர பட்டாளங்கள், இசை அமைப்பாளர் வித்யாசாகர், பாடலாசிரியர் யுகபாதி டைரக்டர் கருபழனியப்பன் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் ஒரு பஸ்சில் கிளம்பினார்கள். பஸ் சென்று கொண்டிருக்கும்போதே பாடலை வெளியிட்டார்கள். வடபழனியில் இருந்து கிளம்பிய அந்த பஸ் கிண்டி, குரோம்பேட்டை, பல்லாவரம், தாம்பரம், கோயம்பேடு பகுதிகளுக்கு சென்று ஒவ்வொரு பஸ் நிலையத்திலும் நிறுத்தி பாடல்களை வெளியிட்டு பொது மக்களுக்கு நட்சத்திரங்கள் காட்சி தருவார்கள். அங்கே சி.டி.விற்கப்படும். இறுதியில் இன்று மாலை கமலா தியேட்டரில் நடக்கும் விழாவிலும் பாடல்களை சூர்யா வெளியிடுகிறார்.