Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கிடுக்கிபிடி போட்ட மீடியா, நழுவிய நஸ்ரியா

10 அக், 2013 - 15:26 IST
எழுத்தின் அளவு:

"நய்யாண்டி படத்தில் நான் தொப்புளை காட்டவே இல்லை. வேறொரு பெண்ணை டூப்பா நடிக்க வைத்து அவர் தொப்புளை என் தொப்புள் போல காட்டிட்டாங்க. டிரைலர்லேயே தொப்புள் காட்டினவங்க படத்துல என்ன பண்ணி வச்சிருக்காங்களோ, படத்தை ஸ்டாப் பண்ணுங்க. நான் அதை பார்க்கணும்" என்று கமிஷனர் ஆபீசில் கதறிய நஸ்ரியா, படத்தில் அப்படி எதுவும் இல்லை என்று தெரிந்ததும் நேற்று கேரளாவிலிருந்து பறந்து வந்து திடீரென்று மீடியாக்களை மீட் பண்ணினார். அப்போது மீடியாக்கள் போட்ட கிடுக்கிப் பிடியும் நஸ்ரியாவின் நழுவலும் கீழே...

* இப்போ சமாதானமாயிட்டீங்க போலீஸ் கம்ளைண்ட வாபஸ் வாங்குவீங்களா?

நாளைக்கே வாங்கிடுவேன்.

* தயாரிப்பாளரும், இயக்குனரும் மிரட்டினதா சொன்னீங்களே?

நான் அப்படி சொல்லவே இல்லை. எங்களுக்குள்ள கம்யூனிகேசன் கேப் இருந்ததுதான் காரணம். நான் இயக்குனர்கிட்ட பேசினப்போ அவர் சரியா பதில் சொல்லாம நீ என்ன வேணாலும் பண்ணிக்கோன்னு சொன்னதாலதான் நான் போலீஸ் கிட்ட போனேன்.

* இயக்குனருக்கும், உங்களுக்குமான ஈகோ பிரச்னையில தயாரிப்பாளரை தவிக்க விட்டது நியாயமா?

இப்பதான் எல்லாம் சரியாயிடுச்சே ஹி...ஹி...ஹி...

* டிரைலரில் உள்ள அந்த சீன் ஆபாசமாவா இருக்கு?

நான் அது வல்காரிட்டியா இருக்குன்னு சொல்லல, என்கிட்ட பர்மிஷன் கேட்காம எடுத்திட்டாருன்னு தான் சொல்றேன்.

* சம்பந்தமே இல்லாம நான் முஸ்லிம் பொண்ணு என் மதத்து மரியாதை காப்பாத்துங்கன்னு ஏன் சொன்னீங்க?

நான் அப்படிச் சொல்லவே இல்லை. அந்த சீன் என் குடும்பம், என் சமுதாய மக்களுக்கு சங்கடத்தை உண்டாக்குதுன்னுதான் சொன்னேன்.

* நடிக்க வந்து கொஞ்ச நாள்தான் ஆச்சு. அதுக்குள்ள ஜெய்கூட காதல், தொப்புள்னு பிரச்னை வந்துகிட்டே இருக்கே ஏன்?

தெரியலையே...

* திருமணம் என்னும் நிக்காஹ் படத்துக்கும் பிரச்னை பண்ணுவீங்களா?

அதுல டூப் சீன் எதுவும் இல்லியே...

* எதுக்கெடுத்தாலும் பிரச்னை பண்ற பொண்ணுங்ற இமேஜ் வந்துட்டா உங்க கேரியர் பாதிக்கப்டாதா?

எல்லா படத்துக்கும் போலிஸ்கிட்ட போகணும், கேஸ் போடனும்னா அலையுறேன். இது தப்பா தெரிஞ்சுது போனேன்.

* மீண்டும் சற்குணம் டைரக்ஷன்ல நடிப்பீங்களா?

சற்குணம் சார் கூப்பிட்டா கண்டிப்பா நடிப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
கருத்துகள் (26) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (26)

Mohandhas - singapore,சிங்கப்பூர்
12 அக், 2013 - 21:27 Report Abuse
Mohandhas படம் சரியான ஊத்தலாம்.... தமிழ் டாகீஸ் ரிவீவ் பாருங்கள்...
Rate this:
Ari Munusamy - Muar, Malaysia .  ( Posted via: Dinamalar Android App )
12 அக், 2013 - 12:00 Report Abuse
Ari Munusamy ஆங்கில படங்களில் நிர்வாண காட்சிகளுக்கு டூப் கூட போடுவார்களாம். எந்த சர்ச்சையும் கிடையாது. இங்கே தொப்புளக்கு இவ்வலவு சர்ச்சையா? வடநாட்டு காரி தொப்புளக்கு தான் மார்கெட் ஜாஸ்தி் பொல.
Rate this:
John - Chennai,இந்தியா
12 அக், 2013 - 11:48 Report Abuse
John உன் சமுதாயம் மும்தாஜையும், முமைத்கனையும் ஒத்துக்கிச்சே , அவங்கக் காட்டததை விடவா நீ காட்டிட்ட
Rate this:
Raj - Bangalore,இந்தியா
11 அக், 2013 - 11:23 Report Abuse
Raj கிடுக்கி பிடியோ .....இடுப்பு பிடியோ ..... எல்லாத்தையும் விசாரிக்காம நியூஸ் போடறவரைக்கும் ..........இவர்கள் இப்படிதான்
Rate this:
Prema Chennai - Chennai,இந்தியா
11 அக், 2013 - 10:50 Report Abuse
Prema Chennai தமிழ் நடிகைகளுக்கு வாய்ப்பு கொடுத்தால் இப்படி ஆகுமா.இப்படிப்பட்ட பிரச்னையும் பண்ணுவாங்க இதுக்கு மேலயும் பண்ணுவாங்க இது தேவையா
Rate this:
மேலும் 21 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in