சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் |
ஷாம் நடித்த 6 மெழுகுவர்த்திகள் படத்தில் நாயகியாக நடித்தவர் பூனம் கவுர். முதல் படத்திலேயே பேசப்படும் அளவுக்கு நடிப்பை வெளிப்படுத்தியிருந்த அவர், தற்போது ரணம் என்ற படத்தில் நடித்து வருகிறார். முதல் படத்தில் மகனை தொலைத்து விட்டு தவிக்கும் அம்மாவாக நடித்தவர், இந்த படத்தில் பாலியல் பலாத்காரத்துக்கு எதிரான ஒரு அதிரடியான கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம்.
என்றாலும், இளவட்ட ரசிகர்களின் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்யும் விதத்தில் பாடல் காட்சிகளில் கலக்கலான காஸ்டியூம்கள் அணிந்து நடித்துள்ளாராம் பூனம். அதுவும் ஒரேயொரு பாடல் காட்சியில் மட்டும் 400 உடையணிநது நடித்திருக்கிறாராம். தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமாவிலும் இதுவரை யாரும் இத்தனை காஸ்டியூம்களை ஒரே பாடலில் அணிந்து நடிக்கவில்லையாம்.
அதனால் இந்த படத்திற்கு பிறகு ஆவேசமான நடிப்பினால் மட்டுமின்றி, அசத்தலான ஆடை அணிந்து நடித்தமைக்காகவும் நான் பேசப்படும் நடிகையாகி விடுவேன் என்று சொல்லும் பூனம் கபூர், முன்னணி ஹீரோக்கள் படமென்றால் நயன்தாரா, தமன்னா போன்று பிகினி உடைதரித்து நடிக்கவும் தான் தயாராக இருப்பதாக கோலிவுட்டுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.