Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சிவாஜியின் பிறந்த தினத்தை புறக்கணித்த நடிகர் சங்கம்!

02 அக், 2013 - 15:55 IST
எழுத்தின் அளவு:

மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின், 86வது பிறந்த தினத்தை ஒட்டி, சென்னையில் உள்ள அவரது சிலைக்கு நடிகர் சங்க நிர்வாகிகள் மற்றும் திரையுலக கலைஞர்கள் மாலை அணிவித்து, மரியாதை செலுத்த வரவில்லை. அதேபோல், தமிழக காங்கிரஸ் சார்பில், சென்னை சத்தியமூர்த்தி பவனிலும் அவரது உருவப்படத்திற்கு நிர்வாகிகள் மரியாதை செய்யாமல் புறக்கணித்தது, சிவாஜி ரசிகர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை உருவாக்கி உள்ளது.

நடிகர் சிவாஜி மூன்று வேடங்களில் நடித்த, தெய்வமகன் திரைப்படம் முதன் முதலாக, ஆஸ்கார் விருதுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அப்போது, அவரை கவுரவப்படுத்தும் வகையில், அமெரிக்காவில், நயாகரா பகுதிக்கு ஒரு நாள் மேயராக நியமித்து கவுரவிக்கப்பட்டார். இந்த வாய்ப்பு இந்தியாவில் சிவாஜிக்கும், மறைந்த பிரதமர் நேருவுக்கு மட்டும் தான் கிடைத்தது. இத்தகைய பெருமை வாய்ந்த சிவாஜியை, தமிழ் திரையுல கலைஞர்களும், காங்கிரஸ் தலைவர்களும் மறந்து விட்டனர் என்பது தான், அவரது ரசிகர்களுக்கு வேதனையை அளிக்கிறது. சுதந்திர போராட்டத்திற்காக, பாடுப்பட்ட வீரபாண்டிய கட்டபொம்மன், வ.உ.சிதம்பரனார் பிள்ளை, பாரதியார் வேடத்தில் நடித்து, அவர்களின் தியாகத்தை திரைப்படம் மூலம், தமிழக ரசிகர்களின் மனதில் முத்திரையாக பதித்தவர் சிவாஜி. இந்த ஆண்டின் முதியோர் தினத்தில், சிவாஜியின் பிறந்த தினம் வந்ததால், அவரது ரசிகர்கள் முதியோர் இல்லத்தில் சிவாஜியின் பிறந்த நாளை கொண்டாடி மகிழ்ந்தனர். இது ஒரு பக்கம் இருந்தாலும், இன்னொரு பக்கம் அவரை திரையுலகினரும், காங்கிரசாரும் மறந்த கதையும் உள்ளது. நடிகர் சங்கத்தின் சார்பில், மணி மண்டபம் கட்டுவதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டும், அதற்காக, அரசு சார்பில், சென்னை அடையாறில் நிலம் ஒதுக்கப்பட்டும் பணிகள் துவக்கப்படவில்லை.

சிவாஜியின் பிறந்த தினம், நடிகர் தினமாக, நடிகர் சங்கத்தின் தலைவராக ராதாரவி பணியாற்றிய போது கொண்டாடப்பட்டது. ஆனால், நடிகர் சங்கம் சார்பில் நேற்று எந்த விழாவும் நடத்தவில்லை. மேலும், சென்னை மெரினா கடற்கரை, காமராஜர் சாலையில் உள்ள சிவாஜி சிலைக்கு, நடிகர் சங்க நிர்வாகிகள் மற்றும் திரையுலக கலைஞர்கள் மாலை அணிவிக்க வரவில்லை என, அவரது ரசிகர்கள் அதிருப்தி அடைந்து உள்ளனர். காங்கிரஸ் கட்சியில் ராஜ்யசபா எம்.பி., யாக பணியாற்றி, கட்சி வளர்ச்சிக்காக பாடுப்பட்ட சிவாஜியை, தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளும் மறந்து விட்டனர்.

முன்னாள் மத்திய அமைச்சர் இளங்கோவன், முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி ஆகியோர், தமிழக காங்கிரஸ் தலைவராக பணியாற்றிய போது, சிவாஜி பிறந்த தினவிழா சத்தியமூர்த்திபவனில் கொண்டாடப்பட்டது. தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன், மூப்பனாரின் சிஷ்யன். மூப்பனாரை எதிர்த்து சிவாஜி அரசியல் செய்ததால், சிவாஜியை ஞானதேசிகன் கண்டுக்கொள்ளவில்லை என, கூறப்படுகிறது. சிவாஜி சிலைக்கு, நேற்று முன்னாள் காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன், முன்னாள் எம்.எல்.ஏ., வசந்தகுமார், சிவாஜியின் மூத்த மகன் ராம்குமார், சிவாஜி சமூக நலப்பேரவையின் தலைவர் சந்திரசேகரன், காங்கிரஸ் நிர்வாகிகள் கஜநாதன், ஜி.ஆர்.வெங்கடேஷ், உள்ளிட்ட சிலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியது, ஆறுதல் விஷயமாக இருந்தது. சிவாஜி சிலைக்கு, ஆந்திராவில் இருந்தும் ரசிகர்கள் வந்திருந்து மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினர்.

- நமது நிருபர் -


Advertisement
கருத்துகள் (9) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (9)

LAX - Trichy,இந்தியா
04 அக், 2013 - 11:52 Report Abuse
LAX திருச்சியில் அமைக்கப்பட்ட அவரது சிலையின் நிலை குறித்து ஏதும் குறிப்பிடவே இல்லையே..?
Rate this:
04 அக், 2013 - 11:36 Report Abuse
Dr.vijay SSLC fail (10 times..but seekiram pass aaiduven)) இன்னும் இவரை ஏன் கட்டி கொண்டு அழுகிறீர்கள்...? MGR பிறந்த நாள் கொண்டாட்டத்தை யாராவது தடுக்க முடியுமா ? அதே போல் தான் சிவாஜி பிறந்த நாளை யாரும் வற்புறுத்தி கொண்டாட வைக்க முடியாது...
Rate this:
ganesan - madurai,இந்தியா
05 அக், 2013 - 10:45Report Abuse
ganesanகட்டபொம்மனை பர்திருக்கிறைய கர்ணனை பார்த்து இருக்கிறாயா அவர்களை ஏன் வரலாறாக பேசுகிறாய்...
Rate this:
mark - mumbai  ( Posted via: Dinamalar Windows App )
03 அக், 2013 - 17:21 Report Abuse
mark சிவாசி கணேசன் பிறந்த நாளைக் கொண்டாட அவங்க கடும்பம் இருக்கின்றதல்லவா காமராசர்னு ஒருத்தர் இருந்தாரே அவரருடைய நண்பர கக்கன்னு ஒரு பிழைக்கத்தெரியாத அரசியல்வாதி இருந்தாரே யாருக்காவது இவர்களது வாழ்க்கைப் பற்றி தெரியுமா அப்படி ததெரிந்தவர்கள் கண்டிப்பாக தங்களது கருத்தை பதிவு செய்யவுமம்
Rate this:
chennai sivakumar - chennai,இந்தியா
03 அக், 2013 - 10:04 Report Abuse
chennai sivakumar ஆளு காலி ஆனாஅவ்வளவும் காலி. இதுதான் உலகம். இதை இன்னும் புரிந்து கொள்ளாத என்போன்ற சிவாஜி ரசிகர்கள் ஏராளம்.என்ன செய்ய?
Rate this:
Raajkumar - madurai,இந்தியா
02 அக், 2013 - 19:17 Report Abuse
Raajkumar காசு வாங்கி தானே நடித்தார். என்னமோ சும்மா சுதந்திரத்துக்கு பாடு பட்ட மாதிரி பில்டப்பு தேவையா. உண்மையான தியாகிகள் விவசாயிகள் தன்யா அவர்களை அடையாளம் காணுங்கள் முதலில்
Rate this:
ganesan - madurai,இந்தியா
05 அக், 2013 - 10:38Report Abuse
ganesanநீ சும்மா நாட்டுக்கு என்ன பண்ணிருக்க? விவசாயி சும்மா நாட்டுக்கு எல்லாம் பண்றன என்ன ? நாட்டுக்காக பாடுபட்டவனை நீ எந்த ரீதியில் உலகிற்கு உணர்த்தி இருக்கிறாய் அவர் நடிப்பால் கட்டி இருக்கிறாரே...
Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in