Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மீண்டும் டி.டி.எச்.-ஐ கையில் எடுக்கும் கமல் - விஸ்வரூபம்-2வை வெளியிட திட்டம்!!

30 செப், 2013 - 17:10 IST
எழுத்தின் அளவு:

 இந்தமுறை விஸ்வரூபம்-2 படத்தை டி.டி.எச்.ல் வெளியிடும் முடிவில் உறுதியாக இருக்கிறார் நடிகர் கமல்ஹாசன். தமிழ் சினிமாவுக்கு ஒவ்வ‌ொரு முறையும் புதிய தொழில்நுட்பத்தை கொண்டு வருபவர்களில் நடிகர் கமல்ஹாசனுக்கு முக்கிய இடம் உண்டு. அந்தவகையில் இந்தாண்டு துவக்கத்தில் கமல் இயக்கி, நடித்து, தயாரித்த விஸ்வரூபம் படத்தை டி.டி.எச். தொழில்நுட்பத்தில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டார். ஆனால் இதற்கு தமிழகத்தில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. இதனால் தனது முடிவை கைவிட்டார் கமல். இந்நிலையில் தற்போது விஸ்வரூபம்-2 படத்தை இயக்கி வரும் கமல், இந்தமுறை படத்தை டி.டி.எச்.ல் வெளியிடும் முடிவில் உறுதியாக இருக்கிறார். 

இந்திய திரைப்பட தொழில் வர்த்தக கூட்டமைப்பின் நிகழ்ச்சி பெங்களூருவில் நடந்தது. அதில் பேசிய கமல், விஸ்வரூபம்-2 படத்தை டி.டி.எச்.ல் வெளியிடுவேன் என்றார். இதுகுறித்து அவர் மேலும் கூறும்போது, டி.டி.எச்.ல் படத்தை திரையிடுவதன் மூலம் அதற்கு உரிய கட்டணம் வசூலிக்கப்படும். டி.வி. மூலம் மட்டும் மக்கள் பார்க்கும் நிலை இருக்காது, வீட்டில் படத்தை பார்த்துவிட்டு தியேட்டரிலும் அப்ப‌டத்தை பார்க்க அவர்களுக்கு தூண்டும். ஆனால் இந்த முறையை எதிர்க்கிறார்கள். எல்லோரது வீட்டிலும் சமையல் அறை இருக்கிறது, ஆனால் அவர்கள்‌ ஹோட்டலுக்கு சென்று சாப்பிடுவது இல்லையா, அதுபோலத்தான் இதுவும். இந்தமுறை விஸ்வரூபம்-2 படத்தை டி.டி.எச்.ல் வெளியிட எண்ணியுள்ளேன். ஒருவேளை இந்தியாவில் எதிர்த்தால் அமெரிக்காவில் இப்படத்தை டி.டி.எச்.ல் வெளியிடுவேன் என்றார்.

ஆக விஸ்வரூபம்-2 படத்திற்கு அடுத்த பிரச்னை கிளம்பிவிட்டது. இந்தமுறை தியேட்டர் அதிபர்கள் என்ன சொல்ல போகிறார்களோ...?

Advertisement
கருத்துகள் (35) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (35)

M. Predeep - Pondicherry,இந்தியா
05 டிச, 2013 - 10:17 Report Abuse
M. Predeep எப்படி வந்தாலும் எங்க வந்தாலும் இவர் படம் எப்போதுமே எங்கும் ஓடாது...
Rate this:
Kavee - Jeddah,சவுதி அரேபியா
07 அக், 2013 - 10:37 Report Abuse
Kavee இந்த ஆளு என்ன லூசா
Rate this:
kumar - Dindigul,இந்தியா
01 அக், 2013 - 23:31 Report Abuse
kumar அப்ப படம் ரிலீஸ் ஆகும் முன்னே திருட்டு VCD ல பாத்துடலாம்
Rate this:
basha - chennai  ( Posted via: Dinamalar Windows App )
01 அக், 2013 - 22:45 Report Abuse
basha சுப்பர்
Rate this:
Srinivas Aravind - bangalore,இந்தியா
01 அக், 2013 - 18:54 Report Abuse
Srinivas Aravind கமல் என்பவர் ஒரு மாபெரும் தலைசிறந்த அனுபவம் மிக்க கலைஞர்.அவர் கூறும் கருத்துக்கள் தவறானவையாக கண்டிப்பாக இருக்காது .எதை செய்தாலும் பலமுறை நன்கு சிந்தித்து செய்பவர். அதனை திரைப்பட விநியோகஸ்தர்கள் ஏற்று கொள்ளவேண்டும் .யருக்கும் எந்த நஷ்டமும் வரகூடாது என்பதில் மிகவும் யோசித்து செய்பவர் அவர்.அதனால் கமல்ஹாசன் என்னும் உலக நாயகனுக்கு திரை துறையினர் செய்யும் மரியாதை அவர் கூறுவதை ஏற்றுக்கொள்ளவேண்டும்
Rate this:
மேலும் 30 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in