ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
அசல் படத்தில் அஜித் ஜோடியாக நடித்து வரும் சமீரா ரெட்டி, எப்போதும் அஜித் புகழ் பாடிக் கொண்டிருக்கிறாராம். தமிழ், தெலுங்கு, வங்காளம், மலையாளம், இந்தி என பல மொழிகளில் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்துக் கொண்டிருக்கும் ஒரே நடிகை என்ற புகழுடன் வலம் வரும் சமீரா, அசல் அனுபவம் குறித்து கூறுகையில், "நடிப்பில் நான் மொழி பேதம் பார்ப்பதில்லை; எந்த மொழியில் நடித்தாலும் அந்த மொழி ரசிகர்களை கவர வேண்டும் என்பதுதான் என் ஆசை. போதுமான அளவுக்கு கிளாமராக நடித்து விட்டதால் இனி நடிப்பை வெளிப்படுத்தும் கேரக்டர்களில் நடிக்கவே ஆசைப்படுகிறேன். ஸ்டார் என்ற பந்தா இல்லாமல் நடித்த அஜீத் பழகுவதற்கு இனியவர். அசல் படத்தில் அஜீத்துக்குத்தான் முக்கியத்துவம் இருக்கும். அதேபோல இதுவரை நான் நடித்த படங்களில் என்னை குழந்தையைப்போல பார்த்துக் கொண்டது சிவாஜி பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம்தான், என்றார்.