Advertisement

சிறப்புச்செய்திகள்

தேர்தல் இருந்தால் என்ன? - வருகிறது புதிய படங்கள்…! | புதிய சாதனை படைத்த 'விசில் போடு' | விஷாலின் ‛ரத்னம்' டிரைலர் வெளியீடு : ஆக்ஷன் ‛ஓகே'... எதற்காக அந்த கெட்டவார்த்தை | கோட் பாடல்... ஆரம்பித்தது சர்ச்சை : விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் புகார் | லாரன்ஸின் ‛ஹண்டர்' படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் புலி | வரலட்சுமி வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு செல்வது மகிழ்ச்சி : விஷால் | இயக்குனர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யா மறுமணம் : முதல்வர், திரைப்பிரபலங்கள் வாழ்த்து | ரூ.45 கோடிக்கு வீடு வாங்கிய பூஜா ஹெக்டே | வித்யாபாலனின் காதல் தோல்வி : அவரே வெளியிட்ட தகவல் | ஓட்டுக்கு பணம் : விஜய் ஆண்டனி விளக்கம் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தமிழ் சினிமா சுத்­தமா மாறி­டுச்சு:கமர்­ஷியல் படங்கள் ஓட மாட்­டேங்­குது-ஷாம்

25 செப், 2013 - 06:24 IST
எழுத்தின் அளவு:

‘12 பி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் ஷாம். தொடர்ந்து ‘ஏய் நீ ரொம்ப அழகா இருக்க’, ‘பாலா’, ‘லேசா லேசா’, ‘அன்பே அன்பே’ என அடுத்தடுத்து ஏராளமான படங்களை கொடுத்தவர் ஷாம். திடீரென தமிழ் சினிமாவில் இருந்து காணாமல் போனவர் தமிழில் இருந்து தெலுங்கு போனார். தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு 6 படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்துள்ளார். படம் பார்த்த அனைவரும் ஷாமை பாராட்டி வருகின்றனர். இதுகுறித்து ஷாம் கூறியதாவது...

* ஒரு அழுத்தமான கதையில், நீங்கள் நடிப்பதற்கு கிட்டத்தட்ட, 10 ஆண்டு தேவைப்பட்டிருக்கே?


ரொம்ப ஆண்டுகளாகவே, ஒரு சாக்லேட் பாய் என்ற இமேஜ் மாற்றி, ஒரு கனமான, அழுத்தமான ரோலில் நடிக்க ஆசைப்பட்டேன். எந்த சினிமா பின்னணியும் எனக்கு இல்லாததால், இது சாத்தியமாகவில்லை. இப்போ, என் அண்ணனுடன் சேர்ந்து, ‘6’ படத்தை,  தயாரிச்சிருக்கேன். எல்லாத்துக்கும் நேரமும், வாய்ப்பும் ரொம்ப முக்கியம்.

* இந்த 10 ஆண்டு அனுபவத்தில், உங்களுக்கு ஒரு சிறு தடுமாற்றம் இருப்பதை உங்களால் உணர முடியுதா?

இல்லை. இன்னிக்கு, தமிழ் சினிமா சுத்தமா மாறிடுச்சி. ரெகுலர் சினிமா ஓடமாட்டேங்குது. கமர்ஷியல் சினிமா சரியா போகமாட்டேங்குது. காரணம், மக்கள் இந்த மாதிரி படம் பார்க்க தயாராக இல்லை. படத்தில், கதையில் ஏதாவது, புதிதாக விஷயம் இருக்கா, வித்தியாசமா ஏதும் சொல்லியிருக்காங்களான்னு பார்க்குறாங்க.

* சிம்ரன், ஜோதிகா, அசின், திரிஷா, சினேகா இப்படி நிறைய ஹீரோயின்ஸ் கூட நடிச்சிருக்கீங்க, உங்க சினிமா கேரியரில் அவங்க பங்கு எவ்வளவு?

உங்க எல்லாருக்கும் தெரியும். சிம்ரன், ஜோதிகா என் முதல் ஹீரோயின்ஸ். இவங்க கொடுத்த ஆதரவால் தான், ‘12பி’யில், ஒரு புதுமுக நடிகனா, பயம் இல்லாம தைரியமா நடிக்க முடிந்தது. எனக்கு பிடிச்ச நடிகைன்னு கேட்டிங்கன்னா சிம்ரன், ஜோதிகான்னு சொல்வேன். அதற்கப்புறம், மீரா ஜாஸ்மின், அசின் என் கூட தான் அறிமுகம். அப்புறம் திரிஷா, என்னுடன் லேசா லேசா படத்தில் தான் அறிமுகம் ஆனாங்க. எனக்கு தெரிஞ்சு, 10 ஆண்டுகளாக ஹீரோயினா சக்சஸ்புல்லா நடிக்கிறாங்கன்னா, அது, திரிஷா தான்.

* உயிரை கொடுத்து நடிச்சி, சரியா போகலைன்னு வருத்தப்பட்ட படம் எது?

‘இயற்கை’ படம் தான். ஷூட்டிங்கிலே, இயக்குனர் ஜனா, ஒளிப்பதிவாளர் எல்லாரும் பாடுபட்டோம். எதிர்பார்த்த அளவு ரிசல்ட் இல்லை. ஆனா, அந்த படத்துக்கு, தேசிய விருது
கிடைத்தது. ‘டிவி’யில் அடிக்கடி இந்த படத்தை பார்க்கும்போது, என்ன படம், என்ன அழுத்தம் அப்படின்னு பேசுறாங்க. ஆனா, அந்த படம், சரியா போகல என்ற வருத்தம், எனக்கு எப்பவும் இருக்கு.

* திடீர்ன்னு தெலுங்கு சினிமா பக்கம் போனீங்க, அங்க உங்களுக்கு எப்படிப்பட்ட வரவேற்பு இருக்கு?

தமிழில் இரண்டு ஹீரோ சேர்ந்து நடிக்க யோசிப்பாங்க, தெலுங்குல அப்படி இல்லை. அதனால் தான், நான் தெலுங்கு படத்தை பயன்படுத்துகிறேன். ரவிதேஜாகூட, ‘கிக்’ல் நடிச்சேன். ‘ஊசிறவள்ளி’ படத்தில் ஜுனியர் என்.டி.ஆர்., கூட நடிச்சேன். ‘ரேஸ்’ படத்தில் அல்லு அர்ஜுனும், நானும் நடிக்கிறோம். அவங்க தெலுங்கு ஹீரோவா இருந்தாலும், சரிக்கு சரியா எனக்கான ரோலும், தெலுங்கு படங்களில் கிடைக்குது.

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

mark - mumbai  ( Posted via: Dinamalar Windows App )
26 செப், 2013 - 10:12 Report Abuse
mark நீங்க ஏன் சார் இவ்வளவு கடுமையாக உழைக்கிறீங்க விசய் மாதிரி இரண்டு குத்துப்பாட்டு நாலு பைட் இரண்டு காமெடு பத்து செண்டுமென்ட் அப்படி பண்ணலாமே நடிக்கவே வேண்டாம் வெறும் பில்டப் மட்டுச் கெடுக்கணும் ரசிகர்கள் சூப்பர் வெற்றியாக்கிடுவாங்க
Rate this:
saravanakumar - aruppukottai,இந்தியா
27 செப், 2013 - 11:25Report Abuse
saravanakumarவிஜய் மாதிரி எல்லாரும் வர முடியாதுடா...
Rate this:
Angry ஜெய் - Srivilliputtur,இந்தியா
25 செப், 2013 - 18:07 Report Abuse
Angry ஜெய் உனக்கு தான் காமடி நல்லா வருமே , வந்து கிச்சு கிச்சு மூட்டு , படம் ஓடும்
Rate this:
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
28 செப், 2013 - 10:46Report Abuse
சு கனகராஜ் ஷாம் வெற்றி பெறட்டும்...
Rate this:
rangu - tuticorin  ( Posted via: Dinamalar Android App )
25 செப், 2013 - 17:05 Report Abuse
rangu என்ன பன்ன
Rate this:
Sundar - Doha,கத்தார்
25 செப், 2013 - 15:08 Report Abuse
Sundar இப்பலாம் ரிஸ்க் எடுத்து ACTING DANCE & FIGHT லாம் ஆட வேண்டாம்... மொக்கை joke பேசிகிட்டு... ஒரு குத்து பாட்டுக்கு சும்மா exercise பண்ணிட்கிட்டு... நடந்து வந்தா போதும்.... இதையும் பார்க்க மக்கள் இருகாங்க.... இப்பலாம் படம் full ah மொக்கை காமெடி பண்றானுங்க.... பார்கவே kadupa இருக்கு....
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in