அமலா ‘சேச்சி’க்கு கிடைத்த ஓணம் பரிசு: குதூகலிக்கும் மலையாள ரசிகர்கள் - Amala the Onam gift: a Malayali fans kutuakalam
Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அமலா ‘சேச்சி’க்கு கிடைத்த ஓணம் பரிசு: குதூகலிக்கும் மலையாள ரசிகர்கள்

16 செப்,2013 - 04:53 IST
எழுத்தின் அளவு:

‘மலையாளத்து மைனா’ அமலா பால், ‘நீலத்தாமரா’ என்ற மலையாள படத்தில் தான், முதல் முறையாக, வெள்ளித் திரையில் அறிமுகமானார். அதன் பின், தமிழில், தன் முழுக் கவனத்தையும் செலுத்தினார். ‘மைனா’ படம், அவருக்கு கோலிவுட்டில், ராஜ மரியாதையை பெற்றுத் தந்தது. இதன்பின், தன் தாய்மொழியான மலையாளத்தில் அவ்வளவாக அவர் கவனம் செலுத்தவில்லை. தெலுங்கு, இந்தியில் வாய்ப்புகள் வந்ததால், மலையாள திரைப்பட தயாரிப்பாளர்கள், அழைத்தும், அதை, அவர் கண்டு கொள்ளவில்லை. கடைசியாக, மலையாளத்தில், ‘ரன் பேபி ரன்’ என்ற படத்தில் நடித்தார்.

இந்நிலையில், மலையாளத்தில், ‘டச்’ விட்டு போக கூடாது என்பதற்காக, இப்போது, மீண்டும் அங்கு, தன் கவனத்தை திருப்பியுள்ளார். கேரளாவில், வேகமாக வளர்ந்து வரும் ஹீரோவான, பகத் பாசில் ஜோடியாக, ‘ஒரு இந்தியன் பிரணய கதா’ என்ற படத்தில் நடிக்க சம்மதித்துள்ளார். இதில், வெளிநாட்டில் வசிக்கும் கேரள பெண்ணாக, அவர் நடிக்கவுள்ளாராம். இதனால், உற்சாகத்தில் இருக்கும், அமலாபாலின் கேரள ரசிகர்கள், ‘எண்ட அமலா ‘சேச்சி’க்கு கிடைத்த, ஓணம் பரிசு இது’ என, பெருமையடிக்கின்றனர்.

Advertisement
தமிழை விரும்பும் மோகன்லால்!தமிழை விரும்பும் மோகன்லால்! நய­னுடன் டூயட் பாட ஆசைப்­படும் கோலிவுட் இளம் ஹீரோக்கள் நய­னுடன் டூயட் பாட ஆசைப்­படும் ...


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film rum
  • ரம்
  • நடிகர் : ரிஷிகேஷ்
  • நடிகை : சஞ்சிதா ஷெட்டி ,மியா ஜார்ஜ்
  • இயக்குனர் :சாய் பரத்
  Tamil New Film s 3
  • சி-3
  • நடிகர் : சூர்யா
  • நடிகை : அனுஷ்கா ,ஸ்ருதி ஹாசன்
  • இயக்குனர் :ஹரி
  Tamil New Film ennai nokki paayum thotta
  Tamil New Film Bruce Lee
  • புரூஸ் லீ
  • நடிகர் : ஜி.வி.பிரகாஷ் குமார்
  • நடிகை : கிருதி கர்பந்தா
  • இயக்குனர் :பிரசாந்த் பாண்டிராஜ்

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2016 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in