Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

24 மணிநேரத்தில் 10லட்சம் பேர் பார்த்த கோச்சடையான் டீசர்

11 செப்,2013 - 14:42 IST
எழுத்தின் அளவு:

 விநாயகர் சதுர்த்தி அன்று ரிலீஸ் செய்யப்பட்ட ரஜினியின் கோச்சடையான் படத்தின் டீசரை 24 மணிநேரத்தில் 10லட்சம் பேர் பார்த்து ரசித்துள்ளனர். எந்திரன் படத்திற்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் கோச்சடையான். 3டி அனிமேஷன் படமாக அவதார், டின்டின் போன்ற ஹாலிவுட் படங்களை போன்று இப்படம் தயாராகியுள்ளது. ரஜினியின் இரண்டாவது மகள் சவுந்தர்யா இயக்கியுள்ளார். தீபிகா படுகோனே ஹீரோயினாக நடித்துள்ளார். இவரோடு சரத்குமார், நாசர், ஜாக்கி ஷெரப், ஷோபனா, ருக்மணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். மீடியா ஒன் குளோபல் என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ளது. இப்படத்தின் ஷூட்டிங் எல்லாம் முடிந்து தற்போது கிராபிக்ஸ் சேர்ப்பு உள்ளிட்ட போஸ்ட் புரொடக்ஷ்ன்ஸ் வேலைகள் நடைபெற்று வருகின்றன.

ரஜினி உடல்நிலை சரியில்லாமல் போய் பின்பு அதிலிருந்து மீண்டு நடித்துள்ள படம் என்பதாலும், எந்திரன் படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட 3 ஆண்டு இடைவெளிக்கு பிறகு வெளிவரும் படம் என்பதாலும் ரசிகர்கள் மத்தியில் இப்படம் எப்போது வெளிவரும் என்று மிகுந்த ஆவல் ஏற்பட்டது.

இந்நிலையில் விநாயகர் சதுர்த்தி அன்று கோச்சடையான் படத்தின் அதிகாரப்பூர்வ முதல் டீசரை வெளியிட்டார் சவுந்தர்யா. பிரமாண்ட அரண்மனை அதனைத்தொடர்ந்து குதிரை ஏற்றத்தில் ரஜினி வருவது போன்றும் ருத்ர தாண்டவம் ஆடும் சிவன் போன்று காலை உயர்த்தியபடியும் ரஜினியின் பல்வேறு காட்சிகள் அந்த டீசரில் ‌இருந்தது. மேலும் இப்படத்தில் ரஜினியை மிகவும் இளமையாக காட்டியுள்ளனர். இந்த டீசர் வெளியான 24 மணிநேரத்தில் சுமார் 10 லட்சம் பேர் பார்த்து ரசித்துள்ளனர். தொடர்ந்து இன்னும் ஏராளமானபேர் ரசித்துக்கொண்டு இருக்கிறார்கள்.

Advertisement
ஜிகர்தண்டா சிறந்த பொழுதுபோக்கு படம்: கார்த்திக் சுப்புராஜ்ஜிகர்தண்டா சிறந்த பொழுதுபோக்கு ... ரூட்டை மாற்றப்போகிறாராம் ப்ரியாமணி! ரூட்டை மாற்றப்போகிறாராம் ...

வாசகர் கருத்து

Vaal Payyan - Chennai,இந்தியா
12 செப்,2013 - 18:50
Vaal Payyan டீசெர் சோட்டா பீம் மாதிரி இருக்கு .... ஏதோ பொம்மை படம் பார்க்கற மாதிரி ....
kumar - muscat  ( Posted via: Dinamalar Android App )
12 செப்,2013 - 14:05
kumar பத்து லட்சம் பேரு இல்லை இருபது லட்சம் பேரு பார்த்தாலும் ஆச்சர்யபடரதுக்கு ஒண்ணும் இல்லை ட்ரைலருக்கே இப்படியா கலக்கு தலைவா
bava kassim - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
12 செப்,2013 - 12:53
bava kassim டீ சேர் புச்சு புட்சு வார்தையே பூத்துரீங்கோ என்ன அது டீ சேர். யாராவது சொளுங்கோ
M. Predeep - Pondicherry,இந்தியா
12 செப்,2013 - 12:50
M. Predeep Evergreen Super star is the one and only Rajinikanth...
M. Predeep - Pondicherry,இந்தியா
12 செப்,2013 - 12:47
M. Predeep சூப்பர் தலைவா...
venkatesh - Bangalore,இந்தியா
12 செப்,2013 - 11:12
venkatesh ஐயோ நம்ம power star வேற kochaidaiyaan ரிலீஸ் அன்னிக்கு ஆனந்த தொல்லை படத்தை ரிலீஸ் பண்றேன்னு சவால் விட்டாரு.. இந்த டீசெர் பார்த்த பவர் ஸ்டார் படம் ஹிட் ஆகிடும் போல இருக்கே.
saravanakumar - aruppukottai,இந்தியா
12 செப்,2013 - 10:56
saravanakumar மொக்கையா இருக்கு
ahamed - nellai,இந்தியா
12 செப்,2013 - 10:52
ahamed ரஜினி வாழ்வில் மற்றொரு தோல்வி படம் போல் தெரிகிறது
krish - thrissur  ( Posted via: Dinamalar Android App )
12 செப்,2013 - 10:37
krish its not a animation its cartoon
12 செப்,2013 - 10:21
தமிழ்நாடு காங்கிரஸ் (நக்மா கோஷ்டி) இந்தியா வளர்ச்சி பாதையில் சென்றுகொண்டிருக்கிறது ...என்பதற்கு இதுவே சான்று ...ஜெய்ஹிந்த்
ARUNAGIRI - Bangalore,இந்தியா
12 செப்,2013 - 09:29
ARUNAGIRI 2 நிமிஷம் ஓடுற டீசர வச்சி ஒரு படத்த தீர்மானிக்க முடியாது. பொறுத்திருந்துதான் பார்க்கணும். ஆனால் எனக்கு என்னவோ இது பெரிய அளவுல ஹிட் ஆகும்-னு தோனல.. காரணம் அந்த இன்டர்நேஷனல் குவாலிட்டி லைட்டிங், கிளாரிட்டி எல்லாமே மிஸ்ஸிங்.
Mani J - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
12 செப்,2013 - 09:03
Mani J Not upto the mark... Games Graphics are much better than this,,,
balaganesan - vadugapatti,இந்தியா
12 செப்,2013 - 06:49
balaganesan சுல்தான் தி வார்ரியர் 5 வருசம் முன்னாடி வந்தது. இப்ப கோச்சடையான் ஆகிவிட்டது
Rams - Trichy ,இந்தியா
12 செப்,2013 - 04:53
Rams அவதார், டின் டின் படங்களுடைய தரம் இல்லை .... ஒரு கார்ட்டூன் படம் போன்று உள்ளது...
vanth - india  ( Posted via: Dinamalar Android App )
11 செப்,2013 - 22:09
vanth waste of money if shankar had this much money that would better film for rajini..
jaichitra - jolarpet  ( Posted via: Dinamalar Android App )
11 செப்,2013 - 21:22
jaichitra I am very eager to saw a superstar film.
saazz - Chennai,இந்தியா
11 செப்,2013 - 20:12
saazz மோசமான cg work அவதார்இல் 1% கூட வராது
arun - banglore  ( Posted via: Dinamalar Android App )
11 செப்,2013 - 19:41
arun ஆவலுடன் எதி்ர்பார்கிறேன்
Iniya - Viluppuram,இந்தியா
11 செப்,2013 - 18:57
Iniya டீசெர் னா இன்னா பா?? புதுசா கீது ?
Angry ஜெய் - Srivilliputtur,இந்தியா
11 செப்,2013 - 18:43
Angry ஜெய் இது சரியில்லை தலைவா .... வீடியோ கேம்ஸ் மாதிரி இருக்கு , உங்க பொண்ணுங்களால உங்களுக்கு தொல்லை தான் ... ஆனந்த தொல்லை
D.Devendran - Bangalore,இந்தியா
11 செப்,2013 - 18:21
D.Devendran What a funny teaser,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,watch to so funny then kids cartoon ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
D.Devendran - Bangalore,இந்தியா
11 செப்,2013 - 18:19
D.Devendran mookka padam,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
itashokkumar - Trichy,இந்தியா
11 செப்,2013 - 17:14
itashokkumar பிரமாதம் போங்கள். படம் பார்க்க தேவையில்லை.
Jawahar - Erode,இந்தியா
11 செப்,2013 - 17:06
Jawahar நானும் பார்த்தேன். அப்படி ஒன்றும் சிறப்பாக இல்லை.
11 செப்,2013 - 15:18
Dr.vijay SSLC fail (10 times..but seekiram pass aaiduven)) கிராபிக்ஸ் தானே ..இளமையாக என்ன சிறுவனாக கூட காண்பிக்க முடியும்....superstar அவர்களே ...நாங்கள் உங்களை 80 வயது ஆனாலும் உங்களை ரசிப்போம்.....எங்களுக்கு கிராபிக்ஸ் விட ..உங்கள் நிஜ படங்கள் தான் வேண்டும்...
Advertisement
தொடர்புடைய வீடியோக்கள்
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Mapla Singam
  Tamil New Film Maari
  • மாரி
  • நடிகர் : தனுஷ்
  • நடிகை : காஜல் அகர்வால்
  • இயக்குனர் :பாலாஜி மோகன்
  Tamil New Film Karai Oram
  • கரை ஓரம்
  • நடிகர் : கணேஷ் பிரசாத்
  • நடிகை : நிகிஷா படேல்
  • இயக்குனர் :ஜே.கே.
  Tamil New Film Bahubali
  • பாகுபலி
  • நடிகர் : பிரபாஸ் ,701
  • நடிகை : அனுஷ்கா ,12
  • இயக்குனர் :எஸ்.எஸ்.ராஜமவுலி

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2015 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in