Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இந்திய சினிமா நூற்றாண்டு விழா: முதல்வர் துவக்கி வைக்கிறார் ; விழாக்கோலம் பூணும் சென்னை!!

10 செப், 2013 - 14:10 IST
எழுத்தின் அளவு:

 இந்திய சினிமா நூற்றாண்டு விழாவை, தமிழக முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைக்கிறார். விழாவில், ஜனாதிபதி மற்றும் மூன்று மாநில முதல்வர்கள் பங்கேற்கின்றனர். இதுகுறித்து சென்னையில் நேற்று, தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபைத் தலைவர் கல்யாண், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கேயார் ஆகியோர் கூறியதாவது: இந்திய சினிமா நூற்றாண்டு விழா, சென்னையில், வரும், 21ம் தேதியில் இருந்து, 24ம் தேதி வரை, நேரு உள்விளையாட்டு அரங்கில் நடக்கிறது. முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைக்கிறார். தமிழ் சினிமா உலகத்தினரின் நிகழ்ச்சிகள் நடக்கின்றன. அனைத்து சினிமா உலகத்தினரும் பங்கேற்கும் கலை நிகழ்ச்சி, 24ம் தேதி மாலை, 5:30 மணிக்கு நடக்கிறது. இதில், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, கேரளா, ஆந்திரா மற்றும் கர்நாடக மாநில முதல்வர்கள், அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர்.

விழாக்கோலம் பூணும் சென்னை


சினிமா நூற்றாண்டு விழாவின் முன் நிகழ்வுகளாக சென்னை நகரத்தில் பொது பூங்காக்களை ஒலி-ஒளியினால் அலங்கரித்து, அதில் சினிமா கலை நிகழ்ச்சிகள் நடத்த இருக்கிறோம். பழைய சினிமா படங்களும் திரையிடப்படும். சென்னை கடற்கரையிலும் பழைய சினிமா படங்கள் திரையிட்டு காண்பிக்கப்படும். சென்னை நகரமே விழாக்கோலம் பூணும்படி, நகரை சிறப்பாக அலங்கரிக்க இருக்கிறோம்.

இலவச படக்காட்சிகள்

சென்னை சத்யம், அபிராமி ஆகிய திரையரங்குகளில் வருகிற 19-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை பொதுமக்களுக்கு பழைய சினிமா படங்கள் இலவசமாக காட்டப்பட இருக்கிறது.

படப்பிடிப்புகள் ரத்து

நான்கு நாட்களும், நிகழ்ச்சிகள், காலை, 9:00 மணியில் இருந்து, மதியம், 1:00 மணி வரையும், மாலை, 5:30 மணியில் இருந்து இரவு, 10:30 மணி வரையும் நடக்கின்றன. தமிழகம் முழுவதும், வரும், 24ம் தேதி, சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. வரும், 18ம் தேதியில் இருந்து, 24ம் தேதி வரை படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

Karunai illaa Nidhi - Kopalapuram,பாகிஸ்தான்
11 செப், 2013 - 15:15 Report Abuse
Karunai illaa Nidhi பொருளாதார வளர்ச்சி நோக்கி நகரும்/ஓடும் மனித வாழ்வில் ஆங்காங்கே சிறிது பொழுது போக்கிற்கும் நேரம் ஒதுக்கத்தான் வேண்டும். அந்த வகையில் சினிமாவின் தேவை அவசியமே... இப்போது தொலைக்காட்சியும் இணையமும் பெருமளவில் பொழுது போக்கிற்கு பயன்பட்டாலும், கடந்த 10- 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை சினிமாவே மக்களின் மிகப்பெரும் பொழுது போக்கு ஊடகமாய் இருந்து வந்திருக்கிறது. குறிப்பாக கிராமப்புற மக்களிடையே.... எனவே பூபதியார் சொல்வது போல் எல்லா படங்களும் மக்களையும் சமுதாயத்தையும் சீரழிப்பதில்லை... நல்ல திரைப்படங்கள் இன்னமும் வந்துகொண்டு தான் இருக்கின்றன... (மிக சமீப உதாரணம் "தங்க மீன்கள்") சமுதாயத்துக்கு நல்ல ஒரு தகவலை கொண்டு சேர்க்கும் ஊடகமாய் சினிமாவும் உள்ளது. அரசாங்கம் ஒவ்வொரு ஆண்டும் இதற்கு செலவு செய்தால் அது தவறு. ஆனால் நூற்றாண்டு விழா என்பது மிகப்பெரிய மைல்கல். எனவே இம்முயற்சியை பாராட்டுவோம். நல்ல படங்களை வரவேற்போம்...இன்னும் நூறாண்டு காலத்துக்கு நம் சினிமா வாழும் என்பதே என் கருத்து...
Rate this:
Duri Kuppusami - chennai ,இந்தியா
11 செப், 2013 - 13:37 Report Abuse
Duri Kuppusami இதெல்லாம் வீண் செலவு என்று சொல்வதை ஏற்க முடியாது ............இந்திய சினிமா மேன் மேலும் சாதனை படைக்க வாழ்த்துக்கள் ..........
Rate this:
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
15 செப், 2013 - 20:42Report Abuse
சு கனகராஜ் நடக்கட்டும்...
Rate this:
p.boopathy enkira Boopathiyar - chennai,இந்தியா
11 செப், 2013 - 10:35 Report Abuse
p.boopathy enkira Boopathiyar சினிமா கற்பனை கலையை எந்த வகையிலும் பாராட்ட படவேண்டிய துறையும் அல்ல.., அரசு நன்கு இதனை உணர்த்து சினிமா நூறாண்டு விழாவை கைவிடவேண்டும்.., மக்களிடையே பான்பராக்..,புகை பழக்கம்..,குடிபழக்கம் போன்ற தீய பழக்கங்களும் வளரவும், பண்பாடு கலாச்சாரம் மிகுந்த சீரழிவு சினிமா ஏற்படுத்தியது எனலாம்..,ஈவ் டீசிங்..,பெண் வன்கொடுமைகள் நிழல் கலை அருமையாக வளர்த்துள்ளது சினிமா படங்களின் மூலம் தெரிந்து கொள்ளலாம். மேலும் காவல்துறையும் சட்டத்தையும் அவமரியாதை ஏற்படுத்திய சமுக தீமை சினிமா..,மக்களுக்கு சினிமா நூறாண்டு விழா மனநிறைவை ஏற்படுத்தாதுஇனி சினிமா மக்கள் பார்வையில் மெல்ல சாகும்
Rate this:
p.boopathy enkira Boopathiyar - chennai,இந்தியா
10 செப், 2013 - 15:34 Report Abuse
p.boopathy enkira Boopathiyar சினிமா கற்பனை நிழல் கலை பொழுது போக்கிற்காக மக்களை இருட்டில் படம்பார்க்க வைத்து மக்கள் அறியாமை தவறாக பயன்டுத்தி நல்ல பண வெளிச்சத்தில் சினிமா உலகம் வாழ்கிறது.சமுக பிரச்சனைகளுக்கு காரணமான சினிமா படங்கள் விழா என்ற பெயரில் இலவச காட்சிகளை மீண்டும் சினிமா பார்க்க வைக்க முடியாது மக்கள் நிஜத்துக்கும் நிழலுக்கும் சரியான வேறுபாட்டு இடைவெளியை உணர்த்து வருகின்றனர்.சினிமா விழாக்கள் மக்கள் பார்வை முன் இனி ஜீரோ தான் இதற்காக அரசு பணம் விழா செலவு வீண் தான் சினிமாவால் எந்த சமுதாயம் மாற்றம் ஏற்படவில்லை. சமுதாயத்தை சீரழித்த சினிமாவிற்கு ஒரு நூறாண்டு விழா தேவையா மக்கள் மனம் யோசிக்கிறது சினிமா நிழல்கலைக்கு ஒரு முற்றுபுள்ளி ஏற்படத்தான் போகிறது அன்று முதல் நாடும் வீடும் நன்மைகள் பெறும்.., பூபதியார்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in