இந்திய சினிமா நூற்றாண்டு விழா: முதல்வர் துவக்கி வைக்கிறார் ; விழாக்கோலம் பூணும் சென்னை!! - CM Jayalalitha to inaugurates Indian cinema 100 year celebration Function in Chennai
Advertisement

சிறப்புச்செய்திகள்

ஜெயலலிதாவின் மறைவு அகிலத்துக்கும் பேரிழப்பு - தாணு | அமைதியாய் உறங்குங்கள் இரும்புப் பெண்மணி : திரைத்துறையினர் இரங்கல் | ஜெயலலிதாவிற்கு திரையுலகினர் அஞ்சலி | ஜெயலலிதாவிற்கு ரஜினிகாந்த் குடும்பத்துடன் அஞ்சலி | இன்னல்களை கடந்து சாதனை புரிந்த தலைவர் ஜெயலலிதா : அஜித் | நாடே தனது வீரப் புதல்வியை இழந்து தவிக்கிறது - ரஜினி | ஜெயலலிதா என்ற ஒரு சகாப்தம் நிறைவுபெற்றது - நடிகர் சங்கம் அஞ்சலி | சாந்தனு ஒரு ரியல் ஹீரோ!- விஷால் | கே.பாக்யராஜ்-பூர்ணிமாவுக்கு நான்தான் கல்யாண புரோகிதர்! -சுகாசினி | சந்தியாவின் மகளாய்ப் பிறந்தார்; இந்தியாவின் மகளாய் மறைந்தார்; வைரமுத்து இரங்கல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இந்திய சினிமா நூற்றாண்டு விழா: முதல்வர் துவக்கி வைக்கிறார் ; விழாக்கோலம் பூணும் சென்னை!!

10 செப்,2013 - 14:10 IST
எழுத்தின் அளவு:

 இந்திய சினிமா நூற்றாண்டு விழாவை, தமிழக முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைக்கிறார். விழாவில், ஜனாதிபதி மற்றும் மூன்று மாநில முதல்வர்கள் பங்கேற்கின்றனர். இதுகுறித்து சென்னையில் நேற்று, தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபைத் தலைவர் கல்யாண், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கேயார் ஆகியோர் கூறியதாவது: இந்திய சினிமா நூற்றாண்டு விழா, சென்னையில், வரும், 21ம் தேதியில் இருந்து, 24ம் தேதி வரை, நேரு உள்விளையாட்டு அரங்கில் நடக்கிறது. முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைக்கிறார். தமிழ் சினிமா உலகத்தினரின் நிகழ்ச்சிகள் நடக்கின்றன. அனைத்து சினிமா உலகத்தினரும் பங்கேற்கும் கலை நிகழ்ச்சி, 24ம் தேதி மாலை, 5:30 மணிக்கு நடக்கிறது. இதில், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, கேரளா, ஆந்திரா மற்றும் கர்நாடக மாநில முதல்வர்கள், அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர்.

விழாக்கோலம் பூணும் சென்னை


சினிமா நூற்றாண்டு விழாவின் முன் நிகழ்வுகளாக சென்னை நகரத்தில் பொது பூங்காக்களை ஒலி-ஒளியினால் அலங்கரித்து, அதில் சினிமா கலை நிகழ்ச்சிகள் நடத்த இருக்கிறோம். பழைய சினிமா படங்களும் திரையிடப்படும். சென்னை கடற்கரையிலும் பழைய சினிமா படங்கள் திரையிட்டு காண்பிக்கப்படும். சென்னை நகரமே விழாக்கோலம் பூணும்படி, நகரை சிறப்பாக அலங்கரிக்க இருக்கிறோம்.

இலவச படக்காட்சிகள்

சென்னை சத்யம், அபிராமி ஆகிய திரையரங்குகளில் வருகிற 19-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை பொதுமக்களுக்கு பழைய சினிமா படங்கள் இலவசமாக காட்டப்பட இருக்கிறது.

படப்பிடிப்புகள் ரத்து

நான்கு நாட்களும், நிகழ்ச்சிகள், காலை, 9:00 மணியில் இருந்து, மதியம், 1:00 மணி வரையும், மாலை, 5:30 மணியில் இருந்து இரவு, 10:30 மணி வரையும் நடக்கின்றன. தமிழகம் முழுவதும், வரும், 24ம் தேதி, சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. வரும், 18ம் தேதியில் இருந்து, 24ம் தேதி வரை படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement
விமல் - சமுத்திரகனி இணையும் நீயெல்லாம் நல்லா வருவடா...!!விமல் - சமுத்திரகனி இணையும் ... தயாரிப்பாளர் சங்க தேர்தல் முடிவுகள் நியாயமற்றது - தாணு பேட்டி தயாரிப்பாளர் சங்க தேர்தல் முடிவுகள் ...


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film koodita edangalai nirapuga
    Tamil New Film s 3
    • சி-3
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அனுஷ்கா ,ஸ்ருதி ஹாசன்
    • இயக்குனர் :ஹரி
    Tamil New Film Bogan
    • போகன்
    • நடிகர் : ஜெயம் ரவி
    • நடிகை : ஹன்சிகா மோத்வானி
    • இயக்குனர் :லக்ஷ்மண்
    Tamil New Film Pattinapakkam

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2016 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in