ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
அயன், கோ, மாற்றான் போன்ற மாறுபட்ட படங்களை இயக்கியவர் கே.வி.ஆனந்த். தனது படங்களுக்கு வித்தியாசமான லொகேஷன்கள் பார்ப்பது மட்டுமின்றி, கதாநாயகிகள் விசயத்தில் அதிக ஈடுபாடு காட்டுவார் ஆனந்த். அந்த வகையில், தமன்னா, காஜல்அகர்வால், கார்த்திகா போன்ற நடிகைகளை தனது படங்களில் நடிக்க வைத்தவர், இப்போது தனுஷைக்கொண்டு இயக்கி வரும் அனேகன் படத்துக்காகவும் பல மாதங்களாக கதாநாயகி வேட்டை நடத்தி வந்தார்.
தென்னிந்தியாவில் உள்ள எந்த கதாநாயகியும் தனது கதைக்கு பொருந்தமாட்டார்கள் என்று மும்பைக்கு சென்று முகாமிட்டிருந்தார். அப்போது இஷ்க் என்ற இந்தி படத்தில் நடித்திருந்த அமிரா அவரது கண்ணில் தென்பட, நான் இந்த மாதிரியொரு தேவதையைத்தான் தேடிக்கொண்டிருந்தேன் என்று உடனடியாக அவரை ஒப்பந்தம் செய்து சென்னைக்கு அழைத்து வந்து விட்டார்.
இருப்பினும், அவருக்கு கதையும், அவர் நடிக்க வேண்டிய கதாபாத்திரத்தையும் பற்றி விளக்கிய கே.வி.ஆனந்த், இப்போது 1980-90 களில் வெளியான முக்கியத்துவம் வாய்ந்த சில படங்களை பார்த்து தான் நடிக்க வேண்டிய கேரக்டரை மெருகேற்றிக்கொள்ளுமாறு அவருக்கு ஆர்டர் போட்டுள்ளாராம். அதனால், தற்போது தான் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்படாததால், வீட்டில் இருந்தபடியே அவர் சொன்ன படங்களை போட்டு பார்த்துக்கொண்டிருக்கிறாராம் அமிரா.