'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
நாளை வெளியாக இருந்த விஷாலின் மதகஜராஜா படம் அடுத்தவாரத்திற்கு தள்ளிபோய் இருக்கிறது. சுந்தர்.சி இயக்கத்தில், விஷால் நடித்துள்ள படம் மதகஜராஜா. இப்படத்தில் விஷால் ஜோடியாக அஞ்சலி, வரலட்சுமி நடித்துள்ளனர். இவர்களுடன் காமெடியில் சந்தானமும் கலக்கி இருக்கிறார். காமெடி ப்ளஸ் ஆக்ஷ்ன் நிறைந்த கமர்ஷியல் படமாக இப்படம் உருவாகி இருக்கிறது. இப்படம் நாளை(செப்., 6ம் தேதி) சுமார் 800 தியேட்டர்களில் ரிலீஸ் ஆவதாக இருந்தது. இப்படத்தை விஷாலே தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி சார்பில் வெளியிட இருந்தார். இந்நிலையில் ஜெமினி பிலிம்ஸ்க்கும், விஷால் தரப்புக்கும் கொடுக்கல், வாங்கலில் சிறு பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனால் படத்தை ரிலீஸ் செய்ய கூடாது என்றும் ஜெமினி பிலிம்ஸ் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. இதனால் மதகஜராஜா படம் நாளை வெளியாகவில்லை. மாறாக செப். 9ம் தேதி அல்லது 13ம் தேதி ரிலீஸ் செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
இதற்கிடையே தொடர்ந்து 10 நாளாக இரவு-பகல் என்று பாராமல் ஷூட்டிங் மற்றும் பட புரொமஷன் வேலைகளில் விஷால் இருந்ததால் அவருக்கு உடல்நலம் சரியில்லாமல் போனது. இதனால் அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பியுள்ளார். இதுகுறித்து விஷால் கூறியுள்ளதாவது, ‘பாண்டியநாடு படத்துக்காக கடந்த 10 நாட்கள் தொடர்ச்சியாக படப்பிடிப்பில் கலந்து கொண்டேன். அதேப்போல் ‘மதகஜராஜா படத்துக்காகவும், புரமோஷன் வேலைகளுக்காக பல்வேறு மீடியாக்கள் மற்றும் வெளியூர்களுக்கு சென்று வந்தேன். இதனால் மனஉளைச்சல் ஏற்பட்டு என் உடலுக்கும், மனதுக்கும் ஓய்வு கிடைக்கவில்லை. ஆகையால் உடல் பரிசோதனைக்காக ஒரு தனியார் மருத்துவமனைக்கு சென்றேன். என்னை பரிசோதித்த டாக்டர்கள் எனக்கு முழுமையான ஓய்வு தேவை என்று சொன்னார்கள். அவர்கள் அறிவுரைப்படி தற்போது நான் முழு ஓய்வில் இருக்கிறேன். மற்றபடி என் உடம்புக்கு எந்த பிரச்னையும் இல்லை. நல்ல உடல் ஆரோக்கியத்துடன்தான் இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.