இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் |
ஒரு காலத்தில் ஒல்லிபிச்சானியாக இருந்த நளினி, இப்போது பம்ப்ளிமாஸ் நடிகையாகிவிட்டார். காமெடி கேரக்டர்களில் நடித்து வருகிறார். நடன குடும்பத்தைச் சேர்ந்த நளினியும் ஒரு டான்சர். நீண்ட நாட்களுக்கு பிறகு ஜாக்கி என்ற படத்தில் ஒரு பாட்டுக்கு ஆட்டம் போட்டிருக்கிறார்.
சாட்டை படத்தில் நடித்த யுவன் நடித்து வரும் படம் ஜாக்கி, தர்ஷிதா என்ற நியூபேஸ் ஹீரோயின். கேமராமேன் ரவி, மியூசிக் டைரக்டர் ஸ்ரீகாந்த் தேவா, கோவை ரவிராஜன் என்பவர் டைரக்ட் செய்கிறார். நளினி ஆட்டம் பற்றி அவர் இப்படிச் சொல்கிறார் "ஆளுதான் கொஞ்சம் வெயிட் போட்டுடாங்களே தவிர அந்த டான்ஸ் திறமை அப்படியே இருக்கு. அதை யூஸ் பண்ணிக்க நினைச்சோம். அவர்கிட்ட சொன்னப்போ ஆட நான் ரெடி அதை பார்க்க ரசிகர்கள் ரெடியான்னு நீங்கதான் முடிவு பண்ணனும் என்றார். தைரியாமா முடிவெடுத்து ஆட வச்சிருக்கோம். ஒரு வளைகாப்பு பாடல் அது. இனி வளைகாப்பு நிகழ்ச்சிகளில் அந்த பாட்டுதான் ஒலிக்கும்" என்கிறார். கோவை ரவிராஜன்.