Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரஜினியின் கோச்சடையான் படத்தின் முதல் டீஸர் செப்-9-ல் வெளியீடு!!

01 செப், 2013 - 16:31 IST
எழுத்தின் அளவு:

 மிகவும் எதிர்பார்ப்புக்கு உள்ளாகி இருக்கும் ரஜினியின், கோச்சடையான் படத்தின் முதல் டீஸர் வருகிற செப்டம்பர் மாதம் 9ம் தேதி ரிலீஸ் செய்ய இருப்பதாக படத்தின் இயக்குநர் செளந்தர்யா டுவிட்டரில் கூறியுள்ளார். எந்திரன் படத்திற்கு பிறகு ரஜினி உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, பின்னர் அதிலிருந்து மீண்டு வந்து நடித்துள்ள படம் கோச்சடையான். அனிமேஷன் படமாக 3டி தொழில்நுட்பத்தில் இப்படம் உருவாகி வருகிறது. மேலும் அவதார், டின் டின் போன்ற ஹாலிவுட் படங்களின் பாணியில் மோஷன் கேப்சரிங் தொழில்நுட்பத்தில் உருவாகும் முதல் இந்திய திரைப்படம் இதுவாகும்.

இப்படத்தில் ரஜினி அப்பா-மகன் என இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். ரஜினி ஜோடியாக தீபிகா படுகோனே நடித்துள்ளார். இவர்களுடன் சரத்குமார், ஆதி, நாசர், இந்தி நடிகர் ஜாக்கி ஷெரப், ருக்மணி, ஷோபனா என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மொழிகளில் இப்படம் ரிலீஸாக இருக்கிறது. தற்போது இப்படத்தின் ஷூட்டிங் எல்லாம் முடிந்து கிராபிக்ஸ் உள்ளிட்ட போஸ்ட் புரொடாக்ஷ்ன் வேலைகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் முன்னதாக இப்படத்‌தின் டிரைலர் வெளியீட்டை சமீபத்தில் நடந்த கேன்ஸ் திரைப்பட விழாவில் வெளியிட திட்டமிட்டு இருந்தார்கள். ஆனால் டிரைலர் எதிர்பார்த்தபடி வராததால் அந்த முடிவை கைவிட்டனர். இதனிடையே இப்படத்தின் டிரைலரோ, இசை வெளியீடோ எப்போதும் நடக்கும் என்று அறிவிக்கப்படாமல் இருந்த நிலையில், படத்தின் முதல் டீசர் இன்னும் ஒருவார காலத்தில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து படத்தின் இயக்குநரும், நடிகர் ரஜினியின் மகளுமான செளந்தர்யா டுவிட்டரில் கூறியுள்ளதாவது, கோச்சடையான் படத்தின் டீஸர் வரும் செப்., 9ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்த நேரத்தில் இதை அறிவிப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் என்று கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (11) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (11)

mark - mumbai  ( Posted via: Dinamalar Windows App )
02 செப், 2013 - 23:27 Report Abuse
mark இந்த பில்டப்பு ஒன்னும் கொறச்சலே இல்லை. தாத்தா ஆனாலும் கதாகாயகன் தானா
Rate this:
saranyabala - chennai  ( Posted via: Dinamalar Android App )
02 செப், 2013 - 18:15 Report Abuse
saranyabala thanks thaliava. aayiram kaigal unnai thaduthalum, aathavan kuda maraiyalam. thalaiva nee maraivathumillai, yen manathillirunthu maraivathum illai..... nee needudi vaazha vendum. iravan unnudan, un ninaivu yengaludan.......
Rate this:
GANAPATHI V - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
02 செப், 2013 - 13:28 Report Abuse
GANAPATHI V எதுக்கு இந்த பில்டப் படம் அவுட் ..... .......
Rate this:
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
02 செப், 2013 - 11:54 Report Abuse
Pugazh V மீண்டும் தமிழர்கள் ஆஹா ஓஹோ என்று பெனாத்துவார்கள். ஒருவேளை, மீண்டும் அரசியலுக்கு வருவேன், ஆனா இப்போ இல்ல, ஆண்டவன் செயல், காலத்தின் செயல் என்று பாலா பிட்டுகளை ரஜினி போட்டு எப்படியாவது டப்பா படமாக இருந்தாலும் கல்லா கட்டப் போகிறார். வெட்கம் கெட்ட ஜனம் வழித்துக் கொண்டு ஓடும்.
Rate this:
Jawahar - Erode,இந்தியா
02 செப், 2013 - 10:58 Report Abuse
Jawahar காத்திருந்து காத்திருந்து இந்த படம் மேல் துளி கூட ஆர்வம் இல்லாமல் போய் விட்டது.. நீங்க படத்த ரிலீஸ் பண்ணினா கூட பாக்கணும்நு ஆர்வம் மக்களுக்கு இல்லை. தங்க மீன்கள், இரண்டாம் உலகம் போன்ற நல்ல படங்கள் உள்ளன.. அவற்றை பார்போம்.
Rate this:
மேலும் 6 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in