சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி |
"கோவா, பலே பாண்டியா உட்படசில படங்களில், நடித்த பியாவுக்கு, "கோ படத்துக்கு பின், கோலிவுட்டில் சரியான படங்கள் இல்லை. அதனால், பக்கத்து மாநிலங்களுக்கு வாய்ப்புத் தேடி படையெடுத்த போது, "தளம் என்ற தெலுங்கு படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த படம், தற்போது, தமிழ் பேச தயாராகி வருகிறது. நக்சலைட்டுகளை மையப்படுத்தி உருவாகியுள்ள, இப்படத்தில் ஒரு சஸ்பென்சான வேடத்தில் நடித்துள்ளாராம் பியா. இதனால், மகிழ்ச்சி அடைந்துள்ள பியா, "தமிழில், இதுவரை கிளாமரான வேடங்களில் மட்டுமே நடித்துள்ளேன். ஆனால், இந்த படத்தில் ஆக்ஷன்அவதாரம் எடுத்துள்ளேன். இந்த படத்தில், என் நடிப்பும், ஆக்ஷனும், தமிழ் ரசிகர்களுக்கு புது அனுபவத்தை தரும் என்கிறார். பியாவின் ஆசை நிறைவேறுமா என்பது, படம் வெளியானதும் தான், தெரிய வரும்.