Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கப்பலில் நடந்த நான்தான்டா ஆடியோ ரிலீஸ் விழா!!

29 ஆக, 2013 - 17:41 IST
எழுத்தின் அளவு:

சினிமா படம் தயாரிப்பவர்கள் எந்தளவுக்கு படத்தை உருவாக்க செலவழிப்பார்களோ, அதே அளவு அப்படத்தின் பப்ளிசிட்டிக்கும் நிறைய செலவழிப்பார்கள். சிலர் தங்களது படத்தின் ஆடியோ விழாவை ரொம்ப எளிமையாக நடத்துவார்கள், சிலர் வெளிநாடுகளுக்கெல்லாம் சென்று நடத்துவார்கள், இன்னும் சிலர் பொது மக்கள் முன்னிலையிலோ அல்லது தனியார் எப்.எம். ரேடியோ நிலையத்திலோ வைத்து வெளியிடுவார்கள். இங்கே ஒரு படக்குழு கப்பிலில் வைத்து படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை நடத்தி அமர்க்களப்படுத்தியிருக்கிறார்கள்.

பிரபல டைரக்டர் ராம்கோபால் வர்மா நான்தான்டா என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் ஹீரோவாக எங்கேயும் எப்போதும் சர்வானந்தும், அனைகா என்ற புதுமுகம் நடிக்கிறார்கள். சதீஸ் தயாரித்துள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீஸ்க்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழாவை வித்தியாசமாக நடத்தியுள்ளனர். சென்னையில் இருந்து அந்தமான் செல்லும் கப்பலில் நான்தான்டா படத்தின் ஆடியோவை வெளியிட்டுள்ளனர். ஆடியோ சி.டி.யை கப்பலின் கேப்டன் வெளியிட அதனை தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி மற்றும் இயக்குநர் பாரதிராஜா பெற்றுக்கொண்டனர். இந்த விழாவின்போது இயக்குநர்கள் விக்ரமன், ஆர்.கே.செல்வமணி உள்ளிட்ட பிரபலங்களும் கலந்து கொண்டனர்.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

சு கனகராஜ் - chennai -33,இந்தியா
30 ஆக, 2013 - 20:40 Report Abuse
சு கனகராஜ் தண்ணில மிதந்துகிட்டே வெளியிட்டங்களோ
Rate this:
DUBAKKUR RAVI - chennai,இந்தியா
01 செப், 2013 - 17:48Report Abuse
DUBAKKUR RAVIஅவங்க ஒன்னும் உன்ன மாதிரி குடிகார கோவிந்து இல்ல...
Rate this:
Angry ஜெய் - Srivilliputtur,இந்தியா
29 ஆக, 2013 - 19:39 Report Abuse
Angry ஜெய் படம் ஓடும் என அவனுகளுக்கே தெரிஞ்சு இருந்தா விழா சிம்பிளா இருக்கும் , இல்லைனா இப்டி தான் கப்பலிலும் கட்டுமரத்திலும் ரிலீஸ் பண்ணனும்
Rate this:
kalugu - palladam  ( Posted via: Dinamalar Android App )
29 ஆக, 2013 - 19:23 Report Abuse
kalugu நல்லாயிருப்பீங்க படத்தையும் கப்பலிலே ரிலீசுபண்ணிட்டா தேவல ! இந்த படத்தை பார்த்து பைத்தி்யம் பிடிக்காமல்இருக்கலாம்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in