மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் |
சாமி இயக்கி வரும் புதிய படம் கங்காரு. அமைதிப்படை படத்தை தயாரித்த வி ஹவுஸ் நிறுவனம் தயாரிக்கிறது. உயிர் படத்தில் அண்ணி கொழுந்தன் உறவையும், சிந்து சமவெளி படத்தில் மாமனார் மருமகள் உறவையும் காமத்தை மையமாக எடுத்த சாமி ஒரு மலை கிராமத்தில் வாழும் அண்ணன், தங்கை உறவை, பாசத்தை வைத்து எடுத்துவரும் படம். இதற்காக கொடைக்கானல் மலை உச்சியில் சுமார் 30 லட்சம் செலவில் தோட்டாதரணி ஒரு கிராமத்து செட் போட்டுள்ளார். அதில்தான் இதுவரை 80 சதவீத ஷுட்டிங் முடிந்துள்ளது. இன்னும் இரண்டு பாடல்கள் மட்டுமே பாக்கி உள்ளது.
அர்ஜுனா என்ற நியூ பேஸ் நடிக்கிறார். அவருக்கு தங்கையாக பிரியங்காவும், காதலியாக வர்ஷாவும் நடிக்கிறார்கள். ‘‘அன்பை மையமாக வைத்து பின்னப்பட்ட கதை இது. எந்தவித செக்ஸ் காட்சிகளும் இல்லாமல் குடும்பத்தோடு உட்கார்ந்து ரசிக்கும் படமாகவும், இளைஞர்கள் ரசிக்கும் படமாகவும் இருக்கும்’’ என்று அடித்துச் சொல்கிறார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.