Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தமிழகத்தில் தலைவா ரிலீஸானது - ரசிகர்கள் கொண்டாட்டம்

20 ஆக, 2013 - 11:33 IST
எழுத்தின் அளவு:

தமிழகத்தில் 10 நாள் தாமதத்திற்கு பின்னர் விஜய்யின் தலைவா படம் ரிலீஸானது. படம் ரிலீஸானதை தொடர்ந்து விஜய்யின் ரசிகர்கள் அவரது பேனர்கள், கட்-அவுட்டுகளுக்கு பால் அபிஷேகம் செய்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். துப்பாக்கி படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு விஜய் நடித்துள்ள படம் தலைவா.  அமலாபால் ஹீரோயின், மதராஸபட்டினம் டைரக்டர் விஜய் இயக்கியுள்ளார். ஜீ.வி.பிரகாஷ் குமார் இசை, மிஷ்ரி புரொடக்ஷ்ன்ஸ் சார்பில் சந்திர பிரகாஷ் ஜெயின் இப்படத்தை தயாரித்து இருந்தார்.

தமிழகத்தில் சிக்கல்

தலைவா படம் ஆகஸ்ட் 9ம் தேதியே உலகம் முழுக்க வெளியானது. ஆனால் தமிழகத்தில் தியேட்டர் அதிபர்களுக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல், படத்தில் சர்ச்சைக்குரிய அரசியல் வசனங்கள் இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டு, யு சான்று பெற்றும் வரிவிலக்கு கிடையாது என தமிழக அரசு அறிவிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால் இப்படம் ரிலீஸாகவில்லை. மேலும் படத்தை ரிலீஸ் செய்வது தொடர்பாக விஜய் கோடநாடு சென்று முதல்வரை சந்திக்க சென்ற போது அனுமதியும் மறுக்கப்பட்டது.

விஜய் நம்பிக்கை

அதேசமயம், தலைவா படம் நிச்சயம் வெளியாகும்; அதற்கு தமிழக முதல்வர் தகுந்த நடவடிக்கை எடுப்பார்; அதுவரை ரசிகர்கள் பொறுமையாக இருக்க வேண்டும் என விஜய் நம்பிக்கை கூறினார். மேலும் தயாரிப்பாளர் சந்திர பிரகாஷ் ஜெயினும், முதல்வர் தலையிட்டு படத்தை வெளியிட வேண்டும் எனவும், படம் வெளிவராவிட்டால் நான் பெரும் கடனாளியாவேன் எனவும் கண்ணீர் மல்க பேட்டி கொடுத்தார்.

உண்ணாவிரதம் இருக்க முடிவு

இதற்கிடைய தலைவா படம் வெளியாகாததால் விஜய், அமலாபால், சந்தானம், இயக்குநர் விஜய், தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின் உள்ளிட்டோர் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்தனர். ஆனால் அதற்கும் அனுமதி மறுக்கப்பட்டது.

தயாரிப்பாளருக்கு நெஞ்சு வலி

தலைவா படம் வெளியாகாததால் மன உளைச்சலுக்கு ஆளான தயாரிப்பாளர் சந்திர பிரகாஷ் ஜெயினுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ரிலீஸ்க்கு சம்மதம்

இந்நிலையில் தொடர்ந்து, வினியோகஸ்தர் - தியேட்டர் உரிமையாளர்கள் இடையே, பட வெளியீடு குறித்து, இரண்டு நாட்களாக பேச்சுவார்த்தை நடந்தது. பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டு, 20ம் தேதி தமிழகம் முழுவதும் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, தியேட்டர்களில், நேற்று முன்தினம் முதல் டிக்கெட் முன்பதிவு துவங்கப்பட்டது.

ரிலீஸானது - ரசிகர்கள் கொண்டாட்டம்

இதனையடுத்து 10நாள் தாமதத்திற்கு பிறகு தலைவா படம் இன்று(ஆகஸ்ட் 20ம் தேதி) தமிழகத்தில் ரிலீஸானது. தமிழகத்தில் சுமார் 400 தியேட்டர்களில் படம் ரிலீஸாகியுள்ளது. தலைவா படம் வெளியானதால் அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். தியேட்டர் முன்பு அவரது பேனர் மற்றும் கட்-அவுட்டுகளுக்கு மாலை அணிவித்தும், பால் அபிஷேகம் செய்தும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

அரங்கு நிறைந்த காட்சிகள்

இணையதளங்களில் படம் வெளியானது, திருட்டு வி.சி.டி. க்கள் பெருகியது மற்றும் படம் சுமாராகத்தான் உள்ளது என இணையதளங்களில் விமர்சனங்கள் வந்த போதும், தியேட்டரில் சென்று தலைவா படத்தை பார்க்க ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் தலைவா படம் திரையிடப்பட்ட அநேக ஏரியாக்களில் அரங்கு நிறைந்த காட்சிகளாக இருக்கிறது.

Advertisement
கருத்துகள் (103) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (103)

appu - madurai,இந்தியா
22 ஆக, 2013 - 15:56 Report Abuse
appu வீட்டுக்கு பால் வாங்கிட்டு வர சொன்னா வாங்கிட்டு வரமாட்டானுக....விஜய் பேனருக்கு பால் அபிசேகம்.....ல் அபிசேகம் எல்லாம் பன்னுவானுக விளங்காத வெட்டிப்பயலுக...
Rate this:
Giri - nagercoil,இந்தியா
21 ஆக, 2013 - 21:38 Report Abuse
Giri படம் சூப்பர் என்று சொல்பவர்கள் தவறான தகவலை அளிக்கிறார்கள். படம் ரொம்ப ரொம்ப சுமார். அவ்ளோதான். பால் அபிஷேகம்...? விளம்பரத்துக்காக போடப்படும் நாடகம். பொதுவாக கடவளுக்கு மட்டுமே செய்ய கூடிய காரியத்தை, ஒரு சினிமா நடிகருக்கு செய்வதற்கு அவசியம்...? இவர் அரசியலுக்கு வர துடிக்கிறார் என்பதும் தெளிவு ஏன்? சினிமாவில் தாக்குபுடிக்க முடியாதென்று நினைப்போ? துப்பாக்கி நன்றாகத்தானே இருந்தது. இந்த கதை போறலை, அவ்ளோதான். அது எப்படிதான் நம் சினிமா நடிகர்களுக்கு முதலமைச்சர் ஆசை வருகிறதோ தெரியவில்லை இங்கு உங்கள் படத்தை பாராட்டுபவர்களில் முக்கால்வாசிபேர்கள், நீங்கள் கட்சி ஆரம்பித்தால், துணை முதல்வர் ஆகிவிடலாம் என்று பகல் கனவு காண்பவர்களே. அது உங்களுக்கும் தெரியும் விஜய் அவர்களே.
Rate this:
siva - colombo,இலங்கை
21 ஆக, 2013 - 13:47 Report Abuse
siva இவளவு மோசமான விளம்பரம் தேவையா இந்த படத்த ஓட்ட ????? இதே எங்கள் சூப்பர் ஸ்டார் படமா இருந்தா சும்மாவே ஹிட் தான் அங்கதாண்ட இருகாரு சுப்பர் ஸ்டார்.
Rate this:
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
21 ஆக, 2013 - 21:16Report Abuse
சு கனகராஜ் தலைவாவுக்கு ரசிகர்கள் கருத்து பிச்சிகிட்டு போகுது பாருங்க...
Rate this:
kajashreef.k - pollachi  ( Posted via: Dinamalar Android App )
21 ஆக, 2013 - 12:08 Report Abuse
kajashreef.k படம் ஊ ஊ ஊ ஊ ஊ
Rate this:
muthu - govai  ( Posted via: Dinamalar Windows App )
21 ஆக, 2013 - 11:12 Report Abuse
muthu vijaykku appuda sangu confirm producerukku........
Rate this:
மேலும் 97 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in