Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

16 வயதினிலே மயிலுக்கு 50 வயது

13 ஆக, 2013 - 16:55 IST
எழுத்தின் அளவு:

 16 வயதினிலே படத்தில் மயிலாக வந்த ஸ்ரீதேவிக்கு இன்று(ஆகஸ்ட் 13ம் தேதி) 50 வயது. அவருக்கு திரையுலகை சேர்ந்தவர்கள் தங்களது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தமிழகத்தில், சிவகாசியில் பிறந்த ஸ்ரீதேவி, தனது நான்கு வயதில் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து தனது 13-ம் வயதில் மூன்று முடிச்சு படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். பிறகு 16 வயதினிலே, சிவப்பு ரோஜாக்கள், மூன்றாம் பிறை, பிரியா, கல்யாண ராமன் உள்ளிட்ட பல்வேறு சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். ரஜினி, கமல் என இரண்டு நாயகர்களுடன் ஜோடி போட்டு நடித்த ஸ்ரீதேவி 1970-80-களில் தமிழ் சினிமாவின் கனவு கன்னியாக வலம் வந்தார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், மற்றும் கன்னட படங்களிலும் நடித்து வெற்றி பெற்றார். பிறகு இந்தியிலும் அதிரடியாக பிரவேசித்து அங்கும் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தார். சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கு‌ம் போது பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூரை மணந்த ஸ்ரீதேவி, பின்னர் சினிமா வாய்ப்புக்களை குறைத்து கொண்டார்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு டி.வி. நிகழ்ச்சி ஒன்றில் தோன்றிய ஸ்ரீதேவி, சமீபத்தில் இங்கிலீஷ் விங்கிலீஷ் படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். அந்தப்படமும் ஹிட்டாக இப்போது மீண்டும் நல்ல வேடங்களில் நடிக்க தன்னை தயார்படுத்தி வருகிறார். தேசிய விருது, பல்வேறு மாநில விருதுகள், பிலிம்பேர் விருதுகள் உள்ளிட்ட பல விருதுகளை வாங்கி குவித்த ஸ்ரீதேவிக்கு இன்று 50வது பிறந்தநாள். வயது 50-ஆனாலும் இப்போதும் இளமையாக காணப்படுகிறார். இந்த பிறந்தநாளில் ஸ்ரீதேவிக்கு திரையுலகை சேர்ந்த பிரமுகர்களும், அவரது ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர்.

Advertisement
கருத்துகள் (9) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (9)

LAX - Trichy,இந்தியா
14 ஆக, 2013 - 16:42 Report Abuse
LAX Belated BIRTHDAY WISHES Sridhevi.
Rate this:
Venkatesh - Chennai  ( Posted via: Dinamalar Android App )
14 ஆக, 2013 - 15:02 Report Abuse
Venkatesh எத்தனை வருஷமா 50 வயசுன்னு சொல்லவே இல்லியே!
Rate this:
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
17 ஆக, 2013 - 17:27Report Abuse
சு கனகராஜ் மயிலு மயிலுதான்...
Rate this:
appu - madurai,இந்தியா
14 ஆக, 2013 - 14:56 Report Abuse
appu ஸ்ரீதேவி ஆண்டிக்கு வாழ்த்துக்கள்....
Rate this:
JAIRAJ - CHENNAI,இந்தியா
14 ஆக, 2013 - 04:30 Report Abuse
JAIRAJ நான்கு வயதை குறைத்து சொல்லி விட்டாய்.பரவில்லை.நலமுடன் வாழ அன்புடன் வாழ்த்துக்கள்.
Rate this:
R.ARIVALAGAN - Doha,கத்தார்
13 ஆக, 2013 - 22:08 Report Abuse
R.ARIVALAGAN சிவாஜிகணேசன் துக்கிவைத்துகொண்டு இதோ எந்தன் தெய்வம் முன்னாலே என்று பாடிய குழந்தைக்கா 50 வயது .........பிறந்தநாள் வாழ்த்துக்கள் .....நன்றி .
Rate this:
மேலும் 3 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in