Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஜய்யின் தலைவா பிற மாநிலங்கள் - வெளிநாடுகளில் ரிலீஸானது - தமிழகத்தில் 22ம் தேதி ரிலீஸாக வாய்ப்பு!

10 ஆக, 2013 - 10:39 IST
எழுத்தின் அளவு:

 நடிகர் விஜய் நடித்த, "தலைவா படம், தமிழகத்தை தவிர, தென் மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் நேற்று வெளியிடப்பட்டது. தமிழகத்தில் வரும், 22ம் தேதி வெளியிடப்பட வாய்ப்புள்ளது என, தகவல் வெளியாகியுள்ளது. "படம் வெளியிட ஏற்பட்ட தாமதத்திற்கு, தமிழக போலீசிற்கு பங்கில்லை என்று, டி.ஜி.பி., ராமானுஜம் தெரிவித்துள்ளார்.

விஜய் - அமலாபால் நடித்த, "தலைவா படம், நேற்று (9ம் தேதி) தமிழகம் உட்பட, உலகம் முழுவதும், 2,000 தியேட்டர்களில் வெளியாக இருந்தது. படத்திற்கு கேளிக்கை வரி விலக்கு தாமதமானதாலும், அரசியல் கலந்த வசனங்கள் இருப்பதாக தகவல் வெளியானதாலும், இப்படத்தை திரையிடும், தியேட்டர்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததாலும், "தலைவா படம், நேற்று தமிழகத்தில் வெளியிடப்படவில்லை.ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மும்பை மற்றும் வெளிநாடுகளில், நேற்று படம் வெளியிடப்பட்டது. தமிழகத்தில், நேற்று காலை தியேட்டர்களுக்கு வந்த விஜய் ரசிகர்கள், ஏமாற்றமடைந்தனர்.

போலீஸ் காரணமில்லை: டி.ஜி.பி., தகவல்


டி.ஜி.பி., ராமானுஜம் வெளியிட்ட அறிக்கை:"தலைவா என்ற படம் வெளியாவதை, பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக, தமிழக காவல்துறை தள்ளி வைத்துள்ளதாக ஒரு சில பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன; இச்செய்தியில் உண்மையில்லை. பட வெளியீட்டை தள்ளி வைக்குமாறு, தமிழக காவல்துறை கோரவோ அல்லது ஆலோசனை கூறவோ இல்லை. இத்திரைப்படம் வெளியிடப்படுவதில் ஏற்பட்டுள்ள தாமதம் எதிலும், காவல்துறைக்கு பங்கில்லை. படம் வெளியிடப்படுவது பற்றிய முடிவுகள் திரைப்படத் துறையை சார்ந்தது.இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.

22ம் தேதி ரிலீஸாக வாய்ப்பு


இந்நிலையில், படம் வெளியீடு குறித்து, நேற்று இரவு வரை, தயாரிப்பாளர் நேரடியாக ஏதும் பதில் கூறவில்லை. படத்தை, வரும் 15ம் தேதி வெளியிட, மாற்று ஏற்பாடு நடந்ததாகவும், அன்று சுதந்திர தினம் என்பதால், தியேட்டர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு முழுவதுமாக கிடைக்காது என்பதால், வரும், 22ம் தேதி, படம் வெளியாக வாய்ப்புள்ளது எனவும் தகவல் வெளியானது.

ரசிகர்கள் கலாட்டா!

"தலைவா படம் நேற்று வெளியிடப்படும் என, நினைத்த விஜய் ரசிகர்கள், தியேட்டர்களுக்கு நேற்று காலை வந்தனர். சென்னையில் உள்ள தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம் அதிகளவில் இருந்தது. தியேட்டர் உரிமையாளர்கள், "படம் இன்று வெளியாகாது என, ரசிகர்களை திரும்ப அனுப்பினர். தமிழகத்தின் எல்லையோர மாவட்டங்களில் உள்ள விஜய் ரசிகர்கள், கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திராவில் உள்ள தியேட்டர்களுக்குச் சென்று பார்த்தனர். புதுக்கோட்டையில், சாலை மறியலில் ஈடுபட்ட நடிகர் விஜய் ரசிகர்கள், 49 பேரை போலீசார் கைது செய்தனர்.

சேலம் மாவட்டம், இடைப்பாடியில், 200க்கும் மேற்பட்ட ரசிகர்கள், இடைப்பாடி - சேலம் சாலையில், மறியலில் ஈடுபட்டனர். போலீசார், அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பினர். ஆத்தூரில், விஜய் ரசிகர்கள் மறியலில் ஈடுபட முயன்றதோடு, தியேட்டர்களை முற்றுகையிட்டனர். அதனால், தியேட்டர்களுக்கு, போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வேலூர், திருவண்ணாமலையில், விஜய் ரசிகர்கள், சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். போலீசார், அவர்களை கலைத்து அனுப்பினர்.

அலைக்கழிக்கப்பட்ட ரசிகர்கள்

மதுரையில் நேற்று இரண்டு தியேட்டர்களில் தலைவா படம் ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டு ரசிகர்க‌ளும் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். ஆனால் அடுத்த சில நிமிடங்களி‌லே‌யே படம் வெளிவரவில்லை அதனால் ரசிகர்கள் வெளியேறும்படி ‌அறிவுறுத்தப்பட்டனர். இதனால் ரசிகர்கள் பெரும் ஏமாற்றமும், அதேசமயம், தங்களை இப்படி அலைக்கழிப்பதாகவும் வேதனை தெரிவித்தனர்.

வெளிமாநிலங்களுக்கு படையெடுக்கும் ரசிகர்கள்

விஸ்வரூபம் படம் தமிழகத்தில் தடை செய்யப்பட்டபோது வெளிமாநிலங்களில் சென்று படம் பார்க்க தொடங்கினர் ரசிகர்கள். அதே போல் தலைவா படமும் தமிழகத்தில் ரிலீஸ் ஆவதில் தாமதமாகி வருவதால் விஜய்யின் ரசிகர்கள் வெளிமாநிலங்களில் சென்று படம் பார்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக கேரளா மற்றும் ஆந்திர மாநிலங்களுக்கு அதிகளவு ரசிகர்கள் சென்று படம் பார்க்க தொடங்கியுள்ளனர்.

Advertisement
கருத்துகள் (30) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (30)

aravindan - dubai  ( Posted via: Dinamalar Android App )
11 ஆக, 2013 - 15:24 Report Abuse
aravindan I watched this movie in Dubai.could have been done better vijay.below average.sorrey vijay.I expected lot.
Rate this:
kumar - Chennai  ( Posted via: Dinamalar Android App )
11 ஆக, 2013 - 06:48 Report Abuse
kumar டேய்..... ஏன்டா இப்பdi சாகடிக்கிறீங்க...? டேய் விஐய் ரெண்டு பேரையும் தான்டா.... ஓடிடுங்க கொன்னுடுவேன்....
Rate this:
Antoo Ootna - kerala,இந்தியா
10 ஆக, 2013 - 17:03 Report Abuse
Antoo Ootna படம் சரி இல்லை என்று அவர்களுக்கு முன்பே தெரிந்து இறுக்கும் அதனால் தான் U செர்டிபிகாடே வாங்கினார்கள், பின்பு போராட்டம் அது இது என்று கமல் படம் போல் பில்ட் அப் கொடுத்து படத்தை ஓட்ட நினைக்கிறார்கள் பாவம் தமிழ்நாட்டு மக்கள். இரண்டு மாசம் காத்து இருந்தால் சன் டிவியில் பார்க்கலாம்
Rate this:
prabhu - sharjah,ஐக்கிய அரபு நாடுகள்
10 ஆக, 2013 - 16:47 Report Abuse
prabhu இவன் ஒரு டுபாகூரு
Rate this:
10 ஆக, 2013 - 15:20 Report Abuse
Dr.vijay SSLC fail (10 times..but seekiram pass aaiduven)) 22 ம் தேதி ரிலீஸ் ஆனா மட்டும் இவன் புதுசா என்ன சொல்லிற போறான் ? அரச்ச மாவையே திரும்ப அரைக்க போறான் ....
Rate this:
மேலும் 25 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in