இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
தமிழில் சரியான வாய்ப்புகள் கிடைக்காததால், பாலிவுட் பக்கம் தேடும் படலத்தை தொடங்கியிருக்கிறார் நீத்து சந்திரா. யாவரும் நலம் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நீந்து சந்திரா. அப்படத்திற்கு பிறகு தீராத விளையாட்டு பிள்ளை படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நடித்தார். அமீரின் இயக்கத்தில் ஆதிபகவான் படம், தனது நல்ல எதிர்காலத்தை தரும் என அவர் அதிகம் எதிர்பார்த்தார்.
ஆனால், அதன் பிறகு அவருக்கு வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தது. குத்துப் பாடலுக்கு ஆடும் வாயப்புகளே அதிகம் வந்தது. இதனால், தமிழ் சினிமாவே வேண்டாம் என்று பாலிவுட் பக்கம் தன் கவனத்தை திருப்பியிருக்கிறார் நீந்து சந்திரா. ஏற்கனவே பாலிவுட்டில் சில ஹீரோக்களின் நட்பு அவருக்கு கிடைத்துள்ளது. இதை பயன்படுத்தி அவர் பாலிவுட்டில் நுழைய திட்டுமிட்டு இருக்கிறார். ஏற்கனவே ரன்தீப்பிடம் தனக்கு நடிக்க சிபாரிசு செய்யுமாறு கேட்டிருக்கிறாராம். இதுமட்டுமின்றி இந்தியில் அதிக படங்களில் நடித்து வரும் இளம் கதாநாயகர் ருணால் கபூரிடமும் நட்புடன் பழகி வருகிறாராம். இவர்களது நட்பை பயன்படுத்தி பாலிவுட்டில் நுழைய நீந்து திட்டமிட்டு இருப்பதாக சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன.