Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஒரு தந்தையாக எனது மகளுக்கு நல்ல கணவனை நேர்ந்தெடுக்கும் உரிமை எனக்கு இருக்கு - சேரன் கண்ணீர் பேட்டி!!

04 ஆக, 2013 - 10:48 IST
எழுத்தின் அளவு:

""என் மகளை மிரட்டி, என் மீது பொய் புகார் அளிக்கப்பட்டுள்ளது. என் மகளின் உயிருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும், என, இயக்குனர் சேரன், சென்னை போலீஸ் கமிஷனரிடம் நேற்று புகார் மனு அளித்துள்ளார்.

நடிகரும், இயக்குனருமான சேரன், சென்னை, சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலையில் வசிக்கிறார். இவரது, 2 வது மகள் தாமினி, 20. இவருக்கும், சென்னை, சூளைமேடு, வள்ளலார் முதல் தெருவில் வசிக்கும் சந்துரு, 25, என்பவருக்கும் 2 ஆண்டுகளுக்கு முன் காதல் ஏற்பட்டது. துவக்கத்தில், இவர்களின் காதலுக்கு சேரன் பச்சைக்கொடி காட்டினார். ஆனால், படிப்பு முடியும் வரை காத்திருக்கும் படியும், அதற்குள் சந்துருவும் நல்ல நிலைமைக்கு வரும்படி சேரன் கேட்டுக் கொண்டார்.

சமீபத்தில், சந்துருவின் நடத்தை சரியில்லை எனக்கூறி, மகள் தாமினியிடம் காதலனை மறந்து விடும்படி, சேரன் கேட்டுக் கொண்டார். இந்நிலையில், நேற்று முன்தினம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்த சேரனின் மகள் தாமினி, தன் தந்தை, காதலனிடமிருந்து தன்னை பிரிக்க முயல்வதாகவும், காதலனை அடியாட்களை வைத்து மிரட்டுவதாகவும் தந்தை மீது புகார் அளித்தார்.

புகாரைத் தொடர்ந்து சேரன் மற்றும் சந்துரு தரப்பினரிடம், ஆயிரம் விளக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, நேற்று மதியம், போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு, நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், ராதா ரவி, இயக்குனர்கள் அமீர், கரு.பழனியப்பன் உள்ளிட்ட பலருடன் வந்த சேரன், போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு ஒன்றை அளித்தார்.

மகளுக்கு நல்ல கணவனை கொடுப்பது தந்தையின் கடமை


பின், புகார் குறித்து நிருபர்களிடம் சேரன் கூறியதாவது: நான், ஏழை, பணக்காரன், ஜாதி, மதம் பார்ப்பது கிடையாது; காதலுக்கு நான் எதிரியும் இல்லை. ஒரு தந்தையாக, என் மகளுக்கு வரப்போகும் கணவனை, என் மருமகனை, நல்லவனா, கெட்டவனா எனப் பார்த்து, தேர்ந்தெடுப்பது என்னை போன்ற ஒவ்வொரு தந்தையின் கடமை; அதற்கான உரிமை எனக்கு உண்டு. துவக்கத்தில் என் மகள் காதலை பற்றி சொன்ன போது, சம்மதித்தேன். படிப்பு முடியும் வரை, காதலன் சந்துரு நல்ல நிலைமைக்கு வரும் வரை காத்திருக்க சொன்னேன்.

சந்துரு நல்லவன் கிடையாது

ஆனால், கடந்த 2 ஆண்டுகளில், சந்துரு குறித்து விசாரித்த போது, அவர் நல்லவர் இல்லை என்பதும், பல பெண்களுடன் தொடர்பு இருப்பதும் தெரியவந்தது. மேலும், ஓராண்டுக்கு முன், நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்ற என் மகள் தாமினியிடம், சந்துரு குறித்த உண்மை விவரங்களை ஒரு பெண் எடுத்து கூறியுள்ளார். அவர் நல்லவர் இல்லை; ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என, எச்சரித்தும் உள்ளார்.

10 நாள் மருத்துவமனையில் என் மகளுக்கு சிகிச்சை

இதையடுத்து, என் மகள் காதலை முறித்துக் கொள்ள தயாரான போது, சந்துருவின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டது. என் மகளின் நடவடிக்கையை கொச்சைப்படுத்தி பேசியுள்ளார்; அவரது, இ -மெயில் மற்றும்," பேஸ்புக் பாஸ்வேர்டை வாங்கி, மிரட்டியதோடு, அவரை மிகுந்த மன உளைச்சலுக்கும் ஆளாக்கினார். இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்ட என் மகள், 10 நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றார்; அவரை தேற்றி ஆறுதல் கூறினோம்.

பேஸ்புக்கில் மிரட்டல்

சந்துரு, மொபைல் போன் மூலம் என் மகளை தொடர்பு கொண்டு, "இ -மெயில், "பேஸ்புக் பாஸ்வேர்டை பயன்படுத்தி, உங்கள் குடும்பத்தையே தலை குனிய வைப்பேன் என, மிரட்டியுள்ளார். அவ்வாறு நடக்காமல் இருக்க, குறிப்பிட்ட பெரும் தொகை தர வேண்டும் அல்லது நான் (சேரன்) இயக்கும் படத்தில், சந்துருவை கதாநாயகனாக நடிக்க வைக்க வேண்டும் என்றும் மிரட்டியுள்ளார்.

என் மகளே சந்துரு மீது போலீசில் புகார் கொடுத்தார்

இதுகுறித்து என் மகள், எனக்கு தெரியாமலேயே, என்னைப் பற்றிய விவரங்களை தெரிவிக்காமல், கடந்த, 10ம் தேதி சென்னை, போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சந்துரு மீது புகார் அளித்துள்ளார். அதுபற்றி பின்னர் தான் என் மகள் என்னிடம் தெரிவித்தார். இந்த சூழலில், ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் இருந்து போலீசார், என்னை விசாரணைக்கு வரும்படி அழைத்தனர். அப்போது தான், என் மகள் என் மீது புகார் அளித்தது தெரிய வந்து அதிர்ச்சியடைந்தேன்.

என் மகளின் உயிருக்கு ஆபத்து

இது, முழுக்க முழுக்க, சந்துரு தரப்பினரின் சதி. எனது மகள் சூழ்நிலை கைதியாக்கப்பட்டுள்ளார். என் மகளை மிரட்டி, என் மீது புகார் அளிக்க வைத்துள்ளனர். சந்துரு நல்லவன் இல்லை; என் மகள், சந்துரு மீது அளித்த புகார் உள்ளிட்ட பல ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. என் மீது பொய் புகார் கொடுக்க வைத்த சந்துரு உள்ளிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு, என் மகளின் உயிருக்கு எந்த ஆபத்தும் வராத வகையில் போலீசார் பாதுகாப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

பேட்டியின் போது உணர்ச்சிவசப்பட்ட நிலையில் சேரன் இருந்தார். மகள் குறித்து பேசும் போது, கண்ணீர் விட்டு கதற தொடங்கினார். உடனிருந்த அமீர் உள்ளிட்டோர் அவரை தேற்றினர்.

Advertisement
கருத்துகள் (19) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (19)

saraku selan - பினாங்கு,மலேஷியா
05 ஆக, 2013 - 19:33 Report Abuse
saraku selan விமலன் கற்க கசடற கற்றவை கற்றபின் நிற்க அதறகுத் தக... அரைகுறையால் ஏற்படும் தொல்லைகள்தான் சேரனுக்கு விளைந்துள்ள தன் மகளால் வந்துள்ள வினை. அவருடைய பிள்ளைபாசம் மகளுக்குத் தெரியவேண்டும். ஆனால், மனமயக்கக் காதலால் மனம் தடுமாறியுள்ள மகளுக்கு இன்னும் காலம் எடுக்கலாம்.
Rate this:
04 ஆக, 2013 - 18:03 Report Abuse
sultan allaudin ashraf The dad is crying so bad ... she should not do this . its an extreme level of exposing love to her daughter.....
Rate this:
aman - dxb,ஐக்கிய அரபு நாடுகள்
04 ஆக, 2013 - 15:10 Report Abuse
aman வெளிநாட்டிலிருந்து வரும் ஒரு நபர், தொடர்ந்து ஒரு மாதத்துக்கு தமிழ்ப்படங்களைப் பார்த்தாரேயென்றால், தமிழ்நாட்டில் வேலை வெட்டி இல்லாமல் அத்தனை பேரும் காதலித்துக் கொண்டே இருக்கிறார்கள் என்று நினைக்கும் அளவுக்கு, காதல் இல்லாத படங்களே இல்லை. சூப்பர் ஹிட் படமான அலைகள் ஓய்வதில்லை பத்தாவது படிக்கும் பதின்பருவக் காதலை கொண்டாடியது. பாலச்சந்தர், கல்யாணத்துக்கு முன்பே கர்ப்பமாவதற்கு எனக்கு உரிமை உண்டு என்று பெண்ணியம் பேசியவர். திரையுலகின் பெரிய ஜாம்பவான்கள் அனைவருமே, காதலை வைத்து வியாபாரம் செய்து, அதில் பணம் பண்ணியவர்களே… இன்று திரையரங்குக்குச் சென்று திரைப்படம் பார்ப்பவர்களில் பெரும்பாலானவர்கள் இளைஞர்களே என்பதால், காதல் மற்றும் காதல் காட்சிகள் இல்லாத படங்கள் வருவதேயில்லை. காதலி இறந்து விட்டால், காதலன் சிதையோடு உடன்கட்டை ஏறுவதுதான் சிறந்த காதல் என்பதைத்தானே முதல் படமாக எடுத்தார் சேரன் ?
Rate this:
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
04 ஆக, 2013 - 18:01Report Abuse
சு கனகராஜ் அது சம்பாதிக்க அதுக்காக தான் பெற்றெடுத்த மகளை குழியில் தல்லவா பார்ப்பார் ?...
Rate this:
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
04 ஆக, 2013 - 18:02Report Abuse
சு கனகராஜ் நிழல் வேறு நிஜம் வேறு என்று புரிந்து கொள்ளுங்கள்...
Rate this:
Praveen Sundar P.V. - Vellore,இந்தியா
04 ஆக, 2013 - 14:32 Report Abuse
Praveen Sundar P.V. பெத்தவனுக்கு தான் அந்த வலி புரியும்..... மற்றவர்களுக்கு இதுவும் ஒரு பொழது போக்கு செய்தி
Rate this:
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
04 ஆக, 2013 - 18:03Report Abuse
சு கனகராஜ் இனி அந்த பெண்ணின் வாழ்க்கை அதோ கதிதானே...
Rate this:
villupuram jeevithan - villupuram,இந்தியா
04 ஆக, 2013 - 14:30 Report Abuse
villupuram jeevithan காலம் மாறிவிட்டது பெற்றோர் பேச்சை கேட்கும் மகளை தற்காலத்தில் பார்க்கவே முடியாது. அதற்கு தூபம் போட்டதில் சினிமாவுக்கும் ஒரு பங்கு இருக்கிறது. முகநூல் மூலம் மிரட்டலும் அதிகரித்து விட்டன. தனது தவறான முடிவை மாற்றிக் கொள்ளும் சூழ்நிலை முழுமையையாக பெண்களிடம் இல்லை.
Rate this:
மேலும் 11 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in