Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

காதலனை பிரிக்கிறார்; அடியாட்களை வைத்து மிரட்டுகிறார் : இயக்குனர் சேரன் மீது மகள் போலீசில் புகார்

02 ஆக, 2013 - 15:07 IST
எழுத்தின் அளவு:

 ""காதலனிடம் இருந்து பிரிக்க முயல்வதுடன், அவரை அடியாட்களை வைத்து மிரட்டுகிறார். நான் காதலனுடன் செல்ல விரும்புவதால், எங்களுக்கு பாதுகாப்பு வேண்டும், என்று, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், சினிமா இயக்குனர் சேரனின் மகள் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

காதல்

நடிகரும், இயக்குனருமான சேரன், சென்னை, சேத்துப்பட்டு, ஹாரிங்டன் சாலையில் வசித்து வருகிறார். இவருக்கு, இரண்டு மகள்கள். இரண்டாவது மகள், தாமினி, 20; சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில், பட்டப்படிப்பு மூன்றாமாண்டு படித்து வருகிறார். சென்னை, சூளைமேட்டைச் சேர்ந்த, வள்ளலார் தெருவைச் சேர்ந்தவர், சந்துரு, 25. உதவி இயக்குனரான இவரும், தாமினியும் கடந்த, இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக காதலித்து வருகின்றனர்.

கமிஷனரிடம் புகார்

இந்நிலையில், நேற்று காலை, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு, சந்துருவின் சகோதரி, கவுரி மற்றும் தாயார் பத்மாவுடன் வந்த தாமினி, புகார் மனு ஒன்றை அளித்தார். அப்போது, தாமினி கூறியதாவது: கடந்த, இரண்டரை ஆண்டுகளுக்கு முன், சினிமா நிகழ்ச்சி ஒன்றில், சந்துருவைச் சந்தித்தேன். அவர் சினிமா உதவி இயக்குனராக இருந்தார். நடனமும் அவருக்கு தெரியும். நாங்கள், இருவரும் காதலிக்கத் துவங்கினோம். என் தந்தைக்கு இந்த விவரம் தெரிய வந்ததும், முதலில் அவர், மூன்றாண்டுகள் கழித்து, படிப்பு முடிந்ததும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று தெரிவித்தார். ஆனால், திடீரென அவரை மறந்து விடுமாறு மிரட்டுகிறார்.

கட்டாயப்படுத்தி, மிரட்டி பிரித்தனர்

சென்னை, சேத்துப்பட்டு போலீசில் புகார் அளித்தார். என்னையும், சந்துருவையும் அழைத்து பேசிய போலீசார், கட்டாயப்படுத்தி, மிரட்டி, பிரிந்து செல்வதாக, இருவரிடமும் எழுதி வாங்கினர். அதன் பின், என்னை கல்லூரிக்கு அனுப்பாமல் வீட்டில் அடைத்து வைத்திருந்தனர். தொடர்ந்து, எனக்கு உடல் நலம் சரியில்லாமல் வீட்டில் இருந்த போது, பல பேப்பர்களில் கையெழுத்து வாங்கினார். இந்நிலையில் நான், நேற்று கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு, சந்துருவின் வீட்டிற்குச் சென்று விட்டேன். எங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று புகார் அளிக்க வந்துள்ளேன். இவ்வாறு, அவர் கூறினார்.

அப்போது, "உங்கள் தந்தை, புரட்சிகரமான படங்களை இயக்கியுள்ளாரே? என்று, நிருபர் கேட்டதற்கு, ""அது சினிமா; இது வாழ்க்கை, என்று தடாலடியாக பதிலளித்தார் தாமினி.

அடியாட்கள் வைத்து மிரட்டல்

இதுதொடர்பாக, சந்துருவின் சகோதரியும், தாயும் கூறியதாவது: முதலில் சந்துரு, இயக்குனர் சேரனின் மகளை காதலிப்பதாக கூறியதும் நாங்கள் பயந்தோம். அதன் பின், அவரே நேரில் வந்து, மகளின் படிப்பு முடிந்ததும் திருமணம் செய்து வைப்பதாக கூறியதும், மகிழ்ச்சியடைந்தோம். இந்நிலையில், கடந்த, 20 தினங்களுக்கு முன், அடியாட்களுடன் வந்து மிரட்டினார். அப்போது, சேரனுடன், 20க்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர். தன் மகள், சந்துருவை மறந்து விட்டார் என்றும், சந்துரு இனிமேல் அவரை பார்க்கக் கூடாது என்றும் மிரட்டினார். காமினி நேரில் வந்து சொன்னால் மட்டுமே, ஏற்றுக் கொள்ள முடியும் என்றதும், தொடர்ந்து மிரட்ட ஆரம்பித்தனர்.

ஓட ஓட விரட்டி அடித்தனர்

சென்னை, சேத்துப்பட்டு போலீசில் பொய் புகார் அளித்தார். சந்துருவை மிரட்டி, பிரிந்து செல்வதாக எழுதி வாங்கிக் கொண்டனர். அதன் பின், சென்னை, சாலிகிராமம் பகுதியில் பெட்ரோல் பங்க் நடத்தி வரும் ஒருவர் வந்து சந்துருவை அழைத்துச் சென்றார். சந்துரு அங்கு செல்லும் போது, சேரனும் அவருடன், 10க்கும் மேற்பட்ட அடியாட்களும் இருந்தனர். அவர்கள், சந்துருவுடன் தகராறு செய்து, அடிக்கத் துவங்கினர். சந்துரு பயந்து ஓடிய போது, விரட்டி விரட்டி அடித்தனர். இதனால், தற்போது நாங்கள், சந்துருவை வேறு ஊருக்கு பாதுகாப்பாக அனுப்பி வைத்துள்ளோம். இன்று காலை, தாமினி எங்கள் வீட்டிற்கு வந்ததால், இங்கு அழைத்து வந்தோம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

சேரன் மகள் தாமினி அளித்த புகார், கமிஷனர் ஜார்ஜின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அதன் பின், தாமினியை அழைத்து கமிஷனர் ஜார்ஜ் பேச்சுவார்த்தை நடத்தி, அவர் விரும்புவோருடன் அனுப்பி வைக்குமாறு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, உதவி கமிஷனர் சியாமளாதேவி, தாமினியிடம் பேசிய போது, சந்துரு வீட்டாருடன் செல்வதாக தெரிவித்தார். அப்போது, சந்துருவின் தாய் மற்றும் சகோதரி ஆகியோர், போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதற்கு போலீசார் உறுதியளித்த நிலையில், அவர்கள் தாமினியை அழைத்துச் சென்றனர்.

முன்னதாக, கடந்த, 10 தினங்களுக்கு முன், இயக்குனர் சேரன், கமிஷனர் அலுவலகத்திற்கு வந்து, கமிஷனர் ஜார்ஜை சந்தித்தார். அப்போது, பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு, தன் சொந்த விஷயமாக வந்ததாக கூறி, அங்கிருந்து நழுவினார். தற்போது, மகள் புகார் அளித்திருப்பதால், இதற்காகத் தான் சேரன் வந்திருப்பாரோ என்ற பேச்சு எழுந்துள்ளது.

Advertisement
கருத்துகள் (34) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (34)

ammu - chennai,இந்தியா
08 ஆக, 2013 - 13:22 Report Abuse
ammu cinema vera kudumbam vera. avaraum thappu solla kudadhu, andha ponnu melaum thappu illa. andha paiyan nallavananu paka viayadhu pethavanga kadama. love pannavana kalyanam pannanumradhu lover oda kadama. nallavana irundha avara ethukalam
Rate this:
SEKAR - pollachi,இந்தியா
04 ஆக, 2013 - 19:14 Report Abuse
SEKAR மகளை கண்டிப்புடன் வளர்க்க வேண்டும்
Rate this:
RAHEEM pudumadam - mugavai  ( Posted via: Dinamalar Windows App )
04 ஆக, 2013 - 01:53 Report Abuse
RAHEEM pudumadam சினிமா உலகிற்க்கு ஒரு எடுத்துக்காட்டு. எதுவாக விரும்புகிறீர்கள் அதை இந்த சமுதாயத்தீற்க்குத்தாருங்கள் பெண்கள் யாராக இருந்தாழும் காட்சிப் பொருளாக்காதீர்கள்p நாமும் அது ஆவோம் சினிமா என்பதன் முதல் அறிமுகம் பொழுது போக்கு இன்று அதுசமுதாயத சமுதாய சீர்கேட்டிற்க்கு முதல் எதிரீ. ஏன் இன்னும் சரியாகச் சொன்னால் மனித இன கலாச்சாரங்களுக்கு எதிராக போய் கொண்டிரப்பதை க்கிறது இனிமேல் சினிமா எப்படி எடுக்க வேண்டும் இந்த சினிமாவல் எவ்வளவு பணம் சம்பதிக்களாம் என்று இல்லாமல் எவ்வளவு மக்களை எந்த எந்த வயதினரை எப்படியேல்லம் பாதிக்கும் மிக க்கவணத்துடண் சினிமா விளம்பரம் இருப்பதன குறிப்பாக இயக்குனர்கள் இயக்குவார்களளா
Rate this:
Arumugam - Paris,பிரான்ஸ்
03 ஆக, 2013 - 19:00 Report Abuse
Arumugam சினிமா வேறு வாழ்க்கை வேறு அப்பா மகள் பிரச்சனை.நாம் என்ன சொல்ல முடியும்? மகள் நல்லா இருக்கணும் என்றுதான் அப்பா நினைப்பார்.அதை மகள் உணரவேண்டும். இன்றைய இளைஞர்கள் பெரும்பாலோர் பெற்றவர்களை முட்டாள்கள் என்றே நினைகின்றனர். ஆனால் இவருடைய சாதனையை மகள் சாதிக்குமா?
Rate this:
appu - madurai,இந்தியா
03 ஆக, 2013 - 15:45 Report Abuse
appu பிரச்சனை என்னவென்று தெளிவாக தெரியாமல் குற்றம் அப்பாவையோ அலல்து மகளையோ சொல்ல முடியாது...ஆனா ஒன்னு,,, இவரு ஊருக்கே லவ் ஸ்டோரி சொல்லி குடுத்தாரு இப்ப இவரு ஊட்டுலையே லவ் ஸ்டோரி ஓடிகிட்டு இருக்கு...அது தான் ஐலைட்...
Rate this:
மேலும் 29 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in