Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

‘பில்லா’ படத்தை விட பல மடங்கு வேகம் ‘ஆரம்பம்’ - விஷ்ணுவர்தன் பேட்டி!!

31 ஜூலை, 2013 - 10:48 IST
எழுத்தின் அளவு:

எங்களது கூட்டணியில் உருவான ‘‘பில்லா’’ படத்தின் வேகத்தை காட்டிலும் ‘‘ஆரம்பம்’’ படம் ரொம்ப வேகமாக இருக்கும் என்று அஜீத்தை வைத்து ‘‘ஆரம்பம்’’ படத்தை இயக்கியுள்ள விஷ்ணுவர்தன் கூறியுள்ளார். பில்லா படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு மீண்டும் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜீத் நடித்துள்ள படம் ஆரம்பம். இப்படத்தில் அஜீத்துடன் ஆர்யா, நயன்தாரா, டாப்சி, தெலுங்கு நடிகர் ராணா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இயக்குனர் விஷ்ணுவர்த்தன் பொதுவாக  தான் பேசுவதை விட தன் படம் பேசுவதே தனக்கு பெருமை என கூறுபவர். ஆரம்பம் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததை ஒட்டி அவர் தந்த பேட்டி இதோ... ஆரம்பம்  என்ற தலைப்பு எல்லோரையும் கவர்ந்துள்ளது. இந்த தலைப்புக்கான தாமதம் திட்டமிடப்பட்டது அல்ல. ஆனால் இந்த வரவேற்பு கிடைக்க அந்த தாமதமும் ஒரு காரணம் என்பதும் மகிழ்ச்சிக்குரிய விஷயம் தான். இது ஒரு  போராட்ட குணமுள்ள ஒரு தனி மனிதனின் கதை. கதையில் வரும் மற்ற கதாபாத்திரங்கள் அந்த பிரதான சூரியனை சுற்றி வரும் கோள்கள்தான்.

இந்த படத்திலும் அஜீத் சார் மங்காத்தா படம் போலவே நரை கலந்த தலை முடியுடன் தான் நடிக்கிறார். அந்த படத்துக்கு முன்னரே அவரிடம் என் படத்துக்கு இந்த கெட் அப்பில் தான் வேண்டும் என்று கேட்டிருந்தேன், ஆனால் வெங்கட்பிரபு முந்தி கொண்டார். இந்த ஸ்டைல் அவர் அளவுக்கு வேறு யாருக்காவாவது அமைந்து இருக்குமா என்றால் சந்தேகமே .இது ஒரு ஆக்ஷ்ன் கலந்த விறுவிறுப்பான வேகமான படம். எங்களது கூட்டணியில் உருவான பில்லா படத்தை விட பல மடங்கு வேகமாக இருக்கும்.  அஜீத் ரசிகர்களை மட்டுமின்றி எல்லா தரப்பு ரசிகர்களையும் கவரும் படமாக ஆரம்பம் இருக்கும் என்பது நிச்சயம் என்று  நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Advertisement
தெலுங்கில் அக்ஷரா அறிமுகம் ?தெலுங்கில் அக்ஷரா அறிமுகம் ? படம் ரிலீசாகவில்லையே... துக்கத்தில் இயக்குனர் தற்கொலை!! படம் ரிலீசாகவில்லையே... துக்கத்தில் ...


வாசகர் கருத்து (46)

ManiManish - Bangalore,காரென்சே
06 ஆக, 2013 - 14:40 Report Abuse
ManiManish போங்க da விஜய் fans
Rate this:
01 ஆக, 2013 - 09:58 Report Abuse
Dr.vijay SSLC fail (10 times..but seekiram pass aaiduven)) அஜித்துக்கு நரச்ச முடி வந்தா கூட அழகு தான்யா ....ரஜினிக்கு அப்புறம் ஸ்டைல் அஜித் தான் ...
Rate this:
G.Nandagopal - Dammaam,சவுதி அரேபியா
01 ஆக, 2013 - 09:52 Report Abuse
G.Nandagopal என்னமோ தலைப்பு வச்சதையே விழாவா கொண்டாடுவானுக போலிருக்கு .... நல்ல உருப்படியான படங்களை கொடுங்கன்னா கேட்கமாட்டானுவளே
Rate this:
R.BALAMURUGESAN - Muscat,ஓமன்
01 ஆக, 2013 - 08:30 Report Abuse
R.BALAMURUGESAN ...அந்த படத்தைவிட இந்த படம் வேகம் என்று நாங்க சொல்லனும் அய்யா... பில்லா படத்திலே அங்கேயும் இங்கேயும் நடக்கும் அந்த ஆள், இந்த படத்திலே கொஞ்சம் வேகமாக நடக்கும், அப்படித்ததானே...
Rate this:
sampanthamoorthy - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
01 ஆக, 2013 - 01:11 Report Abuse
sampanthamoorthy தல படம் வெற்றி வகை சூட எனது வாழ்த்துகள், அஜித் எப்படி நடிச்சாலும் நாங்க பார்ப்போம்,
Rate this:
மேலும் 41 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Thimiru pudichavan
  Tamil New Film Kaa
  • கா
  • நடிகை : ஆண்ட்ரியா
  • இயக்குனர் :நாஞ்சில்
  Tamil New Film Mr Chandramouli
  Tamil New Film Saamy 2
  • சாமி 2
  • நடிகர் : விக்ரம் ,
  • நடிகை : கீர்த்தி சுரேஷ்
  • இயக்குனர் :ஹரி

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in