ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஸ்ருதி ஹாசன், தெலுங்கு, இந்தி திரையுலகில், ஏராளமான படங்களை கைவசம் வைத்து, முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவரைத் தொடர்ந்து, இவரது தங்கை, அக்ஷராவும், திரைப்படத்தில் நடிக்கப் போவதாக செய்திகள் வெளியானது. ஆனால், "கேமராவுக்கு முன்னால் நிற்பதை விட, பின்னால் நிற்பது தான், எனக்கு பிடிக்கும் என, கூறிய அக்ஷரா, பாலிவுட்டின் பிரபல இயக்குனர் ஒருவரிடம், உதவி இயக்குனராக சேர்ந்தார். இந்நிலையில், சமீபத்தில் ஐதராபாத்தில் நடந்த விருது வழங்கும் விழாவுக்கு, தன் அக்கா ஸ்ருதியுடன் வந்திருந்தார், அக்ஷரா. அந்த விழாவில், ஸ்ருதி நடனமாடச் சென்றதை அடுத்து, தனியாக அமர்ந்திருந்த அக்ஷராவுக்கு கம்பெனி கொடுத்தது யார் தெரியுமா? பிரபல நடிகர் நாகார்ஜுனாவின் மகன், நாக சைதன்யா. இதையடுத்து, நாக சைதன்யாவுக்கு ஜோடியாக, தெலுங்கு படம் ஒன்றில், அக்ஷரா நடிக்கப் போவதாக, டோலிவுட்டில் பேச்சு எழுந்தது. இதனால், அக்ஷராவை நோக்கி,கோலிவுட் தயாரிப்பாளர்களின் பார்வையும் திரும்பியுள்ளதாம்.