தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சென்னையில் உள்ள பிரபலமான சத்யம் சினிமா தனது தியேட்டர் ராஜாங்கத்தை விரிவுபடுத்தி வருகிறது. சத்யம் சினிமா அண்ணா சாலையில் ஸ்ரீகாம்ப்ளக்ஸ் என்ற பெயரில் தொடங்கப்பட்டது. மூன்று தியேட்டர்களுடன் தொடங்கப்பட்ட தியேட்டர் இப்போது சத்யம், சாந்தம், செரீன், சீஸன்ஸ், ஸ்டூடியோ 5, சிக்ஸ் டிகிரீஸ் என 6 தியேட்டர்களாக விரிவடைந்துள்ளது.
சிட்டி செண்டர், எக்ஸ்பிரஸ் அவின்யூவில் உள்ள தியேட்டர்களை சத்யம் சினிமாதான் நடத்தி வருகிறது. பெரம்பூரில் எஸ் 2 என்ற பெயரில் 5 தியேட்டர்களை நடத்துகிறது, திருவான்மியூர் தியாகராஜா தியேட்டரை நவீனப்படுத்தி எஸ்.2 தியாகராஜா என்ற இரண்டு திரையரங்குகளை நடத்துகிறது.
இப்போது புதிதாக உருவாகியுள்ள சில மால்களிலும், கட்டப்பட்டு வரும் சில மால்களிலும் சுமார் 22 தியேட்டர்களை கையகப்படுத்த முடிவு செய்திருக்கிறது. நடிகர் சங்க வளாகத்தில் 8 தியேட்டர்களை கட்ட முடிவு செய்திருக்கிறது. இதுதவிர அசோக் பில்லர் உதயம் தியேட்டர் வளாகத்தை 100 கோடிக்கு வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது. இதில் உதயம், மினி உதயம், சூரியன், சந்திரன் என நான்கு தியேட்டர்கள் உள்ளது.
சென்னை நகரில் 100 திரையரங்குகளை நடத்துவது, தமிழ்நாடு முழுவதும் 500 திரையரங்குகளை நடத்துவது என்றும், அனைத்து திரையரங்குகளையும் சாட்டிலைட் மூலம் இணைப்பது என்றும் சத்யம் இலக்கு வைத்திருப்பதாக கூறப்படுகிறது.