ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? |
ஆந்திராவைச்சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஒருவரை காஜல்அகர்வால் காதலிப்பதாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு மீடியாக்கள் பரபரப்பு செய்தி வாசித்தன. ஆனால் இந்த செய்திக்கு காஜல்அகர்வால் தரப்பில் இருந்து நேரடியான விருப்போ, மறுப்போ வெளியாகவில்லை. அதனால் விசயம் நாளுக்குநாள் ஊதி பெருசாகி விடும் என்றுதான் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் காஜலின் நல்ல நேரம், அந்த நேரம் பார்த்து, ஹன்சிகா, சிம்புவுடனான காதலை ஓப்பனாக அறிவித்தார். அதனால் காஜலின் மீதிருந்த மீடியா கண்கள் அப்படியே ஹன்சிகா பக்கம் திரும்பின. முன்னதாக சித்தார்த்-சமந்தா காதல் கதை இன்னொரு ட்ரேக்கில் ஓடிக்கொண்டிருப்பது போல், அமலாபால் மற்றும் ஆஸ்தான டைரக்டர் விஜய்யுடனான காதல், லட்சுமிராய் தொழிலபதிருடன் கொண்டிருக்கும் ரகசிய காதல் என பல ட்ரேக்குகள் இப்போது மீடியாக்களின் கவனத்துக்கு வந்து விட்டன.
அதனால், மேற்படி ஜோடிகளின் திருமணம் நடக்குமா? இல்லை வழக்கமாக சில ஆண்டுகள் ஜாலிக்காக காதலித்து விட்டு பிரிந்து விடுவார்களா? என்பது போன்ற புலனாய்வில் சில முக்கிய மீடியாக்கள் இறங்கி விட்டன. இதனால் ஒருவழியாக காதல் கிசுகிசுவில் இருந்து தப்பிய காஜல்அகர்வால், இப்போது ஐதராபாத்துக்கு செல்வதையே தவிர்த்து வருகிறார். தமிழ்ப்படங்களில் மட்டுமே தற்போதைக்கு நடித்து வரும் அவர், மும்பையிலிருந்து நேராக சென்னைக்கு வருபவர், இங்கிருந்து அப்படியே மும்பைக்கு மீணடும் பறந்து விடுகிறாராம். இடையினில் எங்கும் அவர் லேண்டாவதில்லையாம். காதல் செய்திகளில் இருந்து முழுசுமாக எஸ்கேப்பாகத்தான் ஐதராபாத்தை இப்படி தற்காலிகமாக ஓரஙகட்டி வைத்திருப்பதாக சொல்கிறார்கள்.