பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
யோகி படத்தில் நடித்ததை நினைத்து பெருமைப்படுகிறேன் என்று நடிகை மதுமிதா கூறியுள்ளார். டைரக்டர் சுப்பிரமணியம் சிவா இயக்கத்தில் அமீர் நாயகனாக நடித்துள்ள படம் யோகி. படத்தின் நாயகியாக நடிகை மதுமிதா நடித்துள்ளார். மேக்கப் இல்லாமலும், தெலுங்கு கலந்த சொந்த குரலிலும் பேசி நடித்த மதுமிதாவுக்கு இப்படத்தின் மூலம் நல்ல பெயர் கிடைத்திருக்கிறது. அவரது நடிப்பை பலரும் பாராட்டியிருக்கிறார்களாம். அதுவும் படத்தில் டூப் போடாமல் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்ததை அனைவரும் நெகிழ்ச்சியுடன் கூறி பாராட்டி வருகிறார்களாம். இதனால் நெகிழ்ந்துபோய் இருக்கும் மதுமிதா, இனி ஒவ்வொரு கதையையும் மிக கவனத்தோடு தேர்வு செய்ய இருக்கிறாராம்.